LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

கத்தரிக்காய் மசாலா குழம்பு (Brinjal Spices Curry)

தேவையானவை :


கத்தரிக்காய் - அரைக் கிலோ

மிளகாய் வற்றல் - 2

வெல்லம் - ஒரு பாக்கு அளவு

கடுகு - அரைத் டீஸ் ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரைத் டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 150 மி.லி.

கறிவேப்பிலை - சிறிது

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

பச்சைமிளகாய் - 2

தேங்காய் - அரை மூடி

மல்லிவிதை - ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு - 6 பல்

எள்ளு - ஒரு டீஸ் ஸ்பூன்

வெங்காயம் - கால் கிலோ

புளி - ஒரு எலுமிச்சை அளவு



செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் நீளவாக்கில் நான்காக கீறிய  கத்தரிக்காய்களைப் போட்டு பொன்னிறமாக மாறும்வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் மல்லிவிதை, மிளகாய்வற்றல் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வறுக்கவும்.


2.வறுத்தவற்றை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.எள்ளினை தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.


3.வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைக் கலந்து வேகவிடவும்.பிறகு அதில் கத்தரிக்காய்கள் மற்றும் எள்ளுப்பொடி போட்டு மூடி வைத்து வேகவிடவும்.குழம்பானது சற்றுக் கெட்டியானதும் வெல்லத்தை அதில் போட்டு வேகவிடவும். 


4.குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கி.மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.

Brinjal Spices Curry

Ingredients for Brinjal Spices Curry:

 

Brinjal-1/2 Kg

Dry Chilly-2

Jaggery-Little

Mustard-1/2 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Sesame Oil-150 Ml

Curry Leaves-Little

Ghee-2 Tbsp

Salt-as Needed

Green Chilly-Cup

Corinader-1 Tbsp

Garlic-6 Flakes

Sesame Seeds-1 Tsp

Onion-1/4 kg

Tamarind-Lemon Size

 

Procedure to make Brinjal Spices Curry:

 

1. Heat oil in a pan, add chopped brinjals and fry till get golden color and set aside. In the same pan, add corinader seeds, dry chilly and onion and fry well.

2. Grind the fried ingredients together with coconut and garlic. Fry the sesame separately and grind well. Soak the tamarind in water and extract the juice.

3. Heat oil in a pan, add tamarinnd juice and ground masala powders and allow to boil well. Then add brinjals and sesame powder and let to boil. When the curry comes thick consistency, add jaggery and boil well.

4. Finally season the mustard and curry leaves and put in to curry. Tasty brinjal spices curry is ready to taste.

by kowshika   on 16 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.