LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

மாட்டுப் பொங்கல்

     உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

 

"பட்டிப் பொங்கல்":

 

     பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள்  “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை "பட்டிப் பொங்கல்" எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது. உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை, கால்நடைகளைபோற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும்.இப் பொங்கல் பொங்குவதனால் "பட்டி" பெருகும் என்பது ஐதீகம்.

 

     உழவுக்கும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், நீர் இறைக்கும் சூத்திரத்தைச் சுற்றுவதற்கும் இன்னும் பல தேவைகளுக்கு எருது மாடுகளும், பால், சாணம், இனப்பெருக்கத்திற்கு பசு மாடுகளும் பல வகையில் உழவனுக்கு உதவி செய்கின்றன. சில சந்தற்பங்களில் பசு மாடுகள்கூட எருது மாட்டின் வேலைகளைச் செய்கின்றன. மாட்டுப் பொங்கல் தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதிக் குறி வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.

 

ஜல்லிக்கட்டு:

 

     பொங்கல் பண்டிகையுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு விஷயம் இருக்கிறது. அதுதான் ‘ஜல்லிக்கட்டு’. இளம் காளையர் நிஜக் காளைகளை அடக்கும் விளையாட்டு இது. இன்றும் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள். இந்த ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடத்தப்பட்டாலும், அனங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இதேபோல சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், ‘ மஞ்சு விரட்டு’ என்ற பெயரில் ஜல்லிக் கட்டுகள் நடத்தப்படுகின்றன.

by Swathi   on 17 Aug 2012  2 Comments
Tags: மாட்டுப் பொங்கல்   பொங்கல்   பொங்கல் விழா   மாட்டு பொங்கல்   ஆட்டு பொங்கல்   Pongal   Pongal Vizha  
 தொடர்புடையவை-Related Articles
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்... பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில்  தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
சப்பானியர்களுடன் பறையாட்டம், தங்கர் பச்சானின் தமிழ்மண் சார்ந்த பேச்சு, தங்கமகன் மாரியப்பனுடன் ஒரு உரையாடல் என களைகட்டியது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா... சப்பானியர்களுடன் பறையாட்டம், தங்கர் பச்சானின் தமிழ்மண் சார்ந்த பேச்சு, தங்கமகன் மாரியப்பனுடன் ஒரு உரையாடல் என களைகட்டியது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி - சென்னையில் பிரம்மாண்ட பேரணி !! தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி - சென்னையில் பிரம்மாண்ட பேரணி !!
பொங்கல் வெளியீடுக்கு தயாராகும் படங்கள் ஒரு பார்வை... பொங்கல் வெளியீடுக்கு தயாராகும் படங்கள் ஒரு பார்வை...
தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி. தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி.
கருத்துகள்
23-Jun-2015 00:40:39 omprakash said : Report Abuse
not able to save any file so please help me .
 
23-Jun-2015 00:36:47 ஓம்பிரகாஷ் said : Report Abuse
டியர் சார், எப்படி இருக்கீங்க காபி பண்ற மாதிரி இருக்கனும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.