|
|||||
தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.... |
|||||
பண்டைய காலம் முதல் இன்றைய தாத்தா பாட்டி வரை தலைக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி வந்தார்கள். இதனால், அவர்களின் தலைமுடி உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்தது. ஆனால், நாம் தேங்காய் எண்ணெய்களை தவிர்த்து, கண்ட கண்ட எண்ணெய்களை, பத்திரிக்கைகளின் வரும் விளம்பரத்தைப் பார்த்து வாங்கி தலைக்கு தேய்க்கிறோம். இதனால், தலைமுடி விரைவில் ஆரோக்கியத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், விரைவிலேயே கொட்டி தலையே மொட்டை ஆகிவிடுகிறது.... எனவே இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறலாம்.. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதால், கிடைக்கும் நன்மைகளை நாங்கள் இங்கு பட்டியலிட்டுளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வாருங்கள். தேங்காய் எண்ணெய்யானது கூந்தல் சிக்கடைவதை தடுக்கும் கூந்தலானது. கூந்தல் அடிக்கடி சிக்கடைந்து கொண்டிருந்தால், அவற்றை எளிதில் சரிசெய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும் கூந்தல் வறட்சியுடன் அசிங்கமாக காணப்படும் போது, அவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. பொடுகு நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகு நீங்கிவிடும். தேங்காய் எண்ணெய் தலைமுடியின் மயிர்கால்களை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. தலை முடி உதிர்தல் என்பது தற்போது பெரும்பாலானோரின் பிரச்சனையாக இருக்கிறது இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும். வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நம்மை வறட்சியில் இருந்து பாதுக்காக்கிறது. வேலையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும். அதிகமாக ஒப்பனை செய்யும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். தேங்காய் எண்ணைகளை கடைகளில் வாங்குவதை தவித்து, மரச்செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் எங்கு கிடைக்கிறதோ, அங்கு வாங்கி பயன்படுத்துவது நல்லது. |
|||||
by Swathi on 02 Sep 2014 1 Comments | |||||
Tags: Coconut Oil Coconut Oil Benefits தேங்காய் எண்ணெய் கூந்தல் பராமரிப்பு சரும பராமரிப்பு | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|