LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நெசவாளர்களை கவுரவிக்க கோ ஆப்டெக்ஸ் புதிய திட்டம் !! 30 சதவீத தள்ளுபடியும் அறிவிப்பு !!

மூத்த நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்கள் நெசவு செய்த சேலைகளில், அவர்களின் புகைப்படத்தை இணைத்து, கோ ஆப்டெக்ஸ் விற்பனை செய்கிறது. 

 

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ரகங்களின் அறிமுகம் மற்றும் விற்பனை, துவக்க விழா சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள, கோஆப்டெக்ஸ் வானவில் விற்பனை நிலையத்தில் நடந்தது. இதில் கோஆப்டெக்ஸ் உயர் அதிகாரிகளும், தமிழக கைத்தறித் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

 

கோஆப்டெக்ஸ் புதிய ரகங்களில், சரித்திரப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னங்கள், கோவில்களின், சிற்ப மற்றும் ஓவிய வேலைப்பாடுகளில் உள்ள, வடிவமைப்புகளை பயன்படுத்தி நெய்யப்பட்ட சேலைகள், கோடம்பாக்கம் சேலை, கண்டாங்கி சேலை, சின்னாளபட்டி சேலை, நெகமம் சேலை, உறையூர் சேலை, சுங்குடி சேலை, புதுமணத் தம்பதியரை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட, தேனிலவு படுக்கை விரிப்பு, சிறுவர்களை கவரும், குட்டீஸ் படுக்கை விரிப்பு, ஆயத்த சட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

சேலைகளில் நெசவாளர்கள் விவரம் : 

 

கைத்தறி நெசவு தொழில் ஈடுபட்டுள்ள, 75 வயதிற்கும் அதிகமான நெசவாளர்களின் உழைப்பை போற்றும் விதமாக, அவர்கள் நெய்யும் சேலையுடன், அவர்களின் வண்ண புகைப்படம், அவர்கள் ஊர், எத்தனை ஆண்டுகளாக நெசவுத் தொழில் செய்கின்றனர். அவர்கள் நெய்த சேலையை, உருவாக்க தேவைப்பட்ட நேரம், அதற்காக, அவர்கள் கை மற்றும் கால்களை எத்தனை முறை அசைத்தனர் என்ற விவரம், அட்டையில் அச்சிடப்பட்டு, சேலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து சேலைகளுக்கும், ஜனவரி 31ம் தேதி வரை, 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 30 Dec 2013  0 Comments
Tags: Co Optex   Co Optex New Scheme   Co Optex Pongal   Co Optex Offers   கோ ஆப்டெக்ஸ்   நெசவாளர்களை கவுரவிக்க   கோ ஆப்டெக்ஸ் தள்ளுபடி  
 தொடர்புடையவை-Related Articles
நெசவாளர்களை கவுரவிக்க கோ ஆப்டெக்ஸ் புதிய திட்டம் !! 30 சதவீத தள்ளுபடியும் அறிவிப்பு !! நெசவாளர்களை கவுரவிக்க கோ ஆப்டெக்ஸ் புதிய திட்டம் !! 30 சதவீத தள்ளுபடியும் அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.