|
||||||||
உங்கள் மாவட்டத்திற்குரிய திருக்குறள் நூல்கள் உங்களுக்கு வந்திருந்தால் அதை பெற்று பத்திரமாக வைக்கவும் |
||||||||
19 Aug, 2023 வணக்கம், அதற்குள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் உங்கள் மாவட்ட ஆட்சியர் , தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , நூலகத்துறை, தலைமைக் கல்வி அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு ஒரு கடிதம் தயார்செய்து உங்கள் பெயரை மாவட்ட தொடர்பாளராகக் குறிப்பிட்டு நூல்களை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும். உங்கள் மாவட்டத்தில் மேலே உள்ள பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்கள், தொடர்பு குறித்து அறிந்துகொள்ளவும். நேரில் சந்தித்து தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். முதல்முறை என்பதால் கேட்பவர்களுக்கு நூல்கள் வழங்கலாம் என்ற நோக்கில் பொதுவெளியில் பரப்புரை செய்தோம். அதில் பதிவுசெய்த அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமே தற்போது நூல்கள் வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக மேலும் கோரிக்கை வைத்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும். ஆண்டுக்கு 2000 நூல்கள் வரை ஒரு மாவட்டத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு முன்பு, உங்கள் மாவட்ட ஆட்சியர், CEO , DEO , மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , மாவட்ட நூலக அலுவலர் ஆகிய அனைவருக்கும் அரசின் முற்றோதல் பரிசுக்கு தயார்செய்யும் வகையில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் முன்னெடுக்கும் இலவச நூல் வழங்கி, இலவசப் முற்றோதல் பயிற்சி வழங்கும் செயல்பாட்டை விளக்கி கடிதம் அனுப்பப்படும். மாநிலக் கல்வியமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்த இத்திட்டம் மாவட்ட அளவில் வெற்றிகரமாக செயல்பட அடுத்த கட்டமாக நூல் வழங்கும் நிகழ்ச்சி, முற்றோதல் இலவசப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிக்காக தயாராவோம். திங்கள் இரவு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளவும். சூம் இணைப்பு விரைவில் பகிரப்படும். காணொளி வழியாக , முடியாதவர்கள் கைபேசி வழியாக இணையவும். அனைத்து மாவட்டம் குறித்தும் உரையாடப்படும். புலனக்குழுவை (Whatsapp )தொடர்ந்து பார்க்கவும். நன்றி. |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 20 Aug 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|