|
||||||||
முருங்கைக்காய் கறி (drumstick curry ) |
||||||||
தேவையானவை: முருங்கைக்காய் = அரை கிலோ வெங்காயம் = 1 பூண்டு = 10 பல் சோம்பு = அரை ஸ்பூன் தேங்காய் = கால் மூடி மஞ்சள் பொடி = கால் ஸ்பூன் மிளகாய் பொடி = 1 ஸ்பூன் சீரகம் = அரை ஸ்பூன் எண்ணெய் = அரை ஸ்பூன் உப்பு = தேவையான அளவு செய்முறை: 1.முருங்கைக்காயை அரையங்குல துண்டுகளாக நறுக்கவும். 2.பிறகு தேங்காய் துருவிக் கொண்டு சோம்பு வைத்து மிக்ஸியில் அரைக்கவும். எடுக்கும் போது பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து சதசதப்பாக அரைத்துக் கொள்ளவும். 3.கடாயில் முருங்கைக்காய், அரைத்த மசாலா, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகம், உப்பு, எண்ணெய், அரை கப் தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற விட்ட பின் அடுப்பில் வைத்து வதக்கவும். 4.முதலில் 5 நிமிடம் வதக்கவும். அடுத்து தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் வதக்கவும். காய் வெந்து ஓரளவு எண்ணெய் பிரிந்து சிவக்க வரும் போது இறக்கி விடவும். கறிவேப்பிலை மட்டும் சேர்க்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|