LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள் !

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.  ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. 


பேரீச்சம்பழத்தின் மகத்துவம் :


1.தினமும் 2 பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.


2.ஒரு டம்ளர் தண்ணீரில் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.


3.விபத்துகளில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.


4.வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.


5.தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.


6.பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.


7.பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.


8.இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.


9.பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும் போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

by Swathi   on 04 Feb 2013  5 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா... 100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் .. நீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா? சிந்தியுங்கள் ..
மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம் மூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன? -மருத்துவர் செல்வசண்முகம்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்
உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்).. உணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..
பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான  பயன்களும்!! பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்!!
கருத்துகள்
05-Aug-2020 11:26:06 Blogger said : Report Abuse
Super information about dates in tamil https://www.biofact.in/
 
30-May-2019 09:42:27 Mohmudha ajees said : Report Abuse
Enaku pcod problem iruku weight gain aagitan am 24 age married girl 95kg vantan so pls reduce panna tips சொல்லுங்க
 
17-Nov-2018 14:25:02 Manikandan M said : Report Abuse
நியூ
 
03-May-2017 04:38:59 ரஞ்சித் குமார் said : Report Abuse
எனக்கு தொப்பை பெரியதாக இருக்கின்றது . அதனை எப்படி குறைப்பது. நான் அலுவலகத்தில் பணி புரிகிறேன். எப்படி குறைப்பது சொல்லுங்க.
 
01-Oct-2015 04:47:30 ப.கணேசபாண்டி said : Report Abuse
perichampalam சாப்பிடுவதால் ஏற்படும் nanmaigal பற்றிய வுங்களது vilakkam வுன்மையில் வரவேற்க தகுந்தது nandri.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.