LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா!

அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா!

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவை அயலகத் தமிழர் நலத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அறக்கட்டளையும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் ஒருங்கிணைத்து இருந்தனர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, விஸ்கான்சின், மினசோட்டா, மிசோரி, மெக்லின் கவுண்டி, அயோவா தமிழ்ச்சங்கங்கள் உள்பட அனைத்து தமிழ் அமைப்புகளின் பங்கேற்புடன் இந்த விழா சிறப்புடன் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டுச் சட்டை, பட்டு வேட்டியுடன் அரங்கத்தில் நுழைந்த போது ஆரவாரத்துடன் மக்கள் வரவேற்றனர். முதலமைச்சருடன் அவருடைய துணைவியார் திருமதி.துர்கா ஸ்டாலின், சிகாகோ இந்தியத் தூதரக அதிகாரி ,தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா, அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் உயர் திரு.கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். உடன் அயலக் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் , பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளைச் சீருடையில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் புடை சூழ மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா மேடையில் தோன்றினார். தொடர்ந்து குழந்தைகள்...தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய நாட்டுப்பண், அமெரிக்க நாட்டுப் பண் பாடினார்கள்.

விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் திரு.கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய ஆட்சியில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் சிறப்பான திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தவர். சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பதற்கான திட்டங்களையும் அதில் முதலமைச்சர் அவர்களின் தனிக் கவனத்தையும் தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.

சிகாகோ இந்தியத் தூதரக அதிகாரி, பேசுகையில் தமிழ்நாடு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக விளங்கி வருவதை பெருமையுடன் குறிப்பிட்டார். நன்றியுரையாற்றிய தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா, மாண்புமிகு முதலமைச்சரின் ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சி இலக்கைக் குறிப்பிட்டு அதற்காக முதலமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி விவரித்தார்.

அமெரிக்காவிலிருந்து வரும் தொழில் முதலீடுகளைப் பட்டியலிட்ட அமைச்சர் , இது தொடக்கம் தான் இன்னும் தொடர்ந்து அமெரிக்க முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகத் தெரிவித்தார்.

சிறப்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 53 ஆண்டுகளுக்கு முன்னால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக சிகாகோ நகரில் பங்கேற்ற விழாவை நினைவு கூர்ந்தார். அதே சிகாகோ நகரில் கலைஞரின் மகனாக உங்களில் ஒருவனாக தமிழ்நாட்டு முதலமைச்சராக வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், அண்ணா, கலைஞர் ஆட்சிக்காலங்களில் தமிழ்நாட்டில் கல்விக்கு முன்னுரிமை வழங்கி அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்ததன் பலனாக வெளிநாடுகளிலும் உயர்பதவிகளில் தமிழர்கள் இடம்பெற்றுருப்பதற்கு இங்கே வந்திருப்பவர்களே சான்றாக உள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தாங்கள் கற்ற கல்வி, அறிவியலின் துணையுடன் மென்மேலும் உச்சங்கள் அடைய வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வரிகளைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், நாம் அனைவரும் தமிழ்த் தாய் என்ற ஒரே தாயின் பிள்ளைகள், நீங்கள் எந்த பிளவுகளுக்கும் இடம் தராமல் தொடர்ந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வருகை தந்து, குமரியில் வள்ளுவர் சிலை, கீழடி, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். தமிழர்களின் பண்டைய நாகரீக வாழ்க்கைச் சிறப்புகளை அறியச் செய்யுங்கள் நம்முடைய உறவினரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதலமைச்சராக இருக்கிறார் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள் என்று அமெரிக்கத் தமிழர்களுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை விடுத்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்கத் தமிழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இடம்பெற்ற நாட்டிய நடன நிகழ்ச்சியை முதலமைச்சர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார். தமிழ்ச் சங்கங்களில் சார்பில் நடைபெற்ற பறை மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வட அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் நகரில் முதன்முதலாக 6.9 ஏக்கரில் 4 லட்சம் டாலர் செலவில் அமையவிருக்கும் தமிழ்க் கல்வி மற்றும் பண்பாடு மையக் கட்டிடத் திட்ட வரைவை தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

முதல்வர் பயணத்தில் அவரை சந்தித்த ஹார்வார்டு தமிழிருக்கை புரவலரும் , உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் ஜானகிராமன் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் ( பர்க்கிளி) அறிஞர் அண்ணா அறக்கட்டளை தமிழ்த்துறை செயல்பாடுகளை விரிவாக்க எடுத்து வரும் முயற்சிகளை விளக்கி, முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தினையும் நேரில் அளித்து தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்திடக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு இரண்டு பேருந்துகளை அன்பளிப்பாக வழங்கினர்.

தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, மிசோரி. விஸ்கான்சின், அயோவா, மினசோட்டா, மெக்லீன் கவுண்டி தமிழ்ச்சங்கங்களின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து கலந்து கொண்ட இந்த விழாவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

by Swathi   on 10 Sep 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை  நேர்காணல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை நேர்காணல்
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா
அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்! அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!
வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி   புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில்  நிதி திரட்டும் கருத்தரங்கங்கள் “தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.