|
||||||||
பச்சை காய்கறி மசாலா (vegetables in green masala) |
||||||||
தேவையானவை: கத்திரிக்காய் - 3 அவரைக்காய் - 5 பீன்ஸ் - 6 குடமிளகாய் - 1 பச்சை பட்டாணி - 1/2 கப் வெண்டைக்காய் - 4 வெங்காயம் - 1 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு இஞ்சி - ஒரு சிறு துண்டு பூண்டுப்பற்கள் - 3 பச்சை மிளகாய் - 3 கொத்துமல்லித்தழை - சிறிது தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணை - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை: 1.எல்லா காய்களையும் 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். 2.வெண்டைக்காயைத் தவிர மற்ற காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீரை விட்டு வேக விடவும். 3.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு, சற்று வதக்கிக் கொள்ளவும். சிறு தீயில் வைத்து வதக்கினால், காயும் வதங்கும், நிறமும் மாறாது. 4.பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, தேங்காய் ஆகியவற்றை, தண்ணீர் சேர்க்காமல், சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 5.ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், வெந்த காய்கள் அனைத்தையும் போட்டு, உப்பையும் சேர்க்கவும். 6.ஓரிரு வினாடிகள் நன்றாகக் கிளறி விடவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுக் கிளறவும். 7.அடுப்பை சிறு தீயில் வைத்து, ஈரப்பசை போகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|