இந்தியாவின் தொழிலதிபர்கள் என்றால் அம்பானி, அதானி, டாடா என்று குறிப்பிடும் காலம் மாறி சிகே குழுமம் உள்ளிட்ட பல வெற்றியாளர்களை தென்னிந்தியாவின் தொழில் அடையாளமாகக் குறிப்பிடலாம்.
டாக்டர் சி.கே.அசோக்குமார் அவர்கள் தலைமையில் இயங்கும் முதலுலக மூத்தகுடி ( First World Community - FWC) பதிப்பில் வெளிவந்த "இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்" நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை தமிழில் பால் சுயம்பு அவர்கள் எழுதியுள்ளார். இந்நூல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 1000 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிஸ் மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்நூலைப் பெற இணையதளத்தில் எளிதாகப் பெற வசதியாக வலைத்தமிழ் பதிப்பகத்தின் இணையதளம் https://estore.valaitamil.com/ வழியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோல்கேட் நிறுவனத்தின் தலைவர் பிரபா நரசிம்மன் , MMA தலைவர் கே.மகாலிங்கம் , ஜெனரல் கார்ப்பரேட் பிராக்டீஸ் குழுமத்தின் பங்குதாரர் ஆர்த்தி லக்ஷ்மிநாராயணன் , கேப்டன் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் பெருமை, கடலூர் மாவட்டத்தின் பெருமை, புதிய தொழில் முனைவோருக்கு நம்பிக்கை நினைவில் வாழும் திரு.சின்னிகிருஷ்ணன் குடும்பம் ( சி.கே. குடும்பம்)
வாழ்த்துகிறது.. www..TamilBusinessWorld com , வலைத்தமிழ் குழு .
|