LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    உலக சுற்றுலா Print Friendly and PDF

உலகத் தமிழர்கள் ஒன்றிணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “கடாரம் கொண்டான்” சர்வதேச மாநாடு கம்போடியாவில்

பத்திரிகை அறிக்கை (PRESS RELEASE)


வெளியீடு: அங்கோர் தமிழ்ச் சங்கம், சீனு ஞானம் டிராவல்ஸ் (கம்போடியா) & யாம் ஃபவுண்டேஷன் (சென்னை, இந்தியா)

உலகத் தமிழர்கள் ஒன்றிணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “கடாரம் கொண்டான்” சர்வதேச மாநாடு கம்போடியாவில்

அங்கோர் தமிழ்ச் சங்கமும் சீனு ஞானம் டிராவல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் கடாரம் கொண்டான்” சர்வதேச மாநாடு 2025 நவம்பர் 21–26 வரை கம்போடியாவின் சியம் ரீப் நகரில் உள்ள சிறப்புமிக்க பயான் ஈரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும். முக்கிய கல்வி அமர்வுகள்: நவம்பர் 22 & 23.

1986 முதல் 2016 வரையிலான 30 ஆண்டுகளில், நானும் என் நண்பர் திரு. ஞானசேகரனும் இணைந்து, மனிதகுல நலனை நோக்கமாகக் கொண்டு மொத்தம் 8 முறை உலகைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டோம்.

முதல் முறை மிதிவண்டியில் “அணு ஆயுத ஒழிப்பு விழிப்புணர்வு” குறித்து உலக நாடுகளுக்கு செய்தி கொண்டு சென்றோம். அதன் பின் மேலும் 7 முறை மோட்டார் வாகனங்களில் “மழைக்காடுகளை காப்போம்”, “சுற்றுச்சூழலை பாதுகாப்போம்”, “அண்டார்டிகாவை காப்போம்”, “உலக வெப்பமயமாதலைத் தடுப்போம்” போன்ற மனிதகுல நலக் கோஷங்களை முன்னிறுத்தி உலகத்தைச் சுற்றிப் பயணித்தோம்.

இந்த உலகப் பயணங்கள் எங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் பண்பாட்டு பொறுப்பையும் உலக மேடையில் அறியச்செய்த வரலாற்றுச் சாதனைகளாக அமைந்தன.

 

முன்னுரை (வரலாற்றுப் பின்னணி)

தென்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த சோழ பேரரசர்கள், ராசராச சோழனும் அவரது மகன் ராசேந்திரசோழனும் ஆவர். ராசராசன் இட்ட அடித்தளத்தை தனது பேராற்றலால் ராசேந்திரசோழன் கட்டியெழுப்பினார். பூமியை அளந்து பகுத்தல், ஆவணப்படுத்துதல், தொழில் வளர்த்தல், வரிமுறை, வாழ்க்கை முறை, நீர்மேலாண்மை/நில மேலாண்மை, நீதிமுறை, தானம் முதலிய துறைகளில் அவர்கள் எண்ணிலடங்கா சாதனைகள் புரிந்தனர். தந்தை ராசராசனின் தஞ்சாவூர் பெரிய கோயிலும், மகன் ராசேந்திரசோழனின் கங்கை கொண்ட சோழபுரமும்” காலங்களைக் கடந்து புகழ்பெற்ற சின்னங்களாய் today நிற்கின்றன.

இந்திய வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி, கடல் கடந்து பல தேசங்களை வென்ற மாமன்னன் முதலாம் ராசேந்திரசோழன்; தந்தையை மிஞ்சிய தனயனாக, உலக அரங்கில் தமிழரின் பெருமையை நிலைநாட்டினார். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில்:

கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு… சிங்காதனத் திருந்த செம்பியர்கோன்
என்று ராசேந்திரனின் கங்கை வெற்றி & கடார (கெதா) வெற்றியை கோலாகலமாகப் புகழ்கிறது.

 

பொருளுரை (சுருக்கமான வரலாறு)

பிறப்பு & பட்டப்பகை:
ராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவிக்கும் ஆடித் திருவாதிரையன்று பிறந்தவர் ராசேந்திரசோழன் (இயற்பெயர் மதுராந்தகன்; விருதுப் பெயர்கள்: முடிகொண்ட சோழன், உத்தமசோழன், விக்கிரமசோழன், பண்டிதசோழன்). ஆட்சி: கி.பி. 1012–1044. 1012-இல் இணை அரசனாகவும் 1014-இல் முழு அரசனாகவும்; 1017-இல் இலங்கை வெற்றி.

ஆட்சி பரப்பு:
தொல்காப்பியத்தின் “வேங்கடம்–குமரி” எல்லையைத் தாண்டி, தென் இந்தியா பெரும்பகுதி, இலங்கை, மேலும் தென்கிழக்காசிய நாடுகள் வரை சோழ ஆட்சியை விரிவுசெய்தார். ராசாதிராசன் திருமழபாடி கல்வெட்டில், வட கங்கை முதல் தென் இலங்கை, மேற்கு மகோதை (கேரளம்) முதல் கிழக்கு கடாரம் (கெதா) வரை சோழ மண்டல துல்லியமாகச் சுட்டப்பட்டுள்ளது.

கடற்படை & கடல்போர்:
இன்றைய தொழில்நுட்பங்கள் இன்றி, மாபெரும் கப்பற்படைகளை உருவாக்கி, வணிகப் பாதைகள் பாதுகாப்பு & கடற்கொள்ளையர் தடுக்கல் நோக்கில் சுமத்ரா/ஸ்ரீவிஜயம் பகுதிகளுக்கு வரை கடல்படையெடுப்புகளை நடத்தினார்; இதுவே அவருக்கு கடாரம் கொண்டான்” பட்டத்தைத் தந்தது. லெய்டன் செப்பேட்டும், மலேசியா கெதா கல்வெட்டும் இவ்வெற்றிக்குச் சான்று.
காலநிலை–நீரோட்ட அறிவியலை (காற்றுத்திசை, அலைநிலை, ஆமை-நீரோட்டப் பாதைகள்) நுணுக்கமாகப் பயன்படுத்தி கப்பல்களை இயக்கிய கடற்படைத் திறமை அன்னாளில் உலகச் சாதனை.

தலைநகர மாற்றம் & கட்டிடப் பெருமை:
போர்பயணங்களால் தஞ்சை விவசாயத்துக்கு இடையூறு அண்டாதபடி தலைநகரை கங்கை கொண்ட சோழபுரம்” நோக்கி மாற்றினார் (கி.பி. 1027). கங்கை நீரைத் தாயகத்துக்கு கொண்டு வந்த நினைவாக நகரத்திற்கும் தமக்கும் கங்கை கொண்ட சோழன்” என்ற பெயர் நிலைபெற்றது. இங்கு சோழகங்கம் எனும் பெரிய ஏரியும் (ஜலஸ்தம்பம் நினைவு), மிகப்பெரிய லிங்கமுடைய சிவாலயமும் உருவானது.
நிலதானங்கள்: ஈசாலம் ஊருக்குப் (திருவிராமீசுவரம் கோயில்) பிரமணர்/ஆசார்யர் நலனுக்காக இருமுறை நிலதானங்கள்.

 

பிற்கால பொற்காலம் (1025–1044):
வென்ற பகுதிகளை நேரடியாக இணைக்காது, அங்கு இருப்பாள் அரசர்களிடம் மீண்டும் ஒப்படைத்த கருணைமிக்க ஆட்சி; அமைதி–வளர்ச்சி மையமான பிற்கால சோழர்களின் பொற்காலம்”.
சோழ–கெமர் ஒத்துழைப்பு & அங்கோர்வாட்: 11-ஆம் நூற்றாண்டில் வணிக–பண்பாட்டு ஒத்துழைப்பு உச்சத்தை எட்டியது; இன்று அங்கோர் வாட் (500 ஏக்கர்) அந்த நட்புறவின் நித்தியச் சின்னம்.

முடிவுரை:
தோன்றின் புகழொடு தோன்றுக…” (குறள்) எனப் புகழடுக்கச் செய்த வீரர் ராசேந்திரசோழன் — கடலைவிட விரிந்த மனங்களை வென்ற மன்னன். தஞ்சை பெரியகோயிலும், கங்கை கொண்ட சோழபுரமும் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களாக, அவர்–அவர்தந்தையின் நற்பாலனத்தை உலகுக்கு என்றும் பறைசாற்றுகின்றன.

 

ஏன் கம்போடியாவில் “கடாரம் கொண்டான்”?

ராசேந்திர சோழனின் கடற்படை வெற்றி கெமர் மன்னர் சூர்யவர்மன் I ஆட்சியை வலுப்படுத்தி, தமிழ்–கெமர் நாகரிகத் தொடர்பை ஆழப்படுத்தியது. அந்த ஆயிரம் ஆண்டுப் பாலத்தை நாமும் இம்மாநாட்டால் புதுப்பிக்கிறோம்.

 

அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு சாதனைகள்

  • உலகத் தமிழ் மாநாடு (2018)
  • உலகக் கவிஞர் மாநாடு (2019 & 2023)
  • உலகப் பரதக் கலைவிழா (2019 & 2020)
  • சர்வதேச பாரதநாட்டியம் மாநாடு (2024 & 2025)
  • திருவள்ளுவர் சிலை திறப்பு விழா & கருத்தரங்கம் (2022)

இம்மாநாட்டின் நோக்கங்கள்

  • உலகத் தமிழர்களையும் கம்போடியாவையும் மீண்டும் இணைத்து, பண்பாட்டு & கடல் வரலாற்றுத் தொடர்பை உயிர்ப்பிக்க.
  • வரலாறு–பண்பாடு–வாணிபம்–சுற்றுலா துறைகளில் கூட்டாண்மை.
  • 2026-இல் ராஜேந்திர சோழர் & சூர்யவர்மன் I சிலைகள் நிறுவல் தீர்மானமும், தமிழ்–கெமர் கடல் வரலாற்று அருங்காட்சியகம் திட்டத் தொடக்கமும்.
  • வணிக & முதலீட்டு இணைப்பு: நவம்பர் 24, 2025 மாலை 6.00–9.00பிஸினஸ் மீட் (நெய்தொழில், சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளின் கம்போடியா அதிகாரிகள் × உலகத் தமிழ்த் தொழில்முனைவோர்).

வணிக & முதலீட்டு சந்திப்புகள் — சிறப்பு திட்டம்

நவம்பர் 21, 2025 (மதியம்):
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்காக கம்போடியாவில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான நில ஆய்வு / வெளிக்க்களப் பயணம் (Field Visit) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 22, 2025 (மாலை 6.00–9.00 மணி):
யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, கம்போடியா விவசாய அமைச்சக அதிகாரிகள் பங்கேற்று, கம்போடியாவில் உள்ள விவசாய முதலீட்டு வாய்ப்புகள், நிலப் பயன்பாடு, பயிர் வகைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி உலகத் தமிழ்த் தொழில்முனைவோருடன் விவாதிப்பார்கள்.

நவம்பர் 24, 2025 (மாலை 6.00–9.00 மணி):
யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, கம்போடியா நெய்தொழில் (Textile) அமைச்சக அதிகாரிகள் பங்கேற்று, நெய்துறை முதலீடுகள், உற்பத்தி, ஏற்றுமதி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து தமிழ்த் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுவார்கள். அத்துடன், கம்போடியாவில் ஒரு பல்கலைக்கழகம் (University) தொடங்குவதற்கான முன்மொழிவும், அதனூடாக முழுமையான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளைக் கொண்ட விரிவான மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்கும் திட்டமும் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்படும்

நவம்பர் 25, 2025 (மாலை):
யாம் ஃபவுண்டேஷனுடன் இணைந்து, கம்போடியா தேசிய பாரம்பரிய மருத்துவ மையம் (National Center for Traditional Medicine) பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த அமர்வில் பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான ஆராய்ச்சி, கல்வி, சிகிச்சை மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், சித்த மருத்துவத்தை கம்போடியாவில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரிக்க வேண்டுமெனும் அதிகாரப்பூர்வ கோரிக்கை இவ்வமர்வில் முன்வைக்கப்படும்.

 

உலகத் தமிழரின் ஒருமைப்பாட்டுக்கான அழைப்பு

கடாரம் கொண்டான் 2025” வரலாற்றை மட்டும் நினைவுகூர்வதல்ல; எதிர்காலத்திற்கான பாலம்—தமிழர் & கம்போடியா இணைந்து பண்பாடு–கல்வி–வாணிபம் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மேடை.

 

வெளியீடு:
அங்கோர் தமிழ்ச் சங்கம் & சீனு ஞானம் டிராவல்ஸ், சியம் ரீப், கம்போடியா & யாம் ஃபவுண்டேஷன் (சென்னை, இந்தியா)

 

PRESS RELEASE

Issued by: Angkor Tamil Sangam & Seenu Gnanam Travels, Siem Reap, Cambodia & YAAM Foundation (Chennai, India)

“Kadaram Kondaan” International Conference in Cambodia — A Historic Global Tamil Reunion

The “Kadaram Kondaan” International Conference, jointly organized by Angkor Tamil Sangam and Seenu Gnanam Travels, will be held from November 21 to 26, 2025, at the prestigious Bayon Era Hotel in Siem Reap, Cambodia.
The main academic sessions will take place on November 22 and 23.

From 1986 to 2016, over a span of 30 years, my friend Mr. Gnanasekaran and I traveled around the world eight times with the noble objective of serving humanity.
Our first journey was by bicycle, spreading the message of “Nuclear Disarmament Awareness” to countries worldwide.
We then undertook seven more world journeys by motor vehicles, promoting humanitarian causes such as “Save the Rainforests,” “Protect the Environment,” “Save Antarctica,” and “Prevent Global Warming.”
These global journeys became historic achievements that revealed our life’s purpose and cultural responsibility to the world stage.

 

Introduction (Historical Background)

The Chola emperors who ruled the southern land under one umbrella were Rajaraja Chola and his son Rajendra Chola. Rajaraja laid the foundation, and Rajendra, with his extraordinary power, built upon it magnificently.

They accomplished countless achievements in the fields of land measurement, documentation, industrial development, taxation, lifestyle reform, water and land management, judicial systems, and philanthropy.
Rajaraja’s Brihadeeswarar Temple in Thanjavur and Rajendra’s Gangaikonda Cholapuram still stand today as timeless monuments of glory.

Rajendra Chola I, the only king in Indian history to cross the seas and conquer multiple nations, surpassed even his father and elevated the greatness of Tamils on the world stage.

In the Tamil epic Muvarula, poet Ottakkoothar glorifies his victories:
“He who took the Ganges and Kadaram in his hand… and sat on the lion throne.”
This celebrates Rajendra’s conquest of the Ganges and Kadaram (Kedah).

 

Summary (Brief History)

Birth & Coronation:
Rajendra Chola, born to Rajaraja Chola and Tribhuvanamadevi on the Aadi Thiruvathirai star, was originally named Madhurantakan.
Titles earned: Mudikonda Cholan, Uttama Cholan, Vikrama Cholan, Pandita Cholan.
Reign: AD 1012–1044.
Became co-regent in 1012, full king in 1014, and conquered Sri Lanka in 1017.

Extent of His Empire:
Rajendra extended the Chola Empire far beyond Tolkappiyam’s boundary of “Vengadam to Kumari.” He ruled vast regions across South India, Sri Lanka, and Southeast Asia.
The Tirumalapadi inscription precisely records Chola dominion from the Ganges in the north to Sri Lanka in the south, and from Kerala in the west to Kadaram (Kedah) in the east.

Navy & Naval Warfare:
Without modern technology, he built a massive naval fleet and conducted maritime expeditions as far as Sumatra/Srivijaya, defending trade routes and eliminating piracy.
This earned him the title “Kadaram Kondaan” (Conqueror of Kadaram).
The Leiden copper plates and Kedah inscriptions confirm this victory.

He mastered climate and ocean science, using wind direction, tides, and ocean currents to navigate ships with extraordinary precision—an unmatched maritime achievement of his era.

Capital Relocation & Architectural Grandeur:
To protect Thanjavur’s agricultural productivity from military campaigns, he relocated the capital in AD 1027 to Gangaikonda Cholapuram.
To commemorate bringing the sacred Ganges water to his land, he named both the city and himself “Gangaikonda Cholan” (The Chola Who Brought the Ganges).
He created the massive Cholagangam Lake (a water monument) and built the grand Gangaikonda Cholisvarar Temple with one of the largest Shiva lingams in history.

Golden Later Period (1025–1044):
He did not annex conquered territories by force but returned them to local rulers, practicing compassionate governance.
This established peace and prosperity known as the “Golden Age of the Later Cholas.”

Chola–Khmer Collaboration & Angkor Wat:
In the 11th century, Tamil–Khmer trade and cultural relations reached their peak.
Angkor Wat (500 acres) stands today as an everlasting symbol of this friendship.

Conclusion:
Rajendra Chola I, the king who conquered hearts broader than the ocean, fulfilled the Thirukkural ideal:
“Let one be born with glory…”
The Brihadeeswarar Temple and Gangaikonda Cholapuram, now UNESCO World Heritage Sites, continue to proclaim the good governance of him and his father to the world.

Why “Kadaram Kondaan” in Cambodia?

Rajendra Chola’s naval victories strengthened the reign of Khmer King Suryavarman I and deepened the Tamil–Khmer civilizational bond.
Through this conference, we are reviving a 1,000-year-old cultural bridge.

 

International Achievements of Angkor Tamil Sangam• World Tamil Conference (2018)
• World Poets’ Conference (2019 & 2023)
• Global Bharatanatyam Festival (2019 & 2020)
• International Bharatanatyam Conference (2024 & 2025)
• Thiruvalluvar Statue Inauguration & Symposium (2022)

 

Objectives of the Conference

• To reconnect World Tamils and Cambodia by reviving cultural and maritime history.
• To promote collaboration in history, culture, trade, and tourism.
• To implement the decision to install statues of Rajendra Chola I and Suryavarman I in 2026, and to launch the Tamil–Khmer Maritime History Museum Project.
• To facilitate business and investment opportunities: Business Meet on November 22nd ,24th ,25th  2025 (6.00–9.00 PM) with Cambodian officials from the Textile, Health, Tourism, and Agriculture sectors and global Tamil entrepreneurs.

 

Business & Investment Meets — Special Program

November 21, 2025 (Afternoon):
A field visit will be organized for the conference delegates to explore agricultural lands and investment opportunities in Cambodia.

November 22, 2025 (6.00–9.00 PM):
In collaboration with YAAM Foundation, officials from the Cambodian Ministry of Agriculture will

 

 

participate and discuss agricultural investment opportunities, land use, crop varieties, and export potential with global Tamil entrepreneurs.

November 24, 2025 (6.00–9.00 PM):
In collaboration with YAAM Foundation, officials from the Cambodian Ministry of Education  will participate and discuss to Establish Cambodian University of Oriental Studies and to Establish a Allopathy Medial College at Siam Reap.

November 25, 2025 (Evening):

In collaboration with YAAM Foundation there will be a discussion with officials of Textile Ministry to Explore the Possibility of Investment in Textile Industry.
In collaboration with YAAM Foundation, representatives from the Cambodian National Center for Traditional Medicine (National Center for Traditional Medicine) will participate.
This session will focus on research, education, treatment, and collaboration opportunities in traditional medicine.
Additionally, an official request will be made to recognize Siddha Medicine as a government-approved traditional medical system in Cambodia.

 

A Call for Global Tamil Unity

“Kadaram Kondaan 2025” is not just a remembrance of history;
it is a bridge to the future, creating new opportunities in culture, education, trade, and tourism through collaboration between Tamils and Cambodia.

 

Issued by:
Angkor Tamil Sangam & Seenu Gnanam Travels, Siem Reap, Cambodia & YAAM Foundation (Chennai, India)

 

by Swathi   on 15 Oct 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்
2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் 2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள்
சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள் சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.