|
||||||||
மிளகு குழம்பு (milagu kulambu) |
||||||||
தேவையானவை : சாம்பார் வெங்காயம் -10பொடியாக நறுக்கியது மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் பூண்டு - 1 புளி -தண்ணீர் ஒரு கப் சாம்பார் பொடி - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் நல்லெண்ணை - 4 ஸ்பூன் கடுகு ,கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் -10பொடியாக நறுக்கியது மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் பூண்டு - 1 புளி -தண்ணீர்ஒரு கப் சாம்பார் பொடி - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் நல்லெண்ணை - 4 ஸ்பூன் கடுகு ,கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 ஸ்பூன் செய்முறை: 1.முதலில் ஒரு கப் புளிதண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் , ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு மிளகையும், சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். 3.பின்பு ஒரு கடாயில்ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும். 4.மீதி எண்ணையை கடாயில் விட்டு . அதில் கடுகைப் போட்டு தாளித்து , வெங்காயம், கறிவேப்பிலைப் வதக்கவும். அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். 5.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீரையும்சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும். |
||||||||
by kaviyasri on 24 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|