LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

செட்டிநாட்டு கோழி பிரியாணி (Chettinad Chicken Biryani)

தேவையானவை :


பாசுமதி அரிசி - 1 1/2 கப்

கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)

வெங்காயம் - 1 (பொடித்தது)

தக்காளி - 1 (பொடித்தது)

தயிர் - 1/2 கப்

எண்ணெய் - 100 மில்லி

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 5

கொத்தமல்லி, புதினா - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை

லவங்கம் - 5

பிரியாணி இலை - 1

ஏலக்காய் - 3

தேங்காய் பால் - 1 1/2 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

உப்பு


செய்முறை :


1. முதலில் கோழி கறியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2.கலவை பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி மூன்று நிமிடம் வைக்கவும்.நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.

3.கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி 3/4 பாகம் வேக விடவும்.இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்டீஸ் ஸ்பூன் நெய் சேர்த்து சிறுந்தீயில் 12 நிமிடம் வைக்கவும்.சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

CHETTINAAD CHICKEN BIRYANI

Required Ingredients:

Basmati Rice-1 1/2 cup

Chicken-1/2 KG(with bone big pieces)

Onion-1(chopped)

Tomato-1(chopped)

Oil-100 ml

Ghee-3 tsp

Green chillies-5

Coriander,Mint-1/2 cup

Turmeric powder-1/2 tsp

Chilli powder-1/2 tsp

Garam masala powder-1/4 table spoon

Ginger-garlic paste-1 table spoon

Cinnamon-5,

cloves(lavangam),

Briyani leaves-1

Cardamon-3

coconut milk-1 1/2 cup

water-1 1/2 cup

salt

How To Prepare:

1.First mix half of the curd,half of the turmeric powder and half salt to the       chiken.

2.Clean the rice and soak it for 20 minutes.

3.Heat oil and ghee in a pan.Add cinnamon,Briyani leaves,lavangam,Cardomom    and make a fry.Add chopped green chillies,onion and fry.

4.Add Ginger-Garlic paste when the mixture half boiled.Also add tomato and        make deep fry.

5.Add Remaining part of curd,Chilli powder,salt,coriander,mint and make fry for    3 minutes.

6.Add soaked chicken after the raw smell of chilli powder goes.

7.After chicken boiled,add coconut milk,water and make it to heat.

8.Add rice after water heats and make boil 3/4 level.

9.Now add Garam masala,ghee and mix well in a SIM fire.Boil for 12 minutes.

10,After rice boils,transform to a bowl.

11.Now the yummy "CHETTINAAD CHICKEN BIRYANI" ready.



by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.