|
|||||
எந்த கலரிலும் எழுதுவதற்கு வந்துவிட்டது புதிய பேனா !! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு !! |
|||||
![]() வண்ண கேட்ரிஜ்களைப் பயன்படுத்தி, எந்த கலரிலும் எழுதும் பேனாவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எந்த கலரிலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த கலருடைய பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பேனா மூலம் எந்த கலரில் வேண்டுமானாலும் எழுதலாம். அச்சகங்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் படி இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேனாவில் நீலம், மெஜந்தா, மஞ்சள், கறுப்பு வண்ணங்களில் தனித்தனியே மைகள் இருக்கும். அதில் சிறிய ரக எலக்ட்ரானிக் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். எந்த கலரில் எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை தேர்வு செய்வதற்கு பேனாவில் எலக்ட்ரானிக் வசதிகள் உள்ளன. அதை தேர்வு செய்ததும் சென்சார் கருவி அதற்கு தகுந்தபடி மையை கலந்து பேனாவின் முனைக்கு அனுப்பும். இதன் மூலம் எந்த கலரில் வேண்டுமானாலும் நாம் எழுதிக் கொள்ளலாம். இந்த பேனாவை வைத்து லட்சக்கணக்கான கலர்களில் கூட எழுத முடியும் என்று பேனாவை உருவாக்கி இருப்பவர்கள் கூறியுள்ளனர். |
|||||
by Swathi on 30 May 2014 1 Comments | |||||
Tags: Chameleon Pen | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|