LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

செட்டிநாடு வறுத்த கோழி(Chettinad Fried Chicken)

தேவையானவை :


சிக்கன் -அரை கிலோ

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

பூண்டு - ஒரு முழு பூண்டு

மிளகு - இரண்டு டீஸ்ஸ்பூன்

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 5

சோம்பு - இரண்டு டீஸ்ஸ்பூன்

கடலை மாவு - இரண்டு கப்

தேங்காய் - கால்  மூடி

எண்ணெய் - தேவைகேற்ப

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழி கறியை  சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக வைக்கவும்.மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆற வைத்து நன்றாக அரைத்து சிக்கனுடன் கலந்து நன்கு பிசறி வைக்கவும்.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து மீண்டும் பிசறி விட வேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.

2.கடலை மாவுடன், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து திக்காக பஜ்ஜி மாவு போல் செய்து கொள்ளவும்.தேவைகேற்ப அரிசி மாவும், ஆப்ப சோடாவும் சேர்க்கலாம்.

3.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை கடலை மாவில் தோய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்நிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.மற்றுமொரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.

4.இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து ஒன்றும் பாதியுமாக வதக்கி விடவும்.இத்துடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கிளறி, மல்லிதழை தூவி இறக்கவும்.

CHETTINAD FRIED CHICKEN

Ingredients to make CHETTINAD FRIED CHICKEN :


Chicken - 1/2 Kg,

Curry Leaves - 2 Bunches,

Garlic - a whole,

Pepper - 2 Tsps,

Green Chilies - 2,

Ginger - 50 g,

Dry Chilies - 5,

Aniseeds - 2 Tsps,

Gram Flour - 2 Cups,

Coconut - 1/4 Cup,

Oil - as needed,

Onion - 150 g,

Tomato - 100 g,

Salt - as needed.


Method to make CHETTINAD FRIED CHICKEN :


1. Make the washed chicken into pieces. Keep it aside. Heat the pan then add pepper, dry chilies, aniseeds, curry leaves, coconut and fry it well. Then grind it well and mix it with chicken then add ginger garlic paste , 1 tbsp oil and salt and mix them well. Soak it for 20 minutes.

2. Mix up the gram flour, pepper powder, salt, water and make it a paste like bajji batter. Then add rice flour and soda along with them.

3. Heat oil in a pan dip the chiken pieces in gram flour batter and drop into oil. Fry them well. In an another stove heat oil in a pan add chopped onion and fry it well.

4. Then add green chilies, curry leaves, finely chopped tomato and salt then fry it well. Finally add fried chicken pieces along with it and fry well.  Garnish with coriander leaves. 


CHETTINAD FRIED CHICKEN is ready to serve.

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.