LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?

அன்பு மாணவச் செல்வங்களே நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...*

சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?

அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!

தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.*

இது போக,
அஸ்ஸாம் பல்கலைகழகம்,

சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,
பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,

பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,

காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம்,
சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என

பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.

தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது.

இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது.

Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS.

இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும்,
எம்பிஏ கோர்ஸுகளும், பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன.

இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.

இது போக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.

ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு, மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க

ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.

(cucetexam) Central University common entrance exam.

+2 முடித்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு,

கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cuet.samarth.ac.nic.in

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன.

எந்தெந்த பல்கலை கழகங்களில், என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய

அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.

பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த, கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு
011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு

அசாம் - 9476897510, 9401847943

ஆந்திரப்பிரதேசம் - 9640884806,
7598413970,

குஜராத் – 079 - 23977446,

அரியானா – 9212884894,

ஜம்மு - 8082197957, 9796665505,
8178118948,

ஜார்கண்ட் – 7070630510,

கர்நாடகா – 9972191661,
9242355484,

கேரளா - 0467 - 2309467, 0467 – 2309460,

பஞ்சாப் - 9464269330,

இராஜஸ்தான் – 7014588311,

தெற்கு பீகார் - 0631-2229514, 2229518,

தமிழ்நாடு - 04366 - 277337

எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

cucet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது.

இதைப் படித்தால் Group-1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால்

உங்களுக்கு மாதம் ரூ.5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ.20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும்,

ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.

அக்ரி(விவசாயம்) பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும்.

ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது.

இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு.

மேலும், இப் பல்கலையில் பயின்றால்,

மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...

*இந்த தகவலை படியுங்கள்....

Neet, JEE எழுதும் மாணவர்கள் மற்றும் commerce students இதை அனைவருக்கும் உங்கள் வலைதளத்தில் பகிருங்கள

by Swathi   on 19 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்! அரசுப் பள்ளிகளில் படிப்பதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் - நடத்துநர் பணி வாய்ப்பு
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.