காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்கும் வகையில் புதியதாக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளார் ஈரோடு மாட்டம் சென்னிமலையைச் சேர்ந்த கார்த்திகேயன்.
தனது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செல் ஸ்னிப்பார் என்ற மென்பொருள் ஆன்ட்ராய்டு செல்போனில் இன்ஸ்டால் செய்து விட்டால் போன் தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அடுத்த நிமிடமே அதை செயலிழக்க செய்ய முடியும்.
போனை எடுத்தவர்கள் போனை அணைத்திருந்தாலும்(சுவிட்ச் ஆப்) சிம்கார்டை தூக்கி எறிந்தாலும் கூட கண்டுபிடித்துவிடலாம். இந்த புதிய மென்பொருள் மூலம் திருடப்பட்ட போனுக்கு, வேறொரு செல்லில் இருந்து ரகசிய பாஸ்வேர்டை குறுஞ்செய்தி அனுப்பினார் தானாகவே போன் லாக் ஆகிவிடும். இரண்டாவது குறுஞ்செய்தி கொடுத்தால் அந்த போனில் உள்ள ரகசிய தகவல்கள், போன் நம்பர்கள் அனைத்தும் மறைந்து விடும். மூன்றாவது குறுஞ்செய்தி கொடுத்தால் திருடு போன செல்போனிற்கு அழைப்பு வரும். திருடப்பட்ட போனை ஆன் செய்தால் அந்த போனில் இருந்து எங்கிருந்து பேசினாலும், நாமும் அதை கேட்கலாம். நான்காவதாக ஒரு குறுஞ்செய்தி கொடுத்தால் அந்த போன் எந்த நாடு, எந்த மாநிலம், மாவட்டம், தாலுக்கா, நகரம், எந்த தெரு என்பது போன்ற புதிய சிம்கார்டை போட்டு பேசினாலும் கண்டுபிடித்து விடலாம்.
தற்போது ஆன்ட்ராய்டு போன்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப திருடு போகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விலை உயர்ந்த செல்போன்களை வாங்குபவர்கள் போனை பாதுகாத்துக் கொள்ள இந்த புதிய மென்பொருள் பெரிதும் உதவும் என கார்த்திகேயன் கூறியுள்ளார்.
|