|
||||||||
வாழைக்காய் பொடிமாஸ் ( banana podimas) |
||||||||
தேவையானவை: வாழைக்காய் - 1 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை எண்ணை - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, வேக வைத்து சற்று ஆறியதும் தோலை உரித்து துருவிக் கொள்ளவும். 2.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். 3.பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்து வதக்கவும். 4.பின்பு துருவிய வாழைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். 5.கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி விட்டு, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் சாற்றையும் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|