LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

 

 தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக்குறைவால் சென்னையில்  ஆகஸ்ட் 2ம் தேதி காலமானார். அவருக்கு வயது 71.

மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராகத் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கிய இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா எனப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், பல மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேவர் மகன், சதி லீலாவதி, துள்ளாத மனமும் துள்ளும், தெனாலி, குஷி, சிங்கம் 2, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் கடைசியாகச் சாகசம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரின் அடையாளமே  அவரின் சிரிப்பு தான். இவர் சிரிக்க ஆரம்பித்தால் சில வினாடிகள் சிரித்துக் கொண்டே இருப்பார். மேடை நாடகம், விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எனப் பலவற்றிலும் அசத்தி உள்ளார்.

அதுமட்டுமல்ல இவர் தனது இளம் வயத்தில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அடையாற்றில் உள்ள அவரது வீட்டில்  காலமானார். 

 பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

 

by hemavathi   on 04 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.