|
|||||
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு |
|||||
![]()
மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி ஆகியோரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார். தென் மாநிலங்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும், உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மட்டும் இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.
குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்து வந்த தான் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மக்களவைத் தொகுதி மறுவரையறையும், மக்கள் தொகை மேலாண்மையும் வெவ்வேறானவை என்று கூறிய சந்திரபாபு நாயுடு, தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்யும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 07 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|