|
||||||||
ஃப்ரை ஆலு மசாலா (fry aloo masala) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் தனியா தூள் - 1டீஸ்பூன் மஞ்சள்,சீரக,சோம்பு தூள்கள் - தலா கால் டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி -1 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு. செய்முறை: 1.உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதனை கொதிக்கும் நீரில் போட்டு.சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதித்தவுடன் வடி கட்டி வைக்கவும். 2.பின்பு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மசாலா பொடி வகைகள் அனைத்தும் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். 3.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காயவும் அரை வேக்காடான உருளைக்கிழங்கை போட்டும் ஃப்ரை செய்து,எண்ணெய் வடித்து எடுக்கவும். 4.அதே கடாயில் அரைத்த மசால் விழுதை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.சிறிது தண்ணீர் தெளித்து மசாலா வாடை அடங்கும் வரை வதக்கவும். 5.அத்துடன் ஃப்ரை செய்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.உப்பு சரி பார்க்கவும். 6.மசாலா உருளைக்கிழங்கில் சேர்ந்து வர வேண்டும்.நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான ஃப்ரை ஆலு மசாலா ரெடி. |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|