LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வாழ்வியல் Print Friendly and PDF

நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்

எனக்கு ஒரு போன் கால்  வந்தது " சார் உங்களுக்கிட்ட பேசணும் , என்பேரு வெள்ளைச்சாமி ஏ பையன் ராஜேஷ் சம்பந்தமா " சொல்லுங்க அய்யா என் சொல்லி அவரிடம் கிட்டதட்ட 10 நிமிடம் பேசினேன் , தன் மகன் படித்து முடித்து விட்டான் வேலைதேடி அலைகிறான் உதவ முடியுமா என் கேட்டார் .


அவர்  பேசிய பேச்சில் அக்கறையும் கவலையும் கலந்து இருப்பதை  உணர்ந்தேன் , அய்யா உங்க மகனை பேச சொல்லுங்க  கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன் .இரண்டு நாள் கழித்து ஒரு போன் " சார் நான் ராஜேஷ் பேசுறேன் அப்பா உங்களிடம் பேச சொன்னார்" சொல்லுங்க ராஜேஷ் என கூறி அவர் பேசுவதை பொறுமையாக கேட்டேன் , ஒரே விரத்தியாக வாழ்க்கையில் நம்பிக்கையில்லாமல் இருப்பதை ராஜேஷின் வார்த்தைகள் வெளிப்படுத்தியது .

அப்படி என்னதான் ராஜேஷ் சொன்னார் உங்களுக்கு தெரிய வேண்டுமா ?ரெசுமே(resume)அணுச்சிட்டேன், யாரும் வேலை கொடுக்கவில்லை,ஒரே அப்செட் ஆ இருக்கு ? ஏன்தான் இந்த படிப்பை படித்தோனோ... இப்படி ராஜேஷ் பேச பேச எல்லாம் உண்மைதான் அவர்  கூறிய காரணங்கள் நியாயமானவைகள் போல  தோன்றின.

ஒரு உளவியல் உண்மையை கூற விரும்புகின்றேன் .நீங்கள் ஏன்  அடையவில்லை  அல்லது கிடைக்கவில்லை என் காரணங்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருப்பீர்களேயானால் அதை உண்மை என் உங்கள் மனம் எடுத்துக்கொள்ளும்.

உதாரணமாக "எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது" "எனக்கு ஆங்கிலம் கஷ்டமா இருக்கு " என்னால எல்லாம் அதிக மார்க்  எடுக்க முடியாது",இந்த படிப்புக்கு வேலை இல்லை",வாழ்க்கையே கஸ்டமா இருக்கு , இப்படி பல காரணங்களை பட்டியலிடலாம் .

நீங்கள் இதையே திரும்ப திரும்ப கூறினீர்கள் என்றால் அது  உண்மை போல உங்கள் மனம் ஏற்படுத்திவிடும் , அது  மட்டுமில்லாமல் என்ன  நினைத்தீர்களோ , பேசினீர்களோ அப்படியே இருப்பீர்கள் அல்லது ஆகப்போகிறீர்கள் ...
 

சரி இப்போது ராஜேசுக்கு என்ன நடந்தது, நான் என்ன பேசினேன் என்பதை பார்ப்போம், நான் முன்பே கூறியது போல அவர் பேசிய காரணங்கள் அவருக்கு வேண்டுமென்றால் உண்மையாக  இருக்கலாம், என்னைப்பொறுத்தமட்டில்  நம் முன்னேற்றதை  தடுக்கும் தடுப்பு சுவராக நான் பார்க்கிறேன் ... வாய்ப்பு இல்லை, வழி இல்லை என்று முடிவு எடுத்துவிடீர்களானால் எப்படி முயற்சி செய்வீர்கள் ? அப்படியே செய்த்தாலும் அது வெறும்  கடமைக்காக இருக்கும் .
 

ராஜேஷிடம் சில கேள்விகளை கேட்டேன். எந்தனை கம்பெனிக்கு முயற்சி சேய்தீர்கள், எத்தனை job போர்டெலில் பதிவிட்டிர்கள் , எத்தனை பேரிடம் உதவி கேட்பீர்கள் அல்லது ஷேர் சேய்தீர்கள், தமிழ் நாட்டில், இந்தியாவில் , உலகத்தில் , எத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன ,நீங்கள்  ஏன் மற்றவருக்கு வாய்ப்பை உருவாக்கும் தொழிலை  தொடங்க அல்லது கற்றுக்கொள்ள அனுபவத்தை பெற ஏதாவது செய்யக்கூடாது இப்படி பல கேள்விகளை கேட்டேன் .

நம் தமிழ்நாட்டில் மட்டும் உங்கள் படிப்பு சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன அது மட்டுமில்லாமல் இணைய சேவை வந்ததற்கு பிறகு உலகமே கையுக்குள் வந்துவிட்டது , லச்சக்கணக்கான வாய்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளன .
 

வெறும் ஒரு சில நிறுவனத்திற்கு முயற்சிசெய்த்துவிட்டு   வேலையே கிடைக்கவில்லை என் நினைக்கும் மனுபாவத்தை என்னவென்று  சொல்வது . முயற்சி எல்லோரிடமும் இருக்கிறது ஆனால் இந்த காலக்கட்டத்தில் முடியும் வரை முயற்சிப்பேன் , கனவு கண்டேன் நடக்கவில்லை என்று கூறாமல்   இதையே  நனவாகும் வரை காண்பேன் போன்ற சிறந்த மனோபாவம் தேவைப்படுகிறது .
 

நிறைய மனிதர்கள் வெற்றி நம்மை தேடி வரவேண்டும் என் நினைக்கிறார்கள் , அப்படி வராத பச்சத்தில் வாழ்க்கையாய் குறைகூற ஆரம்பித்துவிடுகிறார்கள், இதையே வெற்றியாளர்கள் வாய்ப்பை தேடி செல்கிறார்கள் அல்லது உருவாக்குகிறார்கள். இந்த உலகம் உள்ளவரை புதுப் புது வாய்புக்கள் வரத்தான் போகிறது , இவ்வளவு பிரமாண்டமான உலகில் நாம்  வாழ வாய்ப்பு  இல்லாமலா போய்விடும் ...வெற்றி அடைந்த  அனைவருமே பல சவால்களை கடந்து சாதனையாளர்களாக இன்று இருக்கிறார்களென்றால் , எல்லா சூழலும் சாதகமாக இருந்ததில்லை , நம்பிக்கையும் விடாமுயற்சியுடன்   சோதனையை சாதனையை மாற்றி இருக்கிறார்கள்.

இந்த காலத்தில் அதிகம் நம்பிக்கை ஆளுமைகள் தேவைபடுகிறார்கள்..உங்களுக்கு ஒரு ஆளுமையை கூர விரும்புகின்றேன்..

நம் எல்லோருக்கும் தெரியும் வர்தா புயலின் பாதிப்பு , ஆயிரக்கணக்கான  மரங்கள் வேரோடு சாய்ந்தன.ஆசை ஆசையாய் பார்த்த ,வளர்த்த மரங்கள் மரணித்தது இன்று நினைத்தாலும் மனம் மிக வேதனைப்படுகின்றது, கண்ணீரை வரவைக்கிறது .

இதையே வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாமா!  கோடிக்கணக்கான மரங்கள், மனிதர்களை போல  காரணங்கள் கூறமுடியாது , வெயில் அதிகமாக இருக்கிறது , மழை புயல் என்றால் வீட்டில் அடைந்து கொள்கிறோம் , ஏதாவது ஆபத்து என்றால் தப்பிக்க , இடம் விட்டு இடம் மாற முடியும் .உதவி  கோரமுடியும் .

அனால் இருந்த இடத்தை விட்டு செல்லாமல் அவ்வளவு பேய் காற்றையும்  புயலையும் தாங்கி என்னை  என்ன செய்ய முடியும் என்று தலைநிமிர்ந்து நிற்கும் ஒவ்வொரு மரமுமே தன்னம்பிக்கைக்கு உதாரணம் தான் .

மரங்கள் தண்ணீர் இல்லையே என் கண்ணீர்விட்டு அழுவதில்லை, தற்கொலைக்கு முயற்சிப்பதில்லை , யாரிடமும் புலம்புவதுமில்லை,விரக்தி அடைந்து முயற்சியை கைவிட்டு கவலைகொள்வதுமில்லை ...

 
மரங்கள் நீரை தேடி செல்கின்றன, இலையுதிர்  காலத்தில் தன் மொத்த இலைகளை உதித்தாலும் நம்பிக்கையை மட்டும்  உதிப்பதில்லை ,எல்லா சூழலையும்  எதிர்கொள்கின்றன ... காலம் மாறும் என நம்பிக்கையோடு இருக்கின்றன , வெட்ட வெட்ட துளிர்கின்றன ...மரமே ஓ  மரமே! புதருக்கு ஞானம் தந்த மரமே...

ஒவ்வொரு மரத்தை கடந்து செல்லும்பொழுதும் எப்படி மொபைல் சார்ஜ் செய்கிறோமோ  அது போல நம்மை நம்பிக்கையான எண்ணங்களால் சார்ஜ் செய்யலாமே !

 
காரணம் சொல்லுபவர்கள் காரியம் செய்வதில்லை , காரியம் செய்பவர்கள் காரணம் சொல்வதிலை வரிகளை போல காரணம் கூறாமல் செய்வதற்கான ஒரு சில காரணங்களை கண்டுபிடியுங்கள் .

என்னால் முடியும் , எதையும் சாதிக்க என்னால் முடியும் , வளமான வாழ்கையை உருவாக்குவேன் எப்படி நீரைத்  தேடி வேர் செல்கிறதோ  அதைபோல  காரணம்  சொல்லாமல் வாய்ப்பை தேடி செல்வேன் . அடைவேன்  வெற்றி அடைவேன் என உறுதி கொள்ளுங்கள் ... நிச்சயம் வாழ்க்கை வசந்தமாகும் .

Udhayasandron
International Human Resource Trainer
world record holder (Non stop 72 HoursTraining-4 Days and 3 Nights)
Make a Positive Difference...
Mobile : 9171171473 / 8825542520
Email : udhayasandron@gmail.com

by Swathi   on 30 Aug 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
யாருக்கான பெருமை இது ? (June Pride) யாருக்கான பெருமை இது ? (June Pride)
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
வளைகுடா நாடு  ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1 வளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1
இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில
The beauty of weddings in Tamil culture The beauty of weddings in Tamil culture
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!! நாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!!
கருத்துகள்
24-Mar-2020 14:16:33 sivakumar said : Report Abuse
அருமையான தன்னம்பிக்கை கட்டுரை ..வழிகாட்டி நன்றி சார்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.