சுதந்திர இந்தியாவில் 1952ல் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடையவில்லை, ஒரே கட்சியாகத்தான் இருந்தது (*). 1952 தேர்தலில் 131 இடங்களில் போட்டியிட்டு 62 இடங்களில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சி 1957ல் 55 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 1962 தேர்தலில் 68 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 1967 ல் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஒரு பிரிவினர் பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பிறகு 1967 லிருந்து கடந்த 2011 வரை ஒவ்வொரு தேர்தலிலும் வென்று தங்கள் உறுப்பினர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி வந்தனர். ஆனால், இந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவர்களால் அனுப்பமுடியவில்லை.
வருடம் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) |
மொத்தம் |
1952 |
62 |
0 |
62 |
1957 |
4 |
0 |
4 |
1962 |
2 |
0 |
2 |
1967 |
2 |
11 |
13 |
1971 |
8 |
0 |
8 |
1977 |
5 |
12 |
17 |
1980 |
9 |
11 |
20 |
1984 |
2 |
5 |
7 |
1989 |
3 |
15 |
18 |
1991 |
1 |
1 |
2 |
1996 |
8 |
1 |
9 |
2001 |
5 |
6 |
11 |
2006 |
6 |
9 |
15 |
2011 |
9 |
10 |
19 |
2016 |
0 |
0 |
0 |
|