LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....

அரண்மனை, டார்லிங், காஞ்சனா 2, டிமான்டி காலனி என தற்போது பேய் படங்களின் ராஜ்ஜியம் தான் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. தற்போது வெளியான மாசு என்கிற மாசிலாமணி படமும் ஓரளவுக்கு ஹிட் அடித்துள்ளது. இதனால் தயாரிப்பில் இருக்கும் பேய் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விரைவில் பேய்ப் பட சீசன் முடிவுக்கு வருமோ என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் காமெடி படங்கள் தான். உதாரணமாக வரும் வாரம் சந்தானத்தின் இனிமே இப்படிதான் படம் வெளியாகிறது. இது முழுக்க முழுக்க காமெடி படம். இதே தினத்தில் வெளியாகவிருக்கும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திலும் காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அதாவது ஜூன் - 19 அன்று வடிவேலுவின் எலி படம் வெளியாகவிருக்கிறது. அதே தினத்தில் தான் இன்னொரு காமெடி படமான அருள் நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் படமும் ரிலீசாகிறது. ஜூன் 26 அன்று சிம்பு நடித்த வாலு படம் வெளியாகிறது. இதுவும் முழுக்க முழுக்க காமெடி படமே. இந்தப் படங்கள் தவிர கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 49-ஒ மற்றும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படங்களும் தயாராகி வருகின்றன. இந்தப் படங்கள் உட்பட மேலும் பல காமெடி படங்கள் ரிலீசாகி தயாராகி வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு படம் சூப்பர் ஹிட்டானால் காமெடி சீசன் தொடங்குவது உறுதி...

by CinemaNews   on 10 Jun 2015  0 Comments
Tags: Comedy Seasons   Tamil Cinema   தமிழ் சினிமா   காமெடி படங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மறைமொழி - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் சொல்லும் செயலும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் மெய்வேல் பறியா நகும்! - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் உடையர் எனப்படுவது...! - கி. ஆ. பெ. விசுவநாதம்
குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம் குடியும் குறளும் - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் இரந்து வாழும் வாழ்வு - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கூத்தாட்டு அவைக்குழாம்? - கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறளில் கயமை - கி. ஆ. பெ. விசுவநாதம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.