LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!

லஞ்சம் வாங்கி கொண்டு, இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் அளித்ததாக, 11 எம்.பி.,க்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு தமிழக எம்.பி.,க்களும் அடக்கம். இந்த குற்ற சம்பவம் தொடர்பான விடியோ ஆதாரங்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பான விரிவான விவரங்கள் பின்வருமாறு, 

 

கோப்ரா போஸ்ட் இணைய தளத்தை சேர்ந்த, நிருபர்கள், ஸ்டிங் ஆபரேசனுக்காக ஆஸ்திரேலியாவில், மெடிட்டெர்ரனேன் ஆயில் என்ற பெயரில் நிறுவனம் இருப்பதாக பொய்யாக ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் பெயரில், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் துரப்பன பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தை பெற, பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் தர முடியுமா என, 11 எம்.பி.,க்களிடம் கேட்டு உள்ளனர். 

 

இதற்கு, சம்மதித்த, எம்.பி.,க்கள், 50 ஆயிரம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை, பெற்று உள்ளனர். எதைபற்றியும் விசாரிக்காமல், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் அளித்துள்ளனர். சில, எம்.பி.,க்கள் பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி, தாங்களே முடித்து தருவதாக உறுதியளித்தாக, 'கோப்ரா போஸ்ட்' இணைய தளம் தெரிவித்துள்ளது. இந்த, ஸ்டிங் ஆப்ரேஷனில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களான, பொள்ளாச்சி சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பா.ஜ.க,வை சேர்ந்த மூன்று எம்.பி.,க்கள், காங்கிரஸ் சார்பில் இருவர், பகுஜன் சமாஜ் சார்பில் ஒருவர், ஐக்கிய ஜனத தளம் சார்பில் மூவர், என , 11 எம்.பி.,க்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதில், எம்.பி.க்கள், சிலர் நேரடியாகவும், சிலர் இடைத்தரகர்கள் மூலமாக பணம் பெற்றதாகவும் அந்த இணையதளம் கூறுகிறது. மேலும் அ.தி.மு.க., - எம்.பி-க்கள் இருவருக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இணைய தளம் தெரிவித்துள்ளது. 

 

'பணம் கொடுத்தால், எத்தகைய சிபாரிசு கடிதங்களையும் அளிக்க, நமது எம்.பி.,க்கள் தயாராக உள்ளதையும், என்ன கேட்கிறோம், அதன் உண்மைத் தன்மை குறித்தும், அவர்கள் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதே, இந்த 'ஸ்டிங் ஆப்ரேஷன்'மூலம் தெரியவந்துள்ளது' என, இணைய தளம் கூறியுள்ளது. 

by Swathi   on 12 Dec 2013  0 Comments
Tags: கொப்ரபோஸ்ட்   ஊழல்   லஞ்சம்   ஸ்டிங் ஆபரேசன்   கோப்ரா போஸ்ட் இணைய தளம்   11 எம்.பிக்கள்   Cobrapost  
 தொடர்புடையவை-Related Articles
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !! ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !!
லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !! லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !!
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !! அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !! லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா?  அது பயன்தருமா? ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா?
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.