LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி !!

கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் இளையராஜா,  தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.


இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.


போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.


சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறாராம். என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்க உள்ளார்.

by Swathi   on 16 Oct 2014  0 Comments
Tags: Ilayaraja Fans   Ilayaraja Competition   Music Director Ilayaraja   இளையராஜா   இசையமைப்பாளர் இளையராஜா        
 தொடர்புடையவை-Related Articles
இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்... இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...
பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !! பேஸ்புக்கில் இணைந்த இளையராஜா !!
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ் சமூககொடுமைக்கு சாட்டையடி கொடுக்குமாம் - டூரிங்டாக்கிஸ்
இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி !! இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு போட்டி !!
நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !! நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!
சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !! சமூக சேவையில் ஆர்வம் காட்டும் இளையராஜா !!
உலகின் சிறந்த 25 இசை அமைப்பாளர்களின் பட்டியல் 9 வது இடத்தில் இளையராஜா !! உலகின் சிறந்த 25 இசை அமைப்பாளர்களின் பட்டியல் 9 வது இடத்தில் இளையராஜா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.