LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்

​இன்று நிகழ்ந்த சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய குண்டு ​வெடிப்பு சம்பவத்தை லோக்சத்தா கட்சி  கண்டிக்கிறது. இதில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு லோக்சத்தா கட்சி தன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இச்சம்பவம் நம்மிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மாநில காவல்துறை மற்றும் இரயில்வே துறை ஆகிவற்றின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியத்திற்கு இது போன்ற சம்பவங்களே சான்றாக அமைகிறது.

இதற்கு காரணமான தீவிரவாதிகளை காவல்துறை விரைவில் கைது செய்ய வேண்டும் என நாம் கோரும் இவ்வேளையில், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க என்ன வழி என நாம் சிந்திக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உள்ள பிரச்சனைகளை முதலில் பார்ப்போம்:

  • சோதனை செய்ய கருவிகள் இருந்தும் முறையான சோதனைகள் நடைபெறுவது கிடையாது.
  • பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முறையான டிக்கெட் இல்லாத நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது புகார்கள் அளிக்கும்பட்சதில் எந்தவித நடவடிக்கை
     ​
    யும்​
     எடுப்பது கிடையாது. இரயில் நிலையங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை தடுக்க எந்த முயற்சி
     ​​
    யும் எடுக்கப்படுவதில்லை.
  • மக்களின் பாதுகாப்புக்கு உதவும் CCTV கேமரா, புகார் எண்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.
  • இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக
    ​​
     ளிலும், இரயில்களிலும் உள்ள உரிமை கோரப்படாத பொருட்களை உடனடியாக அப்புறபடுத்துவது கிடையாது. பார்சல் சர்வீஸ்களில் செல்லும் பொருட்கள் குறித்து முறையான வகையில் சோதனை செய்யப்படுவதில்லை.
  • இரயில் நிலையத்திற்குள்ளும் இரயிலிலும் அவசர உதவி மருத்துவமனை/மருத்துவப்பிரிவு வசதிகள் கிடையாது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க லோக்சத்தா கட்சி பரிந்துரைக்கும் தீர்வுகள்:

1. சென்னை மாநகரம் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் CCTV கண்காணிப்பு காமெராக்கள் பொறுத்த வேண்டும். இவை குண்டுவெடிப்பு தவிர பிற குற்ற சம்பவங்களின் விசாரணைக்கும் பெரிதாக பயன்படும். குற்ற சம்பவங்களையும் பெருமளவு குறைக்கும். ஹைதராபாத் நகரிலும் இது போன்று கண்காணிப்பு காமெராக்கள் பொறுத்த வேண்டும் என லோக்சத்தா தொடர்ந்து போராடி சில இடங்களில் வெற்றியும் கண்டுள்ளது.
சென்னை நகருக்கு மொத்தம் 3500 கண்காணிப்பு காமெராக்கள் வேண்டும் என லோக்சத்தா கட்சியின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவு பரிந்துரைக்கிறது. இவற்றுக்காக ஆகும் செலவு மொத்தம் ரூபாய் 450 கோடி ஆகும்.

2. கடந்த இரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாய் சொல்லியிருந்தாலும் அதற்கென எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதற்கென நிதியும் ஒதுக்கப்படவில்லை. இரயில்வே துறை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக கவனம் செலுத்தி அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும்.

​​
மேலும் இன்றைய நிகழ்விற்கு பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தாலும், சமூக ஊடகங்களில் இதுபற்றிய வதந்திகள் பல நிலவி மக்களை அச்சமடைய செய்தது. இது போன்ற சூழல்களில் தமிழக அரசு மக்களின் அச்சத்தை போக்கும் வண்ணம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் அறிவிப்புகளை விளக்கி விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
Loksatta Party condemns the bomb blast in Chennai Central Railway station. The party expresses its condolence to the bereaved family of the deceased and wishes the injured
 ​,​
 a speedy recovery.

Incidents like these serve proof for the security flaws in our state and evince the complacent attitude of our state police machinery. While we all demand for a speedy investigation and arrest of the terrorists, we should also look for solutions to prevent such incidents in the future.

We shall look into the issues in Central railway station:
  • Metal detectors and other security checks are not 
    ​taken seriously.

  • There is no serious effort taken to prevent unreserved passengers entering reserved coaches nor to prevent the entry of unauthorized people into the station.
  • Priority is not given for Information board displays, complaint numbers and CCTV cameras.
  • Unclaimed baggage
     ​ and ​
    Thrash
    ​es​
     
    ​are​
     not promptly cleared periodically. Parcels are not promptly checked for explosives and other flammable goods.
  • There is no proper 
    ​Emergency ​
    medical centre in the 
    ​railway ​
    station or in 
    ​the ​
    trains.
Loksatta's recommendations to prevent such incidents in the future:

1. We recommend that CCTV monitoring cameras be placed in public places in Chennai and in other cities in Tamil Nadu. Loksatta party is already running a campaign demanding CCTV cameras in 
​Andra Pradesh 
and is successful in getting installed in a few places
​ in Hyderabad​
. The Party's Research and Advocacy 
​wing ​
estimates that 3500 CCTV cameras would be required to 
install​
 in Chennai city. The cost for this effort would be Rs 450 crore
 ​s​
. This will greatly help in crime investigation and will lead to crime prevention as well.

2. Though it has been announced in the railway budget that priority would be given for Safety and Security, there has been no significant improvement in security aspects because of very less funds being allocated for the same. The party demands that investment in Technology is very much required for improving the safety and security in railways.

The government gave an official announcement not to panic because of this incident. However rumours about this incident in social media caused much panic to the general public. The party demands that government should release advertisements in Television and Print media about the actions taken by the police and
 ​ other​
 updates on the investigation. This will avoid unnecessary apprehensions among the general public.

The party demands that police reforms are implemented in the state with immediate effect to improve the overall quality of the police system.

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: Chennai Bomb Blast   Chennai Kundu Vedippu   Loksatta Party   சென்னை குண்டு வெடிப்பு   குண்டு வெடிப்பு        
 தொடர்புடையவை-Related Articles
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன? வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து - தமிழகத்திற்கு அடுத்து என்ன?
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள் சென்னை குண்டு வெடிப்பு - லோக்சத்தா கண்டனம் - தீர்வுகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி !! 12 பேர் படுகாயம் !! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி !! 12 பேர் படுகாயம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.