|
||||||||
குத்து வங்காயி (kuthu vankaya) |
||||||||
தேவையானவை: சின்ன கத்தரிக்காய்-கால்கிலோ வெங்காயம்-4 இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன் கரம் மசாலா-1ஸ்பூன் மிளகாய் தூள்-2ஸ்பூன் தனியா தூள்-1ஸ்பூன் மஞ்சள் தூள்-அரைஸ்பூன் வெண்ணெய்-1ஸ்பூன் கொத்தமல்லி இலை-சிறிது உப்பு-தேவையான அளவு எண்ணெய்-சிறிது செய்முறை: 1.முதலில் வெங்காயத்தை அரைத்து ஒரு பாத்திரதில் எடுத்துகொள்ளவும். 2.பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது,கரம்மசாலா,மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள், வெண்ணெய்,உப்பு ஆகியவற்றை கலத்து வைத்துகொள்ளவும். 3.கத்தரிக்காயை கழுவி நான்காக பிளத்துவைத்துகொள்ளவும்.காம்புடன் இருக்கவேண்டும். 4.அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை ஸ்ட்ஃப் செய்யவும். 5.கடாயில் எண்ணெய் ஊற்றி ஸ்ட்ஃப் செய்த கத்தரிக்காய்களை அதில் ஒவ்வொன்றாக போடவும்.மீதமிருக்கும் மசாலாவை கத்தரிக்காயின் மேல் போடவும். 6.கத்தரிக்காய்களை சிம்மில் வேகவிடவும்.நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாரவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|