|
|||||
சென்னை- தைவானுக்கு நேரடி விமானச் சேவை - வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல் |
|||||
![]() சென்னையிலிருந்து தைவான் தலைநகர் தைபேவுக்கு நேரடி விமானச் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சிவில் விமானத்துறை அமைச்சருக்கு வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னைக்கும் தைவான் நாட்டுக்கும் இடையில் வணிக வாய்ப்புகள் பெருகியுள்ளன
என்றும், சென்னையிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தைவான் நாட்டுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சென்னைக்கும் தைவான் தலைநகர் தைபேவுக்கும் நேரடி விமானச் சேவை இல்லாததால் தேவையற்ற அலைச்சலும் மிகுந்த சிரமமும் கூடுதல் செலவும் ஏற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை- தைபே இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டால் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். சுற்றுலாத் துறையும் அதிக வளர்ச்சி பெறும் என்றும் கலாநிதி வீராசாமி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
|
|||||
by hemavathi on 07 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|