LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம்

 

2024-25 கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. அதன்படி, 12ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

மாணவிகளில் 4,05,472 பேர் அதாவது 96.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் மாணவர்களில் 3,47,670 பேர் அதாவது 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.94 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.71 சதவீதமாகவும், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.88 சதவீதமாகவும் உள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதல் இடம் பெற்றுள்ளது. அரியலூர் 98.82 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.

தேர்ச்சி விகிதத்தில் அரியலூருக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதத்துடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.53 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் கோவை 97.48 சதவீதத்துடனும், கன்னியாகுமரி 97.01 சதவீதத்துடனும் உள்ளன. 6ம் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96 சதவீதம், 7வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.71 சதவீதம், 8வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் 96.64 சதவீதம், 9வது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 96.58 சதவீதம், 10வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் 96.19 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறது. அதேநேரம் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பில் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது, இந்த ஆண்டு 3ம் இடம் பிடித்திருக்கிறது.

 

 

by hemavathi   on 08 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.