|
||||||||
இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்! |
||||||||
![]()
லண்டனில் வேலியன்ட் (Valiant) எனும் தலைப்பில் 08.03.2025 அன்று நடைபெற இருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை உலக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்கள், சிம்பொனி படைக்கும் முதல் இந்தியர் என்ற உச்சத்தை எட்டியிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பெருமையடையச் செய்திருக்கிறது.
தமிழ் மக்களின் நாடி, நரம்புகள் முழுவதிலும் தன் இசையைப் புகுத்தி அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் இசைஞானி இளையராஜாவின் இசைத் திறமை இந்தியாவின் பெருமை என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் சிம்பொனி 2025 நிகழ்ச்சி சிறப்பாக அமைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
|
||||||||
by hemavathi on 07 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|