|
|||||
குளுக்கோரஸ் |
|||||
தேவையானவை : லிக்விட் குளுக்கோஸ் - 75 கிராம் சர்க்கரை - 250 கிராம் ஜெலற்றீன் - 25 கிராம் கலரிங் - 5 துளிகள் சித்திரிக்கமிலம் - அரை டீஸ் ஸ்பூன் சீனி - 100 கிராம் எசன்ஸ் - 5 துளிகள் மாஜரீன் - ஒரு டீஸ் ஸ்பூன் தண்ணீர் - ஒரு டம்ளர்
செயல்முறை : 1.முதலில் ஒரு கப்பில் ஜெலற்றீனை எடுத்து கொண்டு அதனுடன் நன்கு கொதித்த தண்ணீர் அரை டம்ளர் விடவும். அதன் பின்பு அதை நன்றாக கொதித்த தண்ணீரை உள்ள இன்னொரு பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன்முற்றாககரையும் வரைநன்றாககரைத்துஅப்படியே கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள் வைக்கவும். 2.அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் சர்க்கரையை போட்டு அதனுடன் தண்ணீர் அரைடம்ளர் உற்றி காய்ச்சவும். 3.சர்க்கரை முழுவதும் கரைந்ததும் லிக்விட் குளுக்கோஸ் ஒன்றாக சேர்த்து 250°ப இல் வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி உடனே சித்திரிக்கமிலம் கலந்து நன்றாக ஆறவிடவும்.ஆறிய பின்பு கலரிங், எசன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். அச்சுக்களில் வெண்ணை பூசவும். 4.பின்பு பட்டர் பூசிய அச்சுக்களில் ஊற்றி 8 மணித்தியாலத்திற்குப் பதமாகும் வரை வைத்து கத்தியால் தட்டி எடுத்து சீனியில் பிரட்டி எடுத்து அதிகமான சீனியை அகற்றிய பின்பு பொதி செய்க. அதன் பின்பு அதை எடுத்து பரிமாறவும். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|