LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- சார்லஸ் டார்வின் (Charles Darwin )

சார்லஸ் டார்வின்-பகுதி 3

 

சார்லஸ் டார்வின்-பகுதி 3  
-சூர்யா சரவணன் 
charles-darwin-3

சார்லஸ் டார்வின்-பகுதி 3  

-சூர்யா சரவணன்

 

 

  கடவுள் பற்றி ஒன்றும் தெரியாதவன் 

 

   டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையைப் பற்றிச் சிந்திக்க ஒரு விநாடியைக் கூட நான் செலவிட்டதே கிடையாது ஏனென்றால், அது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போரிடவோ நாம் இந்த உலகத்தில் தோன்றவில்லை. நாம் தோன்றியிருப்பதன் லட்சியம் நாம் வாழ வேண்டுமென்பதற்காகத் தானேயொழிய, கடவுள் வாழ வேண்டுமென்பதற்காக அல்ல. எனது பரிணாமத் தத்துவத்திற்கும் கடவுள் பிரச்சனைக்கும் சிறிது கூட சம்பந்தமில்லை.

 

  சார்லஸ் டார்வின், ‘பீகிள் கப்பல் பயணம்செய்தபோது அவருக்கு மதப்பற்று அதிகம் இருந்தது. இதனால்Êசார்லஸ் டார்வினுக்கும் மற்ற மாலுமிகளுக்கும், மதம் சம்பந்தமாக அடிக்கடி வாதங்கள் நிகழும். தனக்கு ஆதாரமாக பைபிளை எடுத்துச் சொல்வார். அதைக் கண்டு மற்ற மாலுமிகள், அவரைப் பார்த்து நகைப்பார்கள். அந்தளவுக்கு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். இருபத்தேழாவது வயதிலிருந்து ஆராய்ச்சியின் பயனாகவே  பைபிள், வேதங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களின் மீதான நம்பிக்கை அவருக்குப் போய்விட்டது. சார்லஸ் டார்வின் சுயசரிதையில், “பைபிளின் பழைய ஆகமத்தை நம்ப முடியாத மனப்பான்மை எனக்கு 1836-க்கு பிறகு ஏற்பட்டது. அப்பொழுது கிரிஸ்துவ மதத்திற்கும் பைபிளின் பழைய வேதாகமத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? என்பன போன்ற கேள்விகள் என் மனத்தே எழுந்தனஎன்று குறிப்பிட்டுள்ளார். தனது மகள் ஆனியின் இறப்பிற்கு பின் கடவுள் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. பைலிளில் சொன்ன கருத்துக்களின் மீது சார்லஸ் டார்வினுக்கு நம்பிக்கை இல்லாமலிருந்தபோதும் கடவுள் உண்மையை அவர் மறுத்ததாகத் தெரியவில்லை. தனது எழுபதாவது வயதில், நண்பருக்கு எழுதிய கடிதத்தில், “கடவுள் உண்டு என்பதை மறுக்கிற நாஸ்திகனாக நான் எப்பொழுதும் இருந்ததில்லை. அதைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் என்று என்னைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்சார்லஸ் டார்வினுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் கூட அவர் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு அவர் வரவில்லை. ஆனால் பகுத்தறிவாதிகள் சார்லஸ் டார்வினின் காலைப் பிடித்துக் கொண்டு தங்களின் பகுத்தறிவுக் கருத்துக்களை நியாயப்படுத்திவருகின்றனர்.

 

  சார்லஸ் டார்வின் கடவுள் நம்பிக்கை உடைய மற்றவர்களைப்பற்றி அவர் எப்பொழுதுமே குறைகூறியது கிடையாது. அவர்களை ஏசவும் மாட்டார். இவருடைய மனைவிக்கு கிரிஸ்துவத்தில் நம்பிக்கை அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தவறாமல் சர்ச்சுக்குச் செல்வார். சார்லஸ் டார்வின், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சர்ச் வாசல்வரை அனுப்பிவிட்டு உலாவ சென்று விடுவார்.

 

  நாளடைவில் மதம் சம்பந்தமாக நடைபெறும் தர்க்கங்களிலோ, பேச்சுக்களில் சார்லஸ் டார்வின் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்துவந்தார். கடவுள் உண்டா இல்லையா? மதங்களின் பணி என்ன என்பது பற்றி பேசுவதையும் விவாதிப்பதையும் காலவிரயம் என்று கருதினார். ஆனாலும் மத ஸ்தாபனங்களுக்கு அவ்வப்பொழுது தன்னால் முடிந்த உதவியைச் செய்தார். தென்னமெரிக்காவில் உள்ள காட்டுமிராண்டி ஜாதியினரிடம் கிரிஸ்துவ மதத்தைப் பரப்புகிற முயற்சிக்கு ஆண்டுதோறும் நன்கொடை அளித்தார். எனது கிராமத்துப் பாதிரியோடு சென்ற முப்பதுவருட காலமாக நான் நெருங்கிப் பழகி வருகிறேன். எங்களுக்குள் மதம் சம்பந்தமான கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், எங்கள் நட்பு சிறிதுகூடக் குறையவில்லைஎன்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

 

   சார்லஸ் டார்வின் ஆறடி உயரம். நோயால் பீடிக்கப்பட்டதன் காரணமாக வயது ஆக ஆக முதுகு வளைந்து கொடுத்தது. அப்படியிருந்தும் சார்லஸ் டார்வின் ஒரு கணமாவது சும்மா இருந்தது கிடையாது. நம்மில் பலர் நோய்க்கு ஆட்பட்டால் தன்னையும் நொந்து கொண்டு, தன்னை சுற்றி இருப்பவர்களையும் பலவீனப்படுத்தி விடுவார்கள். ஆராய்ச்சி காலத்தில் டார்வின் காட்டிய பொறுமையைக்கண்டு இவருடைய பிள்ளைகள் பொறுமையை இழந்துவிடுவார்கள். அவ்வளவு ஆர்வம். ஆராய்ச்சி என்று வந்துவிட்டால் ஊன், உறக்கம் எல்லாம் மறந்துவிடுவார். ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சி செய்து அதில் இருந்து குறிப்பெடுத்து புத்தகம் எழுதுவார். ஆராய்ச்சி செய்வதில் மட்டுமில்லாமல் முகத்தோற்றத்திலும் அவருடைய தாத்தா இராஸ்மஸ் டார்வினை ஒத்திருந்தார்.

 

Ê  சார்லஸ் டார்வின் எப்போதும் நீண்ட அங்கி போன்ற கருப்புநிறக் கோட்டையே அணிவது வழகம். இறுக்கமில்லாத கட்ஷூவைப் போட்டுக் கொள்வார். சாம்பல் நிறமும் நீல நிறமும் கலந்த கண்கள். ஆனால் அவருடைய கன்னங்கள் அழகிய பெண்ணின் பளிங்கு நிறக் கன்னங்களைப் போல வழவழப்புடன் இருக்கும்! நீண்ட தாடி, வழுக்கை தலை, வெட்டி ஒட்டிப் போட்ட மீசை, நெற்றியிலே வரிசையான கோடுகள் ஆனால் கண்களில் ஆழ்ந்த யோசனை, யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது தனது கௌரவம், அறிவு, அதனால் பிறர்கொடுக்கும் மாரியாதை இவற்றை எல்லாம் மறந்துவிட்டு சிறுபிள்ளைபோல் தனது கை, கால்களை ஆட்டிக் கொண்டு பேசுவார் டார்வின். Êசார்லஸ் டார்வினின் பேச்சு பேச்சு மேடை நாடகம்போல் இருகும். குறிப்பாக அறிவியல் அறிஞர்களோடு விவாதட்தில் ஈடுபட்டிருக்கும்போது அவரது  செய்கிற சைகைகள் சில சமயம் சிரிப்பை வரவழைக்கும். சில சமயம் பரிதாபமாக கூட இருக்கும். தான் ஒர் அறிஞன், மேதாவி என்ற மன நிலையுடன் இருப்பார்.

 

  சார்லஸ் டார்வின் நடக்கும்போது கையையும் காலையும் வீசி ஆட்டிக் கொண்டுதான் நடப்பார். கையிலே இரும்புப் பூண்போட்ட தடி. அதைப்பூமியின் மீது அடித்துக் கொண்டுதான் செல்வார். எவ்வளவு நோயாளியாயிருந்தபோதும்கூட வெளியிலே உலாவச் செல்வதில் தவறியதே கிடையாது. அதற்காக தன்னுடைய பண்ணையிலேயே ஒரு பாதையை அமைத்து அதில் நடந்து செல்வார். சார்லஸ் டார்வினுகு அந்த இடம் மிகவும் பிடித்தமான ஒன்று. உயரமான இடங்களில் ஏறி உட்கார்ந்து கொள்ள விருப்புவார். பொதுவாக எல்லா மனிதருக்குமே இந்த விசித்திர குணம் இருப்பது சகஜம்.

 

  இந்தக் குணம் மனிதர்களுக்கு இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஏனென்றால் மனிதன் குரங்கினுடைய உருவத் தோற்றத்திலிருந்து சிறிதே திருத்தமுற்றவனாய் காணப்படுகிறானே தவிர, அதன் பல குணங்கள் இன்னும் மனிதனிடம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பல குணங்களில் ஒன்றுதான் உயர ஏற வேண்டுமென்பதும்! பூமியின் கீழே இறங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசையைவிடப் பூமியின் மேலே ஏறிப்பார்க்க வேண்டுமென்ற ஆசைதானே மனிதர் மனத்தில் அதிகமாக இருக்கிறது? இல்லையென்றால் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவும், சந்திர, செவ்வாய் மண்டலங்களுக்குத் தாவவும் மனிதன் விரும்புவானா? டார்வினின் வீட்டிலிருந்த நாற்காலிகளெல்லாம் அளவுக்கு மீரிய உயரத்துடன் இருந்தன! இந்த உயரம் கூடப்பற்றாமல் சில சமயங்களில் பெரிய பெரிய புத்தகங்களையும் தலையணைகளையும் நாற்காலியின் மீது வாரிப் போட்டுக்கொண்டு அதன்மேல் ஏரி உட்கார்ந்து கொள்வாராம் டார்வின்! உயரமான இடத்தில் உட்கார்ந்தால்தான் அவருக்கு நன்றாக சிந்திக்கவரும்.

 

Ê  சார்லஸ் டார்வின் எப்போதும் மந்தமாகவும் நோயாளியைப் போலத் தோற்றமளிப்பார். இடையறாரத  சிந்தனையால்  அவரது உடல் உருக்குலைந்தது. ஏதாவதொரு விஷயத்தை மற்றவருக்கு விளக்கி வைக்க வேண்டுமென்றால், பேச்சைவிட அதிகமாக கைஜாடை செய்வார். ஆனால் அவரின் குறைவான பேச்சில், நிறைய ஹாஸ்யமும், உபமான உபமேயங்களும் இருக்கும். வாய்விட்டு சத்தம் போட்டுப் படிப்பார். அப்படி படிக்கும் புத்தகங்களில் இருக்கும் முக்கியமான விஷயங்களை அவ்வப்பக்கத்தின் ஓரத்தில் பென்சிலால் கோடிட்டு வைப்பார். தூக்கம் வராவிட்டால் விளங்கிக்கொள்ள முடியாத கரடுமுரடான நடையில் எழுதப்பட்டிருக்கும் தத்துவப் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு தப்புந்தவறுமாக வாய்விட்டு படிப்பார். சப்தம் போட்டுப்படிப்பதற்கு கூச்சப்படமாட்டார். அடுத்தவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எந்த  முடிவுவெடுக மாட்டார். பிறர் கூறிய கருத்துக்களை தீவிரமாக ஆலோசனை செய்த பின்பே  முடிவெடுப்பார். அனைத்து விஷயங்களிலும் இப் பழக்கம் சார்லஸ் டார்வினுக்கு உண்டு.

 

Ê  சார்லஸ் டார்வினுக்கு ஒரு காது செவிடு! எனினும், ஒரு காதின் புலனுகர்ச்சியைக் கொண்டே எந்த ஒரு சிறு ஒலியையும் மிகநுட்பமாகக்கேட்டு அறிந்துகொள்ளும் சக்தி பெற்றவர் டார்வின். மாணவராயிருந்தபோது அவாரின் சகமாணவர்கள், பியானோ வாசித்து அவரின் செவிப்புலனை சோதிப்பது வழக்கம். அவர்களின் பாரிசோதனையில் டார்வின் ஒருநாளும் தோல்வியடைந்ததே கிடையாதாம். அந்த மாணவக் கூட்டத்தில் முழுச் செவிடனான ஒரு மாணவனும் இருந்தான். அவனைப் பார்த்து தம் காது ஒன்று செவிடாயிருப்பது ஒன்றும் பிழையில்லை என்று தமக்குத்தாமே சமாதானம் செய்து கொள்வார். பள்ளிப் பருவத்தில் தன்னுடைய தாத்தாவைப் போலவே கவிதை எழுத முயன்று, பின்னர் அந்த முயற்சியை கைவிட்டார் டார்வின். டார்வினுக்கு, மகாகவி மில்டன் எழுதிய இழந்த சொர்க்கம்என்ற காவியம் மிகவும் பிடிக்கும். மற்றும் லால்டர் ஸ்காட், ஜேன் ஆஸ்டன், மிஸஸ் கேஸ்கல் ஆகியோருடைய புத்தகங்களைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர். ஒரு சமயம் ஹோமாரின் இலியட்டைமொழி பெயர்க்க முயன்றுள்ளார்.

 

Ê  சார்லஸ் டார்வின் எந்த ஒரு மொழியிலும் முழுப் புலமை பெற்றிருக்கவில்லை. ஆனால் இவரின் ஆங்கில நடை தெளிவாகவும் கவர்ச்சியுடையதாகவும் இருந்தது. ‘‘டார்வினின் பேச்சைவிட அவரின் எழுத்தே மிகவும் சுவையானதுஎன்று பேராசிரியர் ஹென்ஸ்லோ ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சார்லஸ் டார்வினுடைய கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். பிற்காலத்தில் இவரின் அச்சாகாத கையெழுத்துப் பிரதிகளைப் பதிப்பிக்க முயன்ற அவர் மகனான பிரான்சிஸ் டார்வின், தமது தந்தையின் கையெழுத்தைப் புரிந்துக்கொள்ள முடியாமல்  மிகவும் சிரமப்பட்டார். அவர் பதிப்பித்த புத்தகங்களின் பல பக்கங்களில் ஏகப்பட்ட கேள்விக்குறிகள் இருக்கும். இந்தக் கேள்விக் குறிகளிருக்கும் இடமெல்லாம் அவருக்குப் புரியாத வார்த்தைகள் என்று பொருள்.

 

    சார்லஸ் டார்வின், அதிகாலையில் எழுந்துவிடும் பழகம் உடையவர். சிறிது நேரம் உலவிவிட்டு வந்து குளிப்பார். சரியாய் ஏழேமுக்கால் மணிக்குத் தனியாகக் காலை உணவு உண்டதும் உடனே வேலையில் இறங்கிவிடுவார். சரியாக ஒன்பதரை மணிவரை ஆராய்ச்சிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இந்த ஒன்பதரை மணிநேரம்தான் இவருக்கு மிகவும் முக்கியமான நேரம். பிறகு தன்னுடைய அறைக்கு வந்து தனக்கு வந்திருக்கும் தபால்களைப் பிரித்து உரத்துப் படிப்பார். எதையுமே தானாக படிப்பது கிடையாது. பிறர் படிக்க அதைக் கேட்டுக் கொண்டிருப்பதிலேதான் இவருக்கு விருப்பம் உடையவர்.

 

          பிறகு ஏதேனும் ஒரு நாவலை எடுத்து வாசிக்கச் சொல்வார். இதற்குள் மணி பத்தரை ஆகிவிடும். மறுபடியும் தன் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டேகால் மணிவரை அங்கிருந்துவிட்டு வெளியே வந்ததும், “இன்றைய வேலையை திருப்திகரமாக செய்தேன்என்று பெருமூச்சு விடுவார். பிறகு தோட்டத்திலேதான் இவரது வாசமெல்லாம். கூடவே இவர் வளர்கும் நாய் தொடர்ந்து சென்றுக்கொண்டிருக்கும். தோட்டத்திலே செல்லும்போதுகூட இவருக்கு ஆராய்ச்சிதான் குறிக்கோளாக இருக்கும். தான் முந்தைய நாள் பார்த்துவிட்டுப்போன செடி, கொடிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றின் அருகிலும் சென்று கூர்ந்து கவனிப்பார். பலநிறப் பூக்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்து அதன் அருகே பலமணிநேரம் மௌனமாக நிற்ப்பார். உலகில் இந்தப் பூக்கள் நமக்கு செய்கின்ற நன்மைக்கு அவற்றை ஆதரவோடு பார்ப்பதைத்தவிற கூடவா செய்யக்கூடாது?” என்று தன்னுடைய நண்பர்களிடம் டார்வின் கேட்பாராம்.

 

          செடி, கொடிகளை மனிதர்களாக பாவித்து அவற்றுடன் பேசிவார் டார்வின். என்னடா போக்கிரிப்பயலே, இன்று ஏன் இப்படி சுருங்கிக்கொண்டு விட்டாய்?” என்று ஓர் இலையைப் பார்த்துக் கேட்பார் டார்வின். இந்த அசட்டுப்பிள்ளைகள் நான் எதைச் செய்ய வேண்டாமென்று சொல்கிறேனோ, அதைத்தான் செய்துக்கொண்டு வருகின்றனஎன்று கோணலாக வளர்ந்துக் கொண்டிருக்கும் செடிகளைப் பார்த்து கோவித்துகொள்வார். இதே தோரணையில்தான் படர்ந்து விரைவிலே மறையும் பனியையும், ஊர்ந்து செல்கிற புழுக்களையும் பார்த்துப்பேசுவார். சில சமயங்களில் தனது ஆராய்ச்சி முற்றுப் பெறாதபோது அதைப் பார்த்துக் கெஞ்சுவார்.  இப்படிப் பகல் வேளைகளில் சுற்றிவந்த பின்புதான் மதிய உணவு உட்கொள்வார். மிகவும் குறைவாகவே சாப்பிடுவார். ஆனால் இனிப்பு வகைகளில் ஆர்வம் அதிகம். சாப்பாட்டு நேரங்களில் தன் குழந்தைகளைக்கூட வைத்துக்கொண்டு மதுவால் உண்டாகும் தீமைகளைப் பற்றி போதனை செய்வார். சாப்பிட்டதும் சோபாவின்மீது சாய்ந்துக்கொண்டு பத்திரிகைகளைப் படிப்பார். இதை மட்டும்தான் தானே படித்துக் கொள்வார். உலகத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பார். பின்னர் காலையில் வந்த கடிதங்களுக்குப் பதில் எழுதுவார். உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இவருக்குப் பல நபர்களிடமிருந்து கடிதங்கள் வரும். தன்னை வாழ்த்தியும் வசைபாடியும் வரும் அனைத்துகடிதங்களுகும் பதில் எழுதுவார். தன் கடிதங்களை மற்றவர்கள் கவனமாகப் படிக்கவேண்டுமென்ற கருத்தோடு முக்கியமான வாக்கியங்களுக்கு கீழே அடிக்கோடிடுவார். பலருக்கு ஒரே மாதிரியான பதில் எழுத வேண்டியிருப்பதை முன்னிட்டு சில கடித மாதிரிகளை அச்சடித்து வைத்துக் கொள்வார் சார்லஸ் டார்வின்.

 

   ஒருமுறை ஓர் இளைஞன், எழுதிய கடிதத்தில், தான் சிறிதுகூட ஓய்வின்றி வேலை செய்கிறவனென்றும், டார்வினுடைய பரிணாமக் கொள்கைகளைப் படிக்க தனகு போதிய நேரம் இல்லை என்றும் அதனால் அந்தத் தத்துவத்தை சுருக்கமாக ஒரு கடிதத்தில் விளக்கி எழுதும்படி கேட்டுக் கொண்டிருந்தான். உண்மையில் ஒரு சங்கத்தில் பேசுவதற்கு விஷயம் அகப்படவில்லை என்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியை செய்தான் அந்த இளைஞன். அவனுக்குக்கூட டார்வின் மரியாதையாகப் பதில் எழுதி அனுப்பினார். டார்வின் மிகவும் பொறுமையுடையவர். இவருடைய கொள்கைகளைத் தாக்கிப் பல கடிதங்கள் வரும், பத்திரிகைகளில் பல கேலிச் சித்திரங்கள் வெளியாகும். ஒரு சமயம், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற இவருடைய சித்தாந்தத்தைத்தாக்கி பத்திரிகையில் கேலிச்சித்திரம் ஒன்று வெளியாயிருந்தது. அது கொரில்லா குரங்கின் உடலும் டார்வினின் தலையுமுடைய ஓர் உருவப்படமாக வரையப்பட்டிருந்தது. ஒரு நண்பன், அதை டார்வினுக்கு கொண்டு வந்துக் காட்டினான். டார்வின், அந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “தலை நன்றாகத்தான் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் உடல்தான் நன்றாக இல்லை. மார்பு அகலப்படுத்தப்பட்டுவிட்டது. அப்படி இருக்க முடியாதுஎன்று நிதானமாகக் கூறினார். தன்னை தாக்கியவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. எந்தவிதமான பொதுக் கூட்டங்களிலும் சார்லஸ் டார்வின் கலந்து கொள்ளமாட்டார்.

 

   கள் கூட்டம் என்றாலே அவருக்கு அலர்ஜி. மூட நம்பிக்கைகளால் மூளை மழுங்கிப்போன மதவாதிகள், அவரைக் கண்டகண்ட இடங்கில் மடக்கி நிறுத்தி வைத்துக் கொண்டு முட்டாள்தனமான கேள்வி கேட்டுச் சங்கடம் கொடுத்து வந்தனர். அதற்காகவே அவர் பெரும்பாலும் ஜனங்களின் மத்தியில் போக விரும்புவதில்லை. எனினும் கடிதம் மூலம் வரும் எத்தகைய கேள்விகளுக்கும் தகுந்தபடி உடனுக்குடன் பதில் எழுதி அனுப்பிவைப்பார். உலகத்தின் பல அறிஞர்களும் தாங்கள் எழுதிய நூல்களையும், துண்டுப் பிரசுரங்களையும் மதிப்புரைக்கு டார்வினுக்கு அனுப்புவார்கள். அனைவருக்கும் வந்தனம் சொல்லி பதில் எழுதுவார். ஆனால் துண்டுப் பிரசுரங்களைக் கண்டால் இவருக்கு வெறுப்பு. கட்டுக் கட்டாக இப்படி அனுப்பி என்னுடைய காலத்தை வீணாக்குகிறார்கள்என்று முணுமுணுப்பார் சார்லஸ்டார்வின். ஆராய்ச்சியைப் பாராட்டி வரும் கடிதங்கள் டார்வினுக்கு அதிக சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தருபவை. ஏனென்றால் தன்னைப் பற்றியே மிகவும் தாழ்வாக நினைத்த அவருக்கு, மற்றவர்கள் ஆராய்ச்சியைப் பாராட்டும் கடிதங்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தும். காகித விஷயத்தில் மிகவும் சிக்கனம் உடையவர். எந்தத் துண்டுக் காகிதத்தையும் கீழே எரியமாட்டார்.

 

   ஒரு பக்கம் எழுதிய கையெழுத்துப் பிரதிகளின் மறு பக்கத்திலும் எழுதி உபயோகப் படுத்துவார். மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காகவாவது இந்தக் காகிதம் உபயோகப்படும்என்று வேடிக்கையாக கூறுவார். பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். தான் செய்யும் செலவுகள் குறித்து கணக்கு வைத்துகொள்வார். வியாபாரியைப்போல் வருட முடிவில், இந்த வருடத்தில் வரவு இவ்வளவு, செலவு இவ்வளவு என்று புள்ளி விவரத்துடன் தன் பிள்ளைகளுக்கு காட்டுவார். தாம் எழுதிய புத்தகங்களின் வாயிலாக வரும் பணத்தை ஒரு புனிதப் பொருளாகவே மதித்து பெருமை அடைவார். பணம் பெற்றாலும், பணம் கொடுத்தாலும் அதை உடனே கணக்குப் புத்தகத்திலே எழுதி வைத்தன்ப்பின்புதான் அடுத்தவேலைக்குப்போவார்.

 

    மாலையில் கடிதங்கள் முதலியன எழுதி முடித்த பிறகு, தன் படுக்கையறைக்கு சென்று ஒரு சோபாவில் சாய்ந்தபடி சிகரெட் பிடிப்பார் இவர். அப்பொழுது யாராவது ஒருவர், விஞ்ஞானம் சம்பந்தப்படாத ஏதேனும் ஒரு கதைப் புத்தகத்தையோ அல்லது பயண வரலாற்றையோ படிக்க, அதைக் கண்களை மூடியவண்ணம் கேட்பார். ஓய்வு கொள்ளும் வேளையில்தான் இவர் சிகரெட் பிடிப்பது வழக்கம். ஆராய்ச்சி செய்யும் நேரங்களில் அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக் கொள்வார். இவருக்காக வெள்ளிப்பொடி டப்பி ஒன்றை இவரது மாமியார் பரிசளித்திருந்தார். ஆனால் வெளியிலே போகும்போது இதைக் கையிலேயெடுத்துச் செல்ல மாட்டார். ஏனென்றால் இது கையிலிருந்தால் அடிக்கடி பொடி போடத் தூண்டுவதாகக் கூறுவார்.

 

ஒரு சமயம் ஒரு மாத காலம் வரை பொடி போடாமல் பிடிவாதமாயிருந்தார். அப்பொழுது நான் எப்படி இருந்தேன் தெரியுமா? சோம்பேரியாகவும், முட்டாளாகவும், பைத்தியக்காரனாகவும் இருந்தேன்என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மறுபடியும் பழைய வழக்கத்தை தொடர்ந்தார். மாலை நான்கு மணியிலிருந்து நாலரை மணி வரையில் தோட்டத்தில் உலவிவிட்டு மீண்டும் ஆராய்ச்சி அறைக்குள் புகுந்துவிடுவார் சார்லஸ் டார்வின். ஐந்தரை அல்லது ஆறு மணிவரை ஆராய்ச்சியில் ஆழ்ந்துவிட்டு பிறகு சாப்பாடு, தூக்கம். அநேகமாக இரவு பத்து மணிக்கு மேல்தான் தூங்கச்செல்வார்.

 

சார்லஸ் டார்வினுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் குழந்தைகள் விளையாடுவதையும், மழலைச் சொற்களில் பேசுவதையும் கூர்ந்து ஆர்வமுடன் கவனிப்பார். அந்த மழலைச் சொற்களை குறித்துவைத்துகொள்வார். ஏதேனும் ஒரு குழந்தை அழுதால் அதற்காகப் பெரிதும் மனம் வருந்துவார்.    பிற்காலத்திலேகூட வயது வந்த தன் பிள்ளை ஒருவனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “நீங்கள் சிறு பிள்ளைகளாயிருந்தபோது உங்களோடு விளையாடி மகிழ்ச்சி கொள்வேன். அந்தக் காலம் மீண்டும் வருமா? என்று இப்பொழுது ஏங்குகிறேன்”.

 

           மகள் ஆனி இறந்தபோது சார்லஸ் டார்வின் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், “எங்கள் வீட்டின் மகிழ்ச்சிப் பொருளை இழந்துவிட்டோம். முதுமையின் ஆறுதல் போய்விட்டது. ஆனியை நாங்கள் எவ்வளவு மனப்பூர்வமாக நேசித்தோம் என்பதை அவள் அறிந்தே இருந்தாள். ஐயோ, இப்பொழுதுகூட  ஆனியின் புன்சிரிப்பு, முகத்தை எவ்வளவு இன்பகரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவளது ஆத்மா சாந்தியடைக!

 

Ê  சார்லஸ் டார்வின், பெண்களிடமும் மரியாதையாக நடந்துகொள்வார். தமது மனைவியின் மீது எல்லையற்ற அன்புவைத்திருந்தார் மனைவிகு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் சலிப்பேற்படும் போதெல்லாம், தம் மனைவியிடம் சென்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டும் அவளுடன் சீட்டாடிக் கொண்டும் இருப்பார். சார்லஸ் டார்வினுக்கு தன்னுடைய தங்கை காத்தாரின் என்பவரிடமும் அதிகமான பாசம் இருந்தது. தம் குடும்பத்தாரிடமும் மிகுந்த கரிசனமும், அன்பும் கொண்டிருந்தார் சார்லஸ் டார்வின். நண்பர்களின் நட்பை விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக மதித்தார். இங்ஙனம் தன் குழந்தைகளை அன்பாக வளர்த்த பொழுதிலும், அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்பிப்பதில் மிகவும் கண்டிப்பாயிருந்தார் டார்வின். ஒரு நாள், இவருடைய மூத்த மகன் ஒரு சோபா மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது டார்வின் உள்ளே வந்து பார்த்தார். அடே, ஒழுங்கு தவறி நடக்கிறாயே, அறையைவிட்டு வெளியே போஎன்று ஆத்திரமின்றி ஆனால் கண்டிப்பாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை அவருடைய மூத்த மகன் பெரியவன் ஆன பிறகுகூட சிறிதும் மறக்கவே இல்லை. தன்னுடைய குழந்தைகள்தானே என்று அலட்சியமாக அவர்களை பேசமாட்டார் சார்லின் டார்வின். குழந்தைகளிடம் அன்பாக அழைத்து மரியாதையாக சொல்வார். நட்பை விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக கருதினார்.

 

          Êசார்லஸ் டார்வின், நண்பர்களையோ உறவினர்களையோ பார்ப்பதற்கு வெளியிடங்களுக்கு அதிகம் செல்லமாட்டார். அப்படிச் சென்றாலும் வீட்டின் ஞாபகமே அதிகமாக இருக்கும். ஆனால் அவர் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்களை எந்த வகையில் திருப்தி செய்வது என்பதில் அதிக கவனம் செலுத்துவார் அவர். ஞாயிற்றுக்கிழமை வந்தால் வீட்டில் ஒரே கும்பல்தான். அந்நிய நாடுகளிலிருந்து பலர் வந்து போவார்கள். பாஷை தெரியாதவரும் டார்வினை பார்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வருவர். அவர்கள் அனைவரையும் தானே நேரில் முகமன் கூறி வரவேற்று உபசரிப்பார். இவருடைய அடக்கம், விருந்தினருக்கு சில சமயங்களில் தொந்தரவாகக்கூட இருக்கும். அவர்களுடன் பேசுகையில், “நான் சொல்வது என்னவென்றால்என்பது போன்ற வாக்கியங்களை அடிக்கடி பயன்படுத்துவார்.

 

          Êசார்லஸ் டார்வின் வசித்த டௌன் கிராமத்து மக்களிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி அனைவரிடமும் நெருங்கிப் பழகுவார். கிராம மகளும் எவ்வித சச்சரவின்றி அனைவரும் அன்புடன் பழக வேண்டுமென்று அடிக்கடி சொல்வார். மேற்படி கிராமத்தில் சார்லஸ் டார்வின் குடியேறியதும் கிராம மகளின் நன்மையை முன்னிட்டு நண்பர்கள் சங்கம்என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். அதற்கு முப்பது வருட காலம் பொருளாளராக இருந்து சங்கத்தை நடத்தினார். இது தவிற அதே கிராமத்திலேயே இருந்த மற்றொரு சங்கத்திற்கும் பொருளாளராகவும் வேலை பார்த்தார். மற்றும் அந்தப் பகுதியின் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் இருந்தார்.

 

   சார்லஸ் டார்வின். மது, விபச்சாரம் போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்த இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் அந்த பழக்க வழக்கங்களை அறவே வெறுத்தார். சார்லஸ் டார்வின் தம்மைக் காணவரும் மாணவர்களுக்கு முதல் பாடமாகக் குடிக்க வேண்டாம்!என்றுதான் உபதேசித்து அனுப்புவார். ஒரு சமயம் சார்லஸ் டார்வின் மகன் பிரான்சிஸ் டார்வின், தந்தையைப் பார்த்து, “அப்பா! நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூடக் குடித்ததே கிடையாதா?” என்று கேட்டார். அதற்கு சார்லஸ் டார்வின், “மகனே! என் வாழ்நாளில் நான் ஒரே ஒரு முறை குடித்திருக்கிறேன். அந்த மானக்கேடான செய்தியை இப்போது நினைத்தால்கூட என் மனம் வேதனையடைகிறதுஎன்று கூறினார்.

 

    தினமும் இத்தனை மணிநேரம் தான் ஆராய்ச்சியிலீடுபட வேண்டுமென்று ஒரு வரையறை செய்து கொண்டு, ஆராய்ச்சிக்கு செலவிட்டார் சார்லஸ் டார்வின். மனிதனின் கவனத்திலிருந்து மிக எளிதில் நழுவிவிடக் கூடிய சாதாரணப் பொருட்களை நான் ரொம்பவும் கூர்ந்து கவனித்து வந்தேன். அதுதான் இந்தப் பரிணாமத் தத்துவ ஆராய்ச்சியில் எனக்கு வெற்றியைத் தேடித்தந்ததுஎன்று கூறியுள்ளார். சார்லஸ் டார்வினுக்கு சுபமான முடிவுகொண்ட நாவல்கள் படிப்பதில் தான் ஆர்வம் அதிகம். கிங்லியர் போன்ற அவல சுவையான நாவல்கள், நாடகங்கள், கதைகள் அவருகுப்பிடிகாது. மனிதனுக்கு அவல உணர்ச்சி அதிகமாக ஏற்பட்டால் அஃது அவன் ஆயுளைக் குறைக்கிறது!என்பது அவரது கருத்து.

அதனால் சுபமுடிவான கதைகளை எழுதும் கதாசிரியர்களைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்என்று சார்லஸ் டார்வின் கூறுவதுண்டு.

 

Êசார்லஸ் டார்வினுக்கு வண்டுகளைப் பிடிக்கும் பழக்கம் அதிகமல்லவா? ஒருநாள் அவருக்கு ஒரு விசித்திரமான வண்டு கிடைத்தது. அந்த வண்டை அப்படியே சித்திரமாக வரைந்து பிரிட்டீஷ் பூச்சிகளின் சித்திரங்கள் என்ற பத்திரிகைக்கு அனுப்பினார். அந்தப்படம் உடனே அப்பத்திரிகையில் பிரசுரமாகியது. படத்தின் கீழ் இது சார்லஸ் டார்வினால் கண்டெடுத்து வரையப்பட்ட வண்டுஎன்ற வார்த்தைகளும் வெளியாகியிருந்தன. அதைக் கண்ட சார்லஸ் டார்வினுக்கு மட்டற்ற பெரும் மகிழ்ச்சி. ஒரு கவிஞன் தன் முதல் கவிதையை முதல் முதலாக அச்சில் பார்க்கும்போது எத்தகைய ஆனந்தம் கொள்வானோ நான் அதைவிடப் பன்மடங்கு ஆனந்தம் கொண்டேன்’’ என்று தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

 

          Êசார்லஸ் டார்வினுக்கு நினைவாற்றல் அதிகம். எந்தவொரு சிறு விஷயத்தையும் அவர் எந்நாளும் மறந்ததே கிடையாது. Êசார்லஸ் டார்வினின் நற்குணங்களையும் ஒழுக்க செயல்களையும் ஆராயும் திறனையும் இவ்வுலகம் அறிந்து அவரை பின்பற்ற வேண்டும் என்பதற்காக, ஒரு ஜெர்மன் பேராசிரியர் டார்வினைச் சந்தித்து, அவரின் சுயசரிதத்தைக் கண்டிப்பாக எழுத வேண்டுமென வற்புறுத்தினார். அதன்படி  சார்லஸ் டார்வின், தனது சுயசரிதத்தை எழுதினார்.

 

 1882ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆ-ம் தேதி பரிமாணத்தின் தந்தை சார்லஸ் டார்வின் இறந்தார். விஞ்ஞான உலகமே துக்கக் கடலில் ஆழ்ந்தது. அவருடைய ஆராய்ச்சியின் பயணாக சார்லஸ் டார்வின் இன்னும் நம்மிடையே வாழ்கிறார்.  

 

 

            பரிணாம வளர்ச்சி

       

ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலின் குணாதிசயங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். 

 

  சுமார் இரண்டாயிரம் லட்ச வருஷங்களுக்கு முன்னால், வாயுவின் திரட்சியால் பல அக்கினிக் கோளங்கள் தோன்றி எல்லையற்ற பரந்த சூன்யவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. இந்த அக்கினிக் கோளங்களுக்கு ஒரு கணக்கு வரையறையே கிடையாது. இவ்வக்கினிக் கோளங்கள் ஒன்றையொன்று பார்க முடியாத தொலைதூரத்தில் தனித்தனியே பரவி நின்று சஞ்சரித்துக் கொண்டிருந்தன. இப்படி, அகண்டாகாரப் பரவெளியில் ஏகாந்தமாக நின்று சஞ்சரித்துக் கொண்டிருந்த அவ்வக்கினிக் கோளங்கள், பலகோடி வருடங்களுக்குப் பின் ஒவ்வொரு வகையான தனித்தனித் தன்மை பெற்று இயங்கின.

 

     அவ்வாறு அவை இயங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள், எண்ணற்ற அக்கினிக் கோளங்களில் ஒன்று, ஏதோ ஓர் அசம்பாவிதத்தால், நிகழ்ந்துவிட்ட ஓர் இயக்கப் பிறழ்ச்சித்தனத்தால், தன்னிலை பெயர்ந்து எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்த மற்றோர் அக்கினி கோளத்தின் அருகே பாய்ந்து சென்று மறைந்தது. அவ்விரண்டு நெருப்புக் கோளங்களும் நேரிடையாக ஒன்றையொன்று மோதிக் கொள்ளவில்லை என்றாலும், தன்னிலை பெயர்ந்து தரிக்கெட்டுச் சரிந்து பாய்ந்து சென்ற கோளத்தின் வேக அதிர்ச்சியை, நிலை பெயராது நின்று இயங்கிக் கொண்டிருந்த கோளம் தாங்கிக் கொள்ள இயலாமல் சிறிது சிதைவுற்றது. அவ்வாறு சிதைவுற்ற கோளத்தின் பெயர்தான் சூரியன்.

 

சூரிய கோளத்தின் சிதைவால் உதிர்ந்து தெரித்த துண்டங்கள் சூன்ய வெளியின் நாலாபுறமும் விர்ரென்று பாய்ந்து சென்றன. அப்படி அவை பாய்ந்து செல்லும்போது திடீரென ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆமாம். அந்தச் சின்னஞ்சிறுஅக்கினித் துண்டங்கள், ஏதோ ஒரு கவர்ச்சி சக்தியால் தாங்கப்பெற்று, அவ்விடங்களில், அவை அப்படியப்படியே நின்றுகொண்டன. சூரிய கோளத்தின் கவர்ச்சி சக்தியே சிதறிப்போன அந்தச் சிறுசிறு அக்கினித் துண்டங்களை அப்படி ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நிறுத்தி இழுத்துப் பிடித்துக்கொண்டது. அது மட்டுமல்லாமல் தன்னிலிருந்து சிதறிச்சென்ற அந்த அக்கினித் துகள்கள் எவ்வளவு தூரத்திற்கப்பால் போய்த் தன்னால் நிறுத்தப்பட்டதோ, அதே தொலைவில் அவற்றை அப்படியப்படியே நிற்கச்செய்து, எப்படி தான் சூன்யவெளியில் தன்னைத்தானே சுழற்றிக் கொண்டிருக்கிறதோ அதேபோல் அந்த நெருப்புத் துண்டங்கள் தங்களைத் தாங்களே சுழற்றிக்கொண்டு, பின்னர் அதே சுழற்சியோடு தன்னையும் சுற்றி வரும்படி செய்துகொண்டது, சூரியன் என்ற அந்த அக்கினிக் கோளம். இப்படி, ஒரு மாபெரும் நெருப்புக் கோளத்தை மையமாகக் கொண்டு அதிலிருந்து சிதறிய சின்னஞ்சிறு அக்கினிப் பிண்டங்கள், ஒழுங்கான ஒரு குடும்பம் போலமைந்து, நிலையான ஒரு நியதியுடன் இயங்க ஆரம்பித்தன. இந்தக் குடும்பத்தின் பெயர் ஆங்கிலத்தில் நெபுலாஎன்பதாகும்.

 

இப்படி சூரியனிலிருந்து தெரித்துச் சிதறிய சிதர்களின் எண்ணிக்கை சுமார் எழுநூறு என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சிதர்கள் அனைத்தும் சூரிய கோளத்தின் கவர்ச்சிச் சக்தியால் ஒவ்வோரிடத்தில் தங்கி நின்று இயங்க ஆரம்பித்தன. இவ்வாறு, சூரியனைத் தலைமையாகக் கொண்டு அதைச் சுற்றிச்சுற்றித் தாங்களும் சுழன்றுகொண்டு வரும் அந்தக் கிரகங்களுள் ஒன்பது கிரகங்களே தூரதாரிசினிக் கருவியின் மூலம் பார்க்கக்கூடிய பருமனுடனும், தொலைவிலும் சஞ்சரிக்கின்றன. பாக்கியுள்ள ஏனைய கிரகங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

ஒன்பது கிரகங்கள்: 

&&&&&&&&&&&&&&&&&&&&

 

    எர்த் எனும் பூமிக்கிரகம், வீனஸ் எனும் சுக்கிரன், யுரேனஸ், ஜீபிடர் எனும் வியாழன், சாட்டர்ன் எனும் சனி, நெப்டியூன் எனும் பிரமந்ததன், மெர்க்குரி எனும் புதன், மார்ஸ் எனும் செவ்வாய்,

புளுடோ எனும் காலன். 1930ஆ-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒன்பது கிரகங்களில் ஒன்றான பூமி என்னும் கிரகம், சூரிய கோளத்திற்குச் சுமார் எழுபத்து மூன்று லட்சம் மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு, ஏனைய கிரகங்களைப்போலவே இயங்கிக் கொண்டு வந்தது. நெருப்புப் பிண்டங்களான இந்த கிரகங்களைப் போலவே இன்னொரு கிரகமும் சூரியனின் கவர்ச்சி சக்தியால் இயங்கிக் கொண்டு வந்தது. ஆனால் அந்தக் கிரகத்திற்கும் பிற கிரகங்களுக்கும் ஒரு விஷயத்தில் மட்டும் பலத்த வேறுபாடி இருந்தது. அதாவது மற்ற கிரகங்களைப்போல இந்தக் கிரகம் தீயுருண்டையாக இருக்கவில்லை. இது எந்தவித உயிர்த்தன்மையுமின்ரி ஜடம் போல குளிர்ச்சியுடன் தான் இருந்தது. இந்தக் கிரகத்தின் பெயர்தான் சந்திரன்.

 

ஏனைய கிரகங்கள் தங்கி நின்ற இடங்களைக் காட்டிலும், பூமிக்கிரகம் தங்கிநின்ற வாயுவெளி சிறிதே வேறுபாடுடையதாயிருந்ததால் அதன் தண்ணென்ற ஸ்பரிசத் தன்மை நெருப்புக் கோளமாயிருந்த பூமிக் கிரகத்தை நாளாவட்டத்தில் சிறிது சிறிதாக ஆறிக் குளிர்ச்சியடையச் செய்தது. இப்படி இந்தக் கோளம் குளிரக் குளிர அதன் சுற்று வட்டமும் பருமனும் சுருங்கிக் கனத்து இறுக ஆரம்பித்தது. இந்த நிலையை அது அடைவதற்கு எத்தனை எத்தனையோ லட்ச வருடங்கள் பிடித்தன. இன்றுள்ள பூமியினுடையவும், சூரியனுடையவும் சுழற்சி வேகத்தைவிட பலமடங்கு வேகமுடையனவாய் அப்போது இவை சுற்றிக் கொண்டிருந்தன. காரணம் இந்தக் கிரகங்கள் அப்போது தமது சக்தியை வேறெதற்கும் செலவிட வேண்டிய நிர்ப்பந்தமும் தேவையுமில்லாதிருந்ததால்தான் அப்படி இளமை முறுக்குடனும், வளர்ச்சி வெறியுடனும் சுற்றிக்கொண்டிருந்தன.

 

 குளிர்ச்சியடைந்த பூமி, கோளத்தின் மேற்பரப்பே முதலில் குளிர ஆரம்பித்தது. அதன் உட்புறத்தில் நெருப்புக் குழம்பு எப்போதும் போலக் கொதித்துக் குமுறிக் கொண்டுதானிருந்தது. இந்த அக்கினிக் குழம்பு அவ்வப்போது பூமி கோளத்தின் குளிர்ச்சியால் இறுகி வரும் மேற்பரப்பை பிளந்து தகர்த்துக்கொண்டு குபீர் குபீரெனப் பீரிட்டு மேலெழும்பி மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கிலேயே விழுந்து அழுந்திக்கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சி, பூமிக்கிரகத்தில் நீண்டகாலம் நடைபெற்றுக்கொண்டு வந்தது. இதனால் நெருப்புக் குழம்பிலிருந்து வீசும் கந்தக, ஆவி, காற்றுடன் சம்பந்தப்பட்டு ஒரு புதிய ரூபம் கொண்டது. அந்தப் புதிய ரூபத்தின் பெயர் தண்ணீர். அந்த நெருப்புக் குழம்பின் சீறலால் இன்னொரு அதிசயமும் இப்பூமிக்கோளத்தில் நிகழ்ந்தது. அதாவது பூமிக்கிரகத்தின் கர்ப்பத்தில் கொதித்துக் கொண்டிருந்த நெருப்புக்குழம்பு அவ்வப்போது மேலெழும்பித் தெரிக்கும் போதெல்லாம் அந்தக் குழம்புடன், பூமியின் குளிர்ந்த மேற்பரப்பிலுள்ள கரிப்பொருட்களும் ஒன்று சேர்ந்து, இறுகி, பெரிய பெரிய கற்பாறைகளும் உலோக தாதுப்பொருட்களும் உண்டானது.

 

 உயிர்த்தாது 

 

 

 இப்படி சில லட்ச வருடங்கள் உருண்டோடின. பூமிகோளத்தின் மேலிருந்து உள்ளளவில் கால் பங்கு வரை நன்கு குளிர்ந்துவிட்டது. அப்போது இந்தப் பூமி முக்கால் பங்கு நீரினாலும் கால் பங்கு கற்பாறைகளாலும் மூடி பரப்பப்பட்டிருந்தது. இவை தவிர, இந்தப் பூமி கோளத்தில் வேறெந்தவிதமான பொருட்களும் இல்லாமல் அது நிர்வாணத் தன்மையுடன் சூன்யமாய் விளங்கிக் கொண்டிருந்தது. இது நடந்து ஐம்பது லட்ச வருடங்களுக்குப் பின்னால் வாயுவின் மோதலாலும், பூமியின் கர்ப்பத்திலிருக்கும் நெருப்புக் குழம்பின் சீறலாலும், கற்பாறைகள் வெடித்து தகர்ந்து பொடிப் பொடியாகத் தெறித்துப் பரவ ஆரம்பித்தன. இந்தக் கற்பாறைகளின் துகள்களே, ஆரிய பூமிக்கிரகத்தின் மேற்பரப்பில் மண்ணாகப் படிந்து பதிய ஆரம்பித்தன. சில ஆயிரம் வருடங்கள் சென்றபின். சூரியனுடைய ஒளிக்கிரணங்களும், உஷ்ணக் கிரணங்களும் நீரையும் மண்ணையும் நெடுங்காலம் தாக்கிவந்ததால், அவற்றுக்கு உணர்ச்சிமயமான ஒரு சக்தி உண்டானது. அந்த உணர்ச்சி சக்தியை பூமிக்கிரகத்தின் மேல் கவிந்து வியாபித்திருந்த வாயுவின் பல பேத குணங்கள், மேலும் மேலும் உறுதிபெறச் செய்து வந்தன. இப்படி, நீரும் நிலமும் சங்கமமாகும் இடங்களில் உண்டாகும் அந்த உணர்ச்சி சக்தி, ஒரு காலவரையறைக்குப்பின் சிறிது சிறிதாக வெளிக் கிளம்ப ஆரம்பித்தது. அதாவது நீராலும் நிலத்தாலும் அருவமாகத் தோன்றிய அந்த உணர்ச்சி சக்தி உருவமாய் வெளிப்பட்ட காலம் அது.

 

நீரும் நிலமும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் நீர் நிலக்கரைகளே அருவமாக இருந்த அந்தச் சக்தியை முதன் முதலில் உருவமாக வெளியே காட்டின. அவற்றின் அந்த ஆரம்ப உருவத்தின் பெயர் நீர்ப்பாசி. அதுதான் இவ்வுலகின் சகல ஜீவராசிகளுக்கெல்லாம் மூலாதாரமாய் விளங்கியது. இந்த நீர்ப்பாசி, கால இட பேதங்களாலும், பல்லாயிரக் வருடகால முனைப்பாலும் வளர்ச்சி பெற்று வழவழப்பான கற்றாழைச்சோறு போன்ற ‘‘அமீபா’’ என்னும் ஒருவகை தசை வடிவம் பெற்றது. ஓர் அங்குலத்தில் நூற்றில் ஒரு பங்கு இருக்கும் இந்த அமீபாவை குளங்குட்டைகளில் காணலாம். இதற்கு உடம்பெல்லாம் வாய் உண்டு. ஓயாமல் உருவம் மாறிக் கொண்டேயிருக்கும். அது இரண்டாகப் பிரிந்து பிரிந்து உயிரினங்களை விருத்தி செய்யக்கூடியது. இந்த தன்மை கொண்ட அமீபா, கால ஓட்டத்தினூடே இருவகையாகப்பிரிய ஆரம்பித்தது. அதாவது ஒன்று மயிர்க்கால்கள் போன்ற சிலம்பலுடன் நீரின் மேல் படரவும், இன்னொன்று வழவழப்பான சதை உருண்டைகள் போல் கரையோரங்களில் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அந்த முதல்வகைப் பிரிவிலிருந்து தாவர வர்க்கத்தின் கரு உருவானது. இரண்டாவது வகைப் பிரிவிலிருந்து ஜீவராசிகளின் மூலமான உயிர்த்தாதுதோன்றியது.

 

சில காலத்திற்குப்பின் இந்தச் சதையுருண்டைகளின் (அமீபா) மேற்புறத்தில் மினுக்கும் இரு திரவத் துகள்கள் உற்பத்தியாயின. இந்த மினுக்கும் துகள்களைப்பெற்ற அமீபாதுண்டங்கள் சிலகால வளர்ச்சிக்குப் பின் இரண்டிரண்டாகப் பிளந்து தனித்தனியே பிரிந்தன. அப்படிப் பிரிந்த ஒவ்வொரு துண்டிலும் ஒரு மின்னும் திரவப்பொடி ஒட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இரண்டாகப் பிளவுபட்ட அமீபாதுண்டுகள், இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பின் நுண்ணுங்களாகஉருப்பெற்றன. இந்த நுண்ணங்கள், காலக்கிரமத்தில் பெருவாரியாகப் பெருகி இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட கூட்டுத் தொகுப்பாகத் தனித்தனியே ஒன்றுசேர ஆரம்பித்தன. இவ்வாறு சேர்ந்த ஒவ்வொரு நுண்ணத் தொகுப்பிலிருந்தும் ஒவ்வொரு வகையான தசை உருவம் தோன்ற ஆரம்பித்தது. ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் சுமார் முப்பதாயிரம் லட்சம் உயிரணுக்கள் இருக்கின்றன.

 

பல்லாயிர உயிரணுக்கள் சேர்ந்து ஒரு தொகுப்பாகும் இந்தச் சதைத் துண்டங்கள், காலக்கிரமத்தில் மிருதுவானதும், முள்ளெலும்பு அற்றதும் தசைப்பாகு போன்றதுமான ஒருவகை உருவம் பெற்று ஜெல்லிபிஷ்எனும் பாகு மீனாகத் தண்ணீரின் மேற்பரப்பில் நீந்த ஆரம்பித்தன. எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் குருட்டுத்தனமாக நீரின் மேற்பரப்பில் நீந்தி வந்த இந்தச் சதையுருக்கள், சிறிது காலங்கழித்து ஒருவகைப்புழு போன்ற உருப்பெற்று, நீர் நிலையின் அடிமட்டத்திற்குச் சென்று அங்கே ஊர்ந்து கொண்டிருக்கலாயின. இப்படி, ஜீவராசிகளின் கருவூலம் பரிணாம கதியடைந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு அதிசயமும் இதன் கூடவே நிகழ்ந்து வந்து கொண்டிருந்தது. அஃதென்னவென்றால், நீர்ப்பாசியிலிருந்து மயிர்ச்சிலும்பல்கள் போன்று கொடி வீசிக் கொண்டிருந்த கடற்பஞ்சுகள் நாளாவட்டத்தில் பவளப்புற்றுகளாக பரிணமித்தன. நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருந்த இந்தப் பவளப்புற்றுக்கள், அலைகளால் கரைக்கு ஒதுக்கப்பட்டு நிலத்தில் படிந்தபோது, அவை நிலத்திலும், நீரிலும் உள்ள உப்புச்சத்தை கிரகித்து புற்பூண்டுகளாக வளர ஆரம்பித்தன. இந்தப் புற்பூண்டுகள் நீரிலும், நிலத்திலும் சூரிய ஒளியிலும், அதன் உஷ்ணத்திலும் இருக்கும் பல்வேறு வகையான உயிர்ச்சத்துக்களை உண்டு உண்டு, காலக்கிரமத்தில், செடி, கொடிகளாக வளர்ந்து பின்னர் மரங்களாகப் பல்கிப்பெருகின. இக்கால இடைவெளியில் - நீர் மட்டத்தின் அடிப்பரப்பில் சென்று ஊர்ந்து கொண்டிருந்த சதைத் துண்டங்களான புழுக்கள், பல்வேறு உருவங்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தன. அப்படி வளர்ந்த அந்தப் புழுக்களின் ஒரு முனையில் மயிரிழை போன்ற இரு மீசைக் கொம்புகள் உற்பத்தியாயின. இந்த மீசைக் கொம்புகளை அப்புழுக்கள் நிலத்தில் ஊன்றி ஊன்றி நகரும்போதுதான் அவற்றுக்கு முதன் முதலில் ஸ்பரிச உணர்ச்சி உண்டாகியது. உயிருடன் உணர்ச்சியும் பெற்ற இந்தப் புழுக்கள், மேலும் மேலும் தமது மீசைக் கொம்புகளைதரையில் ஊன்றி நகர்ந்ததால், மண்ணுக்கிருக்கும் ஒருவகைச் சக்தி, அந்த மீசைக்கொம்புகள் வழியே உட்சென்று அவை பார்த்து உணரும் சக்தியைப் பெற்றன. இந்தவிதமான சக்தி பெற்ற அந்த மீசைக்கொம்புகளே காலக் கிரமத்தில் அப்புழுக்களின் கண்களானது. 

 

சுமார் ஐந்து லட்சம் வருடங்களுகு  முன்னால், ஸ்பரிச உணர்ச்சியும் பார்வைப் புலனும் பெற்ற அந்தப் புழுக்கள், நாளாவட்டத்தில் நட்சத்திர மீன்களாகஆயின. நட்சத்திர மீன்களுக்கு மூளை இல்லை. ஆனால் அவற்றின் வாய்களைச் சுற்றி ஓர் உணர்வு நரம்பு இருக்கும். அதன் வழியாகத் தான் அம்மீன்களின் இயக்கம் நடைபெறும். இந்த நட்சத்திர மீன்கள், சிறிது காலங்கழித்துத் தலைப்பிரட்டை, தவளைகளாகவும் உருப்பெற்றன. பார்வைப் புலனும், ஸ்பரிசிக்கும் தன்மையும், நீந்தும் சக்தியும் பெற்ற அந்தத் தலைப்பிரட்டைகளும், தவளைகளும், கால இடப்பாகுபாடுகளையொட்டி பல்வேறு மீன் உருவங்களாகவும் முதலை போன்ற பல பிற இனங்களாகவும் பரிணமித்தன. இப்போதுதான் இவை வாழ்க்கை போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்துகு வந்தன.

 

ஒரு மீன் ஜீவிக்க வேண்டுமென்றால், இன்னொரு மீனைப் பிடித்து விழுங்கவேண்டிய அவசியம் அதகு ஏற்பட்டது. இதேபோல, அதுவரை உண்டாகியிருந்த சகல ஜீவராசிகளுக்கும் இம்மாதிரிப் போராட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கத் திராணியற்றவை ஒழியவும், எதிர்க்கப் பலம் கொண்டவை வளரவும் முடிந்தது. இத்தகைய வேக வளர்ச்சியால், நிலத்தில் புல், பூண்டு, செடி, கொடிமரம் ஆகிய தாவரவர்க்கங்களும், நீரில் பலவகை ஜீவராசிகளான புழு, நத்தை, கிளிஞ்சல், சிப்பி, மீன் முதலியவைகளும் பல்கிப்பெருகின.

 

தலைப்பிரட்டையிலிருந்து தவளையாக உருவாகி பின்னர் அது பல்லியாகத் திருத்தமுற்றதும், அந்தப் பல்லி ஜந்துக்கள் நீரைவிட்டுக் கரையேறி ஊர்ந்து வாழ ஆரம்பித்தன. இந்தப் பல்லியினம், மிக விரைவில் பல்வேறு உருவங்களாகப் பருத்து பெருத்து ராட்சத உடல் அமைப்பை அடைந்தன. பிரம்மாண்டமான உடலும், சிறிய தலை, நீண்ட கழுத்தும் கொண்டிருந்த இந்தப்பல்லி ஜந்துக்களுக்கு மூளை மட்டும் மிகமிகக் குறைவாக இருந்தது. இந்த வகையை சார்ந்ததாகவே டைனோசர்களும் இருந்தன. இந்தப் பயங்கரப் பிராணிகள் உலகில் வாழ ஒன்றையொன்று தாக்கிப் புசிக்கும் பொருட்டு நடத்தும் போராட்டம் மிகவும் கொடுமையாக நடந்தது. இதற்கிடையில் - நீரில் பல்கிப் பெருகி வந்த மீன் இனங்கள், மேலும் பல திருத்தமுற்று அவை வேகமாக, நீந்தச் சவுகாரியமாய் உடலின் சில பாகங்களில் விசிரி போன்ற ஜவ்வுச் செதில்கள் முளைத்தன. இத்தகைய செதில் முளைத்த மீன்களுள் சில தம் இனத்துடன் போரிட்டு நீரிலிருந்து வாழ முடியாமல், மெது மெதுவாக நிலத்தை நாடி வசிக்க ஆரம்பித்தன. ஏற்கனவே இப்படி நிலத்தில் வந்து குடியேறி பயங்கர உருவங்களாக வளர்ந்த பிராணிகள், இந்தச் சிறிய நீர் வாழ் உயிர்களை வேட்டையாடிப் புசிக்கத் தொடங்கின.

 

இத்தகைய ராட்சதப் பிராணிகளிடமிருந்து தப்ப எண்ணிய அந்தச் செதில் பிராணிகள், தங்களிடமிருக்கும் செதில்களை ஒரு புதுவகையில் உபயோகிக்க முயன்றன. அதாவது, நீரில் நீந்த உபயோகப்பட்ட செதில்களைக் கொண்டு ஆகாயத்தில் பறக்க முயன்றன அந்த மீன் இனங்கள். நீரின் சக்தியாலும், நிலத்தின் சக்தியாலும் பல்வேறு இனங்களாக பல்கிப்பெருகிய தாவரங்கள், காரியமிலவாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளியிட்டதால் ஒவ்வொரு தாவர வர்க்கத்தின் கர்ப்பத்தினுள்ளும் அந்த இனவிருத்திக்கு தேவையான கரு உருவாகின.

 

 இந்தக் கரு உருவாக, முதன் முதலில் பூக்கவும், பின்னர் அந்தப் பூக்கள் காய்க்கவும், அது பின் கனியாகவும் மாறின. இந்த கனிகளின் கருப்பத்திலிருக்கும் தனி உயிர்ச்சத்து கொண்ட விதை நிலத்தினுடையவும் நீரினுடையவும் சார்புகொள்ள சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் அது தன்னிலிருந்து வேறு ஒரு தாவர இனத்தை உற்பத்திசெய்யவும் ஆரம்பித்தது. இதனால் ஒவ்வொரு தாவர இனமும் பல லட்சகாலப் பரிணாமத் துணையை எதிர்பார்க்காமல் மிகக் குறுகிய காலத்தில்- தனது இனத்தை அப்படியப்படியே பெருகிகொண்டுவந்தன.

 

 நீர்ப்பாசியிலிருந்து ஒரு திராட்சைக் கொடியாகத் திருத்தமுற்று வளர்ச்சிபெற எத்தனை லட்ச வருடங்கள் பிடித்தனவோ, அத்தனை வருடங்கள் அதற்கு இப்போது தேவையில்லாமல், ஒரு திராட்சைக் கொடியிலிருந்து இன்னொரு திராட்சைக் கொடி வெகுவிரைவில் தோன்ற ஆரம்பித்தது. அதனால் ஆறில் ஒரு பங்கான நிலப்பகுதி முழுவதையும் வெகுசீக்கிரம் ஆக்கிரமித்து சுவீகரித்துக் கொண்டன எண்ணற்ற இனங்களான தாவரங்கள். தாவர வர்க்கத்துள் ஏற்பட்ட இந்த உயிர்த்தாது போலவே, ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டு, அவையும் இவை போலவே ஒன்றிலிருந்து ஒன்றை வெகு விரைவில் சிருஷ்டி செய்து பெருகிப் போய்க்கொண்டன. தாவர இனவிருத்திக்கு அவற்றிலிருந்து உற்பத்தியாகும் விதை அணுக்கள் எப்படி உதவியதோ அதைப்போல, ஜீவராசிகளின் விருத்திக்கு அவை இடும் முட்டைகள் உதவின. ஏதாவதொரு தாவர விதையின் பருப்பையும், ஏதாவதொரு பறவையின் முட்டைகருவையும் எடுத்துப் பூதக்கண்ணாடியால் பரிசோதித்து பார்த்தால் அவை இரண்டும் ஏறக்குறைய ஒரே தன்மையுடன் இருப்பது கண்டுபிடிகப்பட்டது.

 

பல்வேறு இனங்களாக பிரிந்து சிறுசிறு குன்றுகள் போன்ற பயங்கர உருவங்களாக வளர்ந்த ராட்ஷத பல்லி இனங்களுள், சில மாமிசப் பட்சிணிகளாகவும் சில சாகப் பட்சிணிகளாகவும் இருந்தன. பலங்கொண்ட வால் பாகத்துடன், தொண்ணூறு அடி நீளமுள்ள இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட பிராணிகள், தமது ஐந்து அங்குல நீளமான கடினப் பற்களால், நாளொன்றுக்கு நாற்பது டன்எடை உள்ள தழை கொடிகளை மென்று தின்றுவிடும்படி இருந்தன. இப்படி இவற்றுக்குத் தாவர உணவு கிடைக்காதபோது, ஒன்று மற்றொன்றைக் கொன்று உண்ணும் அளவுக்கு முன்னேறிவிட்டன.

 

இந்நிலையில் திடீரென ஒரு சமயம், இப் பூமிக்கிரகத்தில், மாபெரும் பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, சில லட்ச வருடங்களாக இந்தப் பூமிக்கிரகம் அமைதியாக இயங்கிப் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் பழையபடி, தன் கர்ப்பக்கிரகத்திலிருந்த நெருப்புக் குழம்பை வாரிக்கொணர்ந்து வெளியே வீச ஆரம்பித்தது. பூமி அதிர்ந்து பாளம் பாளமாக வெடித்தது. கருங்கல் மலைகள் வெடித்துத் தீக்குழம்பை நாலாபுறமும் அள்ளித் தெளித்தன. இதனால் பூமிக்கோளத்தின் முன்னைய உருவமும் எழிலும் தலைகீழாக மாறிப்போனது. அதாவது நீர்சூழ்ந்த இடங்கள் நிலமாகவும், நிலமாக இருந்த பாகங்கள், நெடுங்கடல்களாகவும், பசுமையான இடங்கள் பாலைவனமாகவும், பாலைவனங்கள் பெரிய பெரிய மலைகள் தோன்றின. இவ்வகை மாறுதல்களால் உருப்பெற்றவைதான், இன்றுள்ள ஆசியாவிலிருக்கும் இமயமலையும், ஐரோப்பாவிலிருக்கும் ஆல்ப்ஸ் மலைகளும், ஆப்பிரிக்காவிலிருக்கும் சகாராப் பாலைவனமும், வட அமெரிக்காவில் இருக்கும் ராக்கீஸ்மலைகள், “லெமூரியாஎன்னும் குமரிக்கண்டம்.

 

இந்த பூமிக்கோளச் சீற்றம் இவ்வுலகில் உற்பத்தியாகி வீறுடன் பல அபூர்வ அதிசயங்களாக வளர்ந்து கொண்டிருந்த தாவர இனங்களும் ஜீவ இனங்களும் முக்கால் பங்கு அளவுக்கு, இருந்த இடமே தெரியாமல் மறைந்து ஒழிந்துபோனது. மீதம் இருந்த இடங்களில் சில தீக்குழம்பால் எரிக்கப்பட்டு, நீரினுடையவும், நிலத்தினுடையவும் சக்தி குறைந்து போனதால், மேற்கொண்டு வாழ இயலாமல் வாழத் தேவையான உணவு கிடைக்காமல் சிறிது சிறிதாக இறந்து அழிது போனது. இப்படி மடிந்த ஜீவராசிகளில் குரிப்பிட தகுந்தவை ராட்ஷதப் பல்லியினங்கள்  என்னும் அந்தப் பயங்கர பிராணிகள்தாம். அந்தப் பிராணி இனங்களில் ஒன்று கூட இன்றைய உலகில் இல்லையென்றாலும் அந்தப் பிராணிகளின் எலும்புக் கூடுகளும், “கல்மாரிகளும் இன்றும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கால, குண, உருவ அமைப்புகளை இன்றும் அறிய முடிகிறது. அன்றைய உலகின் அந்தப் பயங்கர மாறுதலால் பாதகமடைந்தவை, பெரிய பெரிய ஜீவராசிகளும் தாவர இனங்களும் தான். மற்றபடி சிறிய ஜந்துக்களும், சிறிய தாவரங்களும் பூமி கர்ப்பத்தின் சீற்றத்துக்கு அதிகம் பலியாகவில்லை. அதற்கு மாறாக அவை மிக விரைவில் பற்பல விசித்திரங்களுடன் மளமளவென்று வளர ஆரம்பித்தன.

 

இப்படி வளர்ந்த ஜந்துக்களில் குPப்பிடத்தக்கது எலி. இந்த எலிகள் தலைப்பிரட்டையிலிருந்து ஒரு பிரிவாகப்பிரிந்து திருத்தமற்ற தவளைகளின் பலகாலத் திருத்த வளர்ச்சியால் உண்டானது. இதுவரை உற்பத்தியாகி திருத்தமுற்று வளர்ந்திருந்த ஜந்துக்கள் அனைத்தும் குளிர்ந்த ரத்தமுடையவையாகவும், கால்பங்கு குறைவான நுரையீரலுடனுமே இருந்தன. இந்தநிலை அந்த எலி இனத்திலிருந்துதான் மாறுதல்கொள்ள ஆரம்பித்தன. அதாவது எலிகளாகத் திருத்தமுற்ற ஜந்துக்கள் உஷ்ண ரத்தமுள்ளவைகளாகவும், ஐம்புலனுணர்ச்சி கொண்டவைகளாகவும் இருந்தன. இதனால், இவை மற்ற ஜந்துக்களைப்போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்காமல் குட்டி போட்டுப்பால் கொடுப்பவையாக மாறின. ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சி இயக்கத்தில் இஃது ஓர் மகத்தான லட்சிய- திருப்புமுனை. ஏனெனில் இன்றைய மனித இனத்தில் இறந்த காலப் பரிணாம வளர்ச்சி சரித்திரத்தினுடைய நடுப்பகுதி இது. இந்த அதியற்புத பிராணியினத்தின் வாயிலாகவே கரடி, யானை, பன்றி, குரங்கு ஆகிய மிருகங்கள் திருத்தமுற்றுத் தோன்றின.

 

பல்லியினத்திலிருந்து ஆடு, மாடு, மான், குதிரை, வாரிக்குதிரை, புலி, சிங்கமும் மீனில் இருந்து பல்லி இனங்களும்  உருவாயின. இறுதியில் பல ரக குரங்குகளின் பல்லாண்டு கால வளர்ச்சியின்பேரில் மனிதனைப்போன்ற வால் இல்லாக் குரங்கான கொரில்லா ஒரு பிரிவாக தோன்றி வளர்ந்தது. இன்னொரு பிரிவில், பலகால வளர்ச்சியால், இன்றைய மாபெரும் லட்சிய சிருஷ்டியாக ஆசை, கோபம், காமம், கர்வம் கொண்ட மான்பு மிகு மனிதன் தோன்றினான். 

 

 

-தொடரும்.............. 

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.