“மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
மாநில உரிமைகளுக்கான முதல் குரல், தமிழகத்திலிருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும். அனைத்து மாநிலங்களின் நலன் கருதி இந்த உயர் மட்டக் குழு அமைக்கப்படுகிறது. இதில் ஓய்வுபெற்ற முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்.