|
||||||||||||||||||
சிக்கன் ப்ரைடு ரைஸ் (chicken Fried Rice ) |
||||||||||||||||||
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப் நறுக்கிய கோழி இறைச்சி - அரை கப் கேரட் - 1 முட்டைகோஸ் - சிறிதளவு பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் முட்டை - 1 குடை மிளகாய் - கால் கப் பெரிய வெங்காயம் - 1 உப்பு - தேவைகேற்ப செய்முறை: 1.பாசுமதி அரிசியை ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். கோழி இறைச்சியை கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2.வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து பொரியல் போன்று வேக வைத்து எடுக்க வேண்டும்.நறுக்கின காய்கறிகளையும் தனியே இலேசாக வதக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டும். 3.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சாதம், கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து தீயை சற்று அதிகப்படுத்தி சிறிது நேரம் கிளறியபடி வேக வைத்து இறக்க வேண்டும். |
||||||||||||||||||
CHICKEN FRIED RICE | ||||||||||||||||||
Required Ingredients: Basmati rice-1 cup cutted chicken flesh-1/2 cup carrot-1 Cabbage-little Garlic paste-1 tsp Sowa sauce-1 tsp Chilli sauce-1 tsp
Scallions, Spring onions - Vengaaya thaal
Scallions, Spring onions-little Ginger paste-1 tsp Egg-1 Capsicun-1/4 cup salt-as per use How To prepare: 1.Soak the basmati rice in a vessel and filter rice without wet content. 2.clean and boil the chicken and take it seperately. 3.slice the vegetables(onion,cabbage,carrot,capsicun) vertically.Then Boil egg. 4.Fry the chopped vegetables lightly. 5.Heat oil in the pan and fry onion until it turns golden color.Add ginger,garlic paste and make it fry. 6.Now add cooked basmati rice,chicken,egg,vegetables one by one and fry gently. 7.Add soya sauce,chilli sauce,salt and make fire in a high SIM. 8.Stir and fry well.Transform into a bowl. Now the yummy Chicken fried rice ready.
|
||||||||||||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|