LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இனி பொருட்கள் தரமானதாக இல்லையென்றால், விளம்பரங்களில் நடித்தவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் !!

இன்றைய நிலையில் பெரும்பாலான பொருட்கள் அதன் தரத்தை பார்த்து வாங்குவதில்லை, அந்த பொருட்களுக்காக செய்யப்படும் விளம்பரங்களை பார்த்தும், அந்த விளம்பரங்களில் நடித்தவர்கள் கூறும் வார்த்தைகளை வைத்துதான் அதிகமான வாங்கப்படுகிறது. இப்படி வாங்கும் பெரும்பாலான பொருட்கள் தரமானதாக இருப்பதில்லை என பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு செக்கப் வைக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில். அதாவது விளம்பரங்களில் வரும் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தெரிய வந்தால் அதில் நடித்தவர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமாம். 

 

தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணை முதல் தரையில் துடைக்கும் மாப்பு வரை சரியாக இல்லாவிட்டால், அதை விளம்பரம் செய்தவரையும், அதில் நடித்தவரையும் நுகர்வோர் கோர்ட்டுக்கு இழுக்க முடியுமாம். மத்திய அமைச்சர் கே.வி. தாமஸின் கீழ் இயங்கி வரும் மத்திய நுகர்வோர் கவுன்சில் இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்துள்ளது. மேலும் இதற்காக தனியாக துணைக் கமிட்டியை ஏற்படுத்தவும் அது தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தவறான பொருட்களை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரங்கள் குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டதாம். குறிப்பாக உணவுப் பொருட்கள், தலையில் பூசும் எண்ணை, சுகாதாரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 04 Feb 2014  3 Comments
Tags: விளம்பரம்   விளம்பர நடிகைகள்   விளம்பர நடிகர்கள்   விளம்பர பொருட்கள்   Misleading Advertisements   Celebrities Advertisements   Fake Advertisements  
 தொடர்புடையவை-Related Articles
இனி பொருட்கள் தரமானதாக இல்லையென்றால், விளம்பரங்களில் நடித்தவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் !! இனி பொருட்கள் தரமானதாக இல்லையென்றால், விளம்பரங்களில் நடித்தவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் !!
கருத்துகள்
07-Feb-2014 23:26:48 சிந்து said : Report Abuse
இது சரியான முடிவு.பணத்திற்காக விளம்பரங்களில் நடிபவர்களுக்கு சரியான பதிலடி.இனி தரமற்ற பொருட்களின் வரவு குறையும் என்று நம்பலாம்.தவிர தரமற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறுங்கள்.நன்றி
 
07-Feb-2014 23:26:47 சிந்து said : Report Abuse
இது சரியான முடிவு.பணத்திற்காக விளம்பரங்களில் நடிபவர்களுக்கு சரியான பதிலடி.இனி தரமற்ற பொருட்களின் வரவு குறையும் என்று நம்பலாம்.தவிர தரமற்ற பொருட்களை கொண்டு எவ்வாறு நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறுங்கள்.நன்றி
 
05-Feb-2014 00:12:08 நவீன் குமார் said : Report Abuse
இது ஒரு அற்புதமான வரவேற்க தக செய்தி..இனி மேல் விளம்பரத்தில் நடித்து பணம் சம்பாரிக்கும் கேவலமான நிலை குறையட்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.