|
||||||||||||||||||
சிக்கன் சாப்பீஸ் (chicken chappies) |
||||||||||||||||||
தேவையானவை: கோழி – 1/2 கிலோ வெங்காயம் – 1/2 கிலோ தக்காளி – 2 பச்சை மிளகாய் – 6 மல்லி கீரை – 1கட்டு எலுமிச்சை பழம் – பாதி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலாத் தூள் – 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1சிட்டிகை இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன் எண்ணெய் – 100 மில்லி உப்பு – 1 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் கோழி கறியில் மிளகாய்த்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக புரட்டி 1/2 மணி நேரம் ஊறவிடவும். 2.பிறகு வெங்காயத்தை நறுக்கிக்கொண்டு, தக்காளி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும். 3.ஒரு கடாயில் பாதி எண்ணெய்விட்டு, மசாலாவில் ஊறிய கோழியை சற்று முறுகலாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். 4.மீதி எண்ணெயை இன்னொரு கடாயில் விட்டு, மீதி இஞ்சி பூண்டு விழுதை போட்டு முறுக ஆரம்பிக்கும்போது நறுக்கிவைத்துள்ளவற்றை போட்டு லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும். 5.பிறகு பொரித்துவைத்துள்ள கோழியை அதில் போட்டு புரட்டி, மீதி உப்பை சேர்த்து கிளறி, அதன் மேல் மல்லி கீரயை நைஸாக அரிந்துப்போட்டு மீண்டும் புரட்டி, 6.இறக்கும் முன் எலுமிச்சை பழத்தை பிழிந்து புரட்டிவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|