ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிக்கும் படம் 'அனேகன்'.
இந்த படத்தில் கார்த்திக், ஜெகன், அதுல் குல்கர்னி, தலைவாசல் விஜய், ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படம் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், 'அனேகன்' படத்தின் கதை கொஞ்சம் கசிய ஆரம்பித்திருக்கிறது.
படத்தின் நாயகன்-நாயகியும் அதாவது, தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் ஒரு தலைமுறையோடு முடிந்துபோய்விடவில்லையாம். நான்கு தலைமுறையாகத் தொடர்வதுதான் படத்தின்கதையாம். இந்த படத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் இருவருக்குமே நான்கு கெட்டப்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|