இங்கிலாந்து இளவரசர் வில்லியம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என அவருக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஹாரியின் தாயான டயானாவின் பெற்றோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது, டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்த இவர் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன். பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் தியோடர் தனது குழந்தையுடன் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.சாதாரணமாக தாயிடம் இருந்து மரபணு, அவரின் குழந்தைக்கு செல்லும். இதன்படி பார்த்தால், எலிசாவின் மரபணு, கேதரீனுக்கும், கேதரீன் மூலம் டயானாவு க்கும், டயானா மூலம் அவரது குழந்தைகள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு வந்திருக்க வேண்டும். எனினும், வில்லியம் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு இந்த டிஎன்ஏ பரவாது. ஏனென்றால், அம்மா வழியில் மட்டுமே இந்த டிஎன்ஏ பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
|