|
||||||||
பீர்க்கங்காய் சட்னி(peerkankaranai chutney ) |
||||||||
தேவையானவை : பீர்க்கங்காய் – 1/4கிலோ சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் காயந்த மிளகாய் – 3 உளுந்தம் பருப்பு – 1/2 கை அளவு சின்ன வெங்காயம் – 1கப் தக்காளி – 3 கொத்தமல்லி தழை – 1/4கப் கருவேப்பிலை – 1/4கப் நல்லெண்ணெய் – தாளிக்க உப்பு – தேவையான அளவு செய்முறை:- 1.ஒரு கடாயில் 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்தெடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். 2.மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிறு நேரம் வதக்கவும். 3.அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 4.மிக்ஸியில் சிவக்க வறுத்தெடுத்த உளுந்தம் பருப்பு கலவையும், ஆற வைத்த பீர்க்கங்காய் கலவையும் நன்றாக அரைத்து கொள்ளவும். |
||||||||
by poornikala on 26 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|