LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்றது. வின்பாஸ்ட் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, பெ.கீதா ஜீவன், அனிதா ஆர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன தொழிற்சாலையைத் திறந்து வைத்து, முதல் வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார். மேலும், ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனத்தில் கையெழுத்திட்டு அதன் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மின்கல வாகனத்தில் பயணித்து ஆலையைச் சுற்றிப் பார்த்தார். மேலும், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு பயிற்சி பெற்ற 229 பட்டயம் படித்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்வர்  “தமிழக வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் அடிக்கல் நாட்டப்பட்டு 17 மாதங்களில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
இதற்காக அந்நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இந்தப் பெருமையில் முக்கிய பங்கு உண்டு. டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்பாஸ்ட் ஒரு சாட்சியாக உள்ளது. இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கக்கூடிய வின்ஃபாஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்குத் தமிழ்நாட்டு முதல்வராக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவின் வாகன உற்பத்தியில் மற்றும் மின் வாகன உற்பத்தியின் கேப்பிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன்.
சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட்.

தற்போது தூத்துக்குடியில் முதல் மின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். நான் உறுதியோடு சொல்கிறேன், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள்..."என்றார். 


by hemavathi   on 05 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.