LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கார்ன் புலாவ் (Corn Pulao)

தேவையானவை :


பாசுமதி அரிசி - 2 கப்

சோள முத்துக்கள் - 2 கப்

சின்ன வெங்காயம் - 8

பச்சைமிளகாய் - 2

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

கொத்துமல்லி இலை - ஒரு கொத்து

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பூண்டு - 3 பல்

மஞ்சள்தூள் - சிறிது

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

தயிர் - 2 டீஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

முந்திரி - 10

திராட்சை - 10

பட்டை - 1

பிரிஞ்சி இலை - 2

சீரகம்

பெருஞ்சீரகம்செய்முறை:


1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக தண்ணீரில் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் இறக்கிவிடவும்.சோளக்கதிரை உப்பு சேர்த்து வேக வைத்து சோளத்தை உதிர்த்துக்கொள்ளவும்.


2.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.


3.தாளித்த பின் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.இதனுடன் சோளத்தை சேர்த்து வதக்கவும்.இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.எல்லாம் நன்றாக வதங்கியபிறகு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.குறைவான தணலில் வேக வைக்கவும்.


4.மறுபடியும்  கொதிக்கும்போது மூடியைத் திறந்து கொத்துமல்லி இலை,எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு ஒரு ஈரத்துணியைப் பிழிந்து பாத்திரத்தின் மேல் போட்டு அதன் மேல் மூடியைப்போட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

Corn Pulao

Ingredients for Corn Pulao:

 

Basmati Rice-2 Cup

Corn-2 Cup

Small Onion-8

Green Chillies-2

Lemon Juice-1 Tsp

Coriander Leaves-1 Bunch

Ginger-1 Small Piece

Garlic-3 Flakes

Turmeric POwder-Little

Chilly Powder-1 Tsp

Salt-as Needed

Curd-2 Tsp

 

Ingredients for Tempering:

 

Ghee-1 Tbsp

Cashew Nuts-10

Raisin-10

Cinnamon-1

Bay Leaf-2

Cumin

Fennel

 

Procedure to make Corn Pulao:

 

1. Soak the rice for 10 minutes and drain the water. Then put a pan on flame. add ghee and rice and fry sligthly. When the color gets change, remove from flame. Boil the corn along with and salt.

2. Chop the onion and peel the chilies. Chop the ginger and garlic. In a deep wide pan, add oil and given seasoning ingredients and fry well.

3. Then add onion, ginger and garlic and saute well. Then add corn and fry well. Now add chilly powder, turmeric powder, curd and salt. Then add 2 cup of water and check the taste of salt. When water starts boiling, add rice and stir gently. Cover the pan and allow medium flame to boil.

4. Finally garnish with coriander leaves and lemon juice. Stir well, cover the pan with wet cloth and cover a plate on top and allow medium flame for 10 minutes. Corn pulao is ready to tate.

 

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.