|
||||||||||||||||||
நெத்திலி வறுவல் (nathaly varval) |
||||||||||||||||||
தேவையானவை: நெத்திலி மீன் – 1 /2 கிலோ மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் தனியாத்தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன் எலுமிச்சம்பழம் – 2 எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – 2 கொத்து இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன் செய்முறை : 1.நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மண் போக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 2.ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி ஊற விடவும். 3.ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும். 4.பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|