LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- நண்டு (Crab)

நண்டு மசாலா (Crab Spices)

தேவையானவை : 


நண்டு - 10

காய்ந்த மிளகாய் - 2

பச்சைமிளகாய் - 2

தக்காளி - 2 கப் (நறுக்கியது)

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - ஒரு கப்

வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது - 5 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

கடுகு, எண்ணெய், உப்பு - தேவைகேற்ப 

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது (பொடித்தது)


செய்முறை:


1.முதலில் தேங்காய்த்துருவலுடன்  பச்சை மிளகாய் சேர்த்து சேர்த்து மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாயினைப் போட்டு ஐந்து விநாடிகள் வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினையும் சேர்த்து நன்கு வதக்கவும்.


2.வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் ஊற்றி, தீயின் அளவைக் கூட்டி நன்கு வதக்கவும். எண்ணெய் வற்றும் வரை வதக்கவும். அதன் பின் தீயின் அளவைக் குறைத்து தேங்காய் விழுதினைச் சேர்க்கவும்.


3.இரண்டு நிமிடங்கள் பிரட்டிய பின் நண்டுகளையும், கறிவேப்பிலையையும் போட்டு, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தீயின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையினைத் தூவி பரிமாறவும்.

Crab Spices

Ingredients for Crab Spices : 


Crabs - 10,

Dry Chilies - 2,

Green Chilies - 2,

Tomato - 2 Cups(Chopped),

Turmeric Powder - 1/2 Tsp,

Coconut Shreded - 1 Cup,

Onion - 1 Cup(Chopped),

Ginger, Garlic Paste - 5 Tbsp,

Chilli Powder - 1/2 Tsp,

Mustard, Oil and Salt - as needed,

Curry Leaves, Coriander leaves - Little(Chopped).


Method to make Crab Spices : 


1. Mix up shreded coconut and green chilies together in a mixi. Grind it like a paste. Heat oil in a frying pan then add mustards allow it to season it. Then add dry chilies and allow it to fry for 5 seconds then add ginger, garlic paste along with them, then fry it well.

2. After it fried then add chilli powder, turmeric powder and salt and allow it to fry for half minute. Then add tomatoes and fry them. It does not stick in bottom so that add some water and stir it in a high flame. Then fry it till the oil is reduced. Then add the grinded coconut paste along with them.

3. Boil it for 2 minutes then add the crab pieces, curry leaves and 1-1/2 glass of water and allow it to boil well in a low flame. Stir it frequently and boil it for 20 minutes. Then turn off the stove then add the coriander leaves.


Crab Spices is ready now.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.