LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்

தேவையானவை :


சிக்கன் - அரை கிலோ

முட்டை - 4

சாம்பார் வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 6 பல்

காய்ந்த மிளகாய் - 4

தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு - இரண்டு ஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :


1. சிக்கனைச் சுத்தம் செய்துக் கொள்ளவும். வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.


2. தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.


3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டுத் தாளிக்கவும்.


4. அரைத்த மசாலாவை அதனுடன் சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


5. சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையையும் சேர்த்துக் கிளற வேண்டும்.


6. குறைந்த தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கினால் சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ் தயார்.

Chicken Egg Pepper Suace

INGREDIENTS for Chicken Egg Pepper Sauce:

Chicken-1/2 kg

Egg-4

Small Onion-100g

Ginger-small piece

Garlic-6

Dry Chilly-4

Coriander Powder-1tbsp

Pepper-2tbsp

Mustard, Curry Leaves-for frying

Salt, Oil-Enough needed

PROCEDURE to make Chicken Egg Pepper Sauce:

1. Clean the chicken finely. Slice the boiled egg in to half and remove the yellow part and keep aside.

2. Roast the coriander powder, dry chilly, ginger, garlic, pepper, onion and grind them well.

3. Heat the oil in a pan, season mustard and curry leaves.

4. Mix the grinded masala with chicken and boil them along with water. Add salt as it enough needed.

5. When chicken and masala comes in a thick consistency, add the egg and stir them.

 6. Slow the flame for few minutes and keep aside from stove. Tasty chicken egg pepper sauce is ready.

by   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.