LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF

நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?

உலகில் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் வெறிநாய் கடி பற்றிய விழிப்புணர்வு இன்மையே என்பது வருத்ததிற்குரிய விஷயம். 


எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. 


ரேபிஸ் நோய் குறித்த சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,


ரேபிஸ் மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?


வீட்டில் வளர்க்கும் நாய், சிறிய குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது. நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக "ரேபிஸ்' எனப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. அவை தோல் மற்றும் தசை திசுக்களில் பெருக்கமடைந்து மூளையை அடைந்து இறப்பை ஏற்படுத்துகின்றன. 


காயமடையும் இடத்தைப் பொறுத்து, ரேபிஸ் கிருமிகள் வேகமாக அல்லது மெதுவாக மூளையை சென்று அடையும். அப்போது நோயின் பாதிப்பு உடனே ஏற்படும். கால்கள் எனில் மெதுவாகவும், கைகளில் கடித்தால் வேகமாக மூளையைச் சென்று அடையும். 


வெறிநாய்கடி நேயின் அறிகுறிகள் :


இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இதுதான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறுகி, சுவாசத்தை நிறுத்திவிடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்குப் பயந்துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படுவார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.


நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும். வேகமாக விழுகிற குழாய்த் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவுவது இன்னும் நல்லது.


காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.


காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.


தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 


கடித்தது சாதாரண நாயா, வெறிநாயா என பார்த்துத்தான் தடுப்பூசி போட வேண்டுமா?


கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

 

என்ன செய்யக்கூடாது?


நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. 


திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் கட்டு போட்டு மூடக்கூடாது.


நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும்.


நாய் கடியின் வகைகள் :


வகை 1 : நாயை தொடுதல், காயம் படாமல் தோலை நக்குதல்


மருத்துவம் : தேவையில்லை


வகை 2 : சிராய்ப்பு காயம்,கவ்வுதல்,குறைவான அளவில் ரத்தக்கசிவு


மருத்துவம் : காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி


வகை 3 : ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல்,ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள், நரி, ஓநாய், வவ்வால் கடி


மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து


ஊசிகள் :


1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது


2. ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும் (தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்) 


3. இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில் உள்ள காயதிற்கு கட்டாயம் போட வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும் .


ஒருமுறை தடுப்பூசி போட வேண்டுமா அல்லது தொடர்ந்து போட வேண்டுமா?


நாய்க்கடித்த சிறிது நேரத்திலேயே தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை "0' நாள் என்பர். பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும். 


தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்துவிடும்.


நாய் கடித்தவுடன் அந்த நாயை 10 நாட்களுக்கு நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமா?


கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். எஜமானரின் கட்டளைக்கு நாய் கீழ்ப்படியாது. கண்ணில் பார்க்கும் அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம். 


இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும்.


நாய்க்குத் தடுப்பூசி:


வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும். முக்கியமாக, வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு ரேபிஸ் நோய் தாக்குதல் இருக்காது.

by Swathi   on 26 Mar 2014  55 Comments
Tags: நாய் கடித்தால்   நாய் கடித்தால் செய்ய வேண்டியது   நாய் கடி   ரேபிஸ் நோய்   வெறி நாய் கடி   Veri Nai Kadi   Dog Bite  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ? நாய் கடித்தால் செய்ய வேண்டியது என்ன ? செய்யக் கூடாதது என்ன ?
கருத்துகள்
21-Sep-2020 16:38:03 Ramya said : Report Abuse
Sir enaku onnum week munnadi nayi kadithathu.ellam vaccine poten.irunthalum payama iruku.pls my contact number 9629523611
 
26-Aug-2020 08:59:12 ஜான் said : Report Abuse
Which food I am don't eat
 
31-Jul-2020 10:39:06 சூரியா said : Report Abuse
மூனாவது ஊசி மூனுநாள் களிச்சு போட்டா பிரட்டனையாங் சார்
 
23-Feb-2020 16:30:20 Karthika said : Report Abuse
Sir நாய்கடி தடுப்பூசி ஒரு தடவ போட்டா போதுமா
 
22-Feb-2020 21:56:49 Dharani said : Report Abuse
ஐயா நான் வீட்டில் வளர்க்கும் நாய் எண் ஆள்காட்டி விரலை கவ்வியது நககண்னில் சிறிய அளவில் காயம் அடைந்த நாய்க்கு TT injection போட்டிருக்கு இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்ன செய்வது கண் எரிச்சல் அடைந்த ஆனால் உறங்க முடியவில்லை என்ன செய்வது
 
27-Jan-2020 06:21:44 Mani said : Report Abuse
நாய் கடித்த பெண் உடன் உடலுறவு கொள்ளலமா?
 
25-Jul-2019 11:28:41 asha said : Report Abuse
தயவுசெய்து உடனே பதில் அனுப்பவும்.
 
25-Jul-2019 11:21:49 asha said : Report Abuse
என்னை என் வீடு குட்டி நாயி பல்லால் கீறி விட்டது. டிடி ஒடனே போட்டு விட்டேன். அடுத்து 2 ஊசி சரியான தேதியில் போட்டேன். 3 வைத்து ஊசி போட மறந்து 6 நாள் கழித்து போட்டு கொண்ட்டேன். அன்றே nan veg சப்பிட்டேன். 2 நாள் ஒன்னும் ஆகவில்லை . ஆனால் இப்பொது இரண்டு நாட்களாக துக்கம் வரவில்லை விடியற் காலை தான் துக்கம் வருகிறது . மத்திய நேரம் சாப்பிட உடனே தூக்கம் சொக்கும் ஆனால் கடந்த 2 நாட்களாக துள்ளிக்குட துக்கம் வரவில்லை.கண்ணு எரிகிறது. ஆனால் தூக்கம் வரவில்லை. மன அழுத்தமா உள்ளது . நான் என்ன செய்ய வேண்டும்.
 
22-May-2019 17:00:36 S .Anandaraj said : Report Abuse
சார் . நாய் விளையாடும் போது லேசான நகக் கீறல் பட்டுவிட்டது என்ன செய்ய வேண்டும்?
 
02-Mar-2019 16:53:54 Revathi said : Report Abuse
சார்,நேற்று என் காலில் நகம் கீறல் பட்டது ஆனால் எவ்வித வலியும் ரத்தமும் வரவில்லை TT ஊசி மட்டும் போட்டேன் பயம் மட்டும் உள்ளது பதில் கூறுங்கள
 
28-Nov-2018 13:45:53 Bharathi said : Report Abuse
Sir enaku nai kaditha unarvu ilai aanal keeri irukumonuu Bayathil oosi pottukite innum 1 oosi iruku but en boy frds ku lip kiss panten edhum problem varuma enaku bayama iruku sir rply panunga
 
01-Oct-2018 18:15:19 Chitra said : Report Abuse
En ammavuku Tuesday night dog katithathu but thrusday datela poi oochi potanga eathavathu problem varuma kathithathu oru puppy dog vitula valarpathu pls reply panunga
 
27-Sep-2018 05:24:53 Kathiresan Gopal said : Report Abuse
ஐயா, வணக்கம், எனக்கு ஒரு மாதம் முன்பாக எனது வீட்டில் இருந்த நாய் என் மண்டையில் கடித்து விட்டது. இரத்தம் அதிக அளவில் வெளியேறி விட்டது, ஆனால் சூழ்நிலை காரணமாக அப்போது டிடி இன்ஜெக்சன் போடமுடியவில்லை, மறுநாள் தான் போடமுடிந்தது, அதன்பிறகு மண்டையில் காயத்தை சுற்றி 5 ஊசிகளும், கைகளில் 4 ஊசிகளும் போட்டனர், அதன்பிறகு முறையே 24, 27, 31 மற்றும் அடுத்த மாதம் 21 ம் தேதிகளில் ஊசி போட்டேன். இப்போது என்னவென்றால், கடிபட்ட இடத்தை சுற்றிலும் மந்தமாக உள்ளது, எப்பொழுதும் படுத்துக் கொண்டே உள்ளேன். சில சமயங்களில் சுயநினைவே இல்லாமல் இருப்பதை போன்ற உணர்வு.( ஊசி போட்ட சமயம் மது அருந்திவிட்டேன்) இதனால் ஏதாவது பிரச்சனை இருக்குமா? தங்கள் பதிலை எதிர் நோக்கி...
 
06-Jun-2018 10:55:53 சுபின் sathiya said : Report Abuse
சார் எங்க வீட்ல குட்டி நாய் வளர்க்கிறோம் அது அடிக்கடி கவ்வியது பல் கடியோ காயமோ ஏற்படல...அனால் நக கீறல் ஏற்படுது இதுனால ஏதும் ஆபத்து உண்டுமா ? தடுப்பூசி போடணுமா ? கவ்விய போது அந்த அழுத்தம் அதிகமா தெரியுது ...என்ன பண்ணலாம் னு சொல்லுங்க சார்
 
21-Jan-2018 07:48:39 janani said : Report Abuse
Naatu Naigaluku Mayaka Mathirai irukiratha? Ethanai Mani neram Mayakathil irukkum? sharp aana Teeth ilamal seiya mudiyuma? please rply me sir...
 
06-Jan-2018 18:10:50 கோபி said : Report Abuse
ஐயா வணக்கம் என் மகனுக்கு 3 வயது ஆகிறது தெரு நாயிடம் அவன் விளையாடிக் கொண்டிருந்தன் திடீரென நாய் அவன் பக்கம் திரும்பியது அவன் பயந்து விட்டான் எந்த வித காயமும் இல்லை ஒரு சில கீறல்கள் இருந்தன அவன் விளையாடும் பொழுது ஏற்பட்ட கீறல்களாக கூட இருக்கும் ஆனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது நாய் கடி ஊசி போடலாமா வேண்டாமா இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகிறது. உடனடியாக பதில் அளித்தால் நல்லது.இது ஒரு குழந்தையின் வாழ்க்கை. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் தந்தை.
 
31-Dec-2017 21:34:38 ரவி said : Report Abuse
சார் என் மனைவி ஐ நாய் ஹண்ட்ல ஹவுஸ் நாய் kadi chi டச்சி மை சன் 5 month பேபி பால் பீட் panna லாமா. வேண்டாமா ப்ளீஸ் எமெர்கெனசி சொல்லுங்க
 
28-Oct-2017 04:59:37 jayakanth said : Report Abuse
வெறி நாய் கடித்த மாட்டின் பால் குடித்தால் ஆபத்தா? சரியான மருத்துவம் என்ன ? அவசரம் உடனே தகவல் சொல்லவும் ?
 
24-Oct-2017 08:55:19 சங்கீதஎ said : Report Abuse
ஏன் அண்ணனுக்கு இரண்டு நாட்கள் முன்னாள் நாய் கடித்தது, இரண்டு பற்கள் கொஞ்சமாக பட்டுள்ளது ரத்தம் கொஞ்சம் வந்தது இதனால் ஏதும் விளைவு ஆகுமா? மற்றும் பத்தியம் எப்படி இருக்கவேண்டும் என்று கொஞ்சம் பதிவிடுங்கள் ப்ளீஸ்
 
05-Sep-2017 11:30:43 Indumathi said : Report Abuse
My son 2years 9 months. dog bite in my son right hand,which condition s follow, I don't know,pls tell me my mail ID,food chart also
 
30-Aug-2017 16:54:47 அருள்குமார் கே said : Report Abuse
சார், நேற்று இரவு 12 மணிக்கு அடையாளம் தெரியாத தெரு நாய் ஒன்னு கடிச்சிச்சு , அதோட ஒரேயொரு பல் மட்டும் நல்ல பதிஞ்சி இருக்கு , நான் மறுநாள் மாலை 6மணிக்கு தடுப்பூசி போட்டேன் , நாளை காலை 8 மணிக்கு நாய் கடி ஊசி போட வர சொன்னார்கள் , என்ன நடக்கும் என்று தெரியவில்லை ,என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா , என் மின்னஞ்சல் முகவரிக்கு ,
 
19-Aug-2017 17:40:58 Sarath said : Report Abuse
Sir, Mami kadithu vittadhu nanum hospital poitu vandhuduen ana Enna saptanum Enna sapita kudadhu teriyala ninga koncham sollunga sir
 
31-Jul-2017 04:12:11 Madhu said : Report Abuse
Vanakkam, enga veetil valrukum kutti nai velaiyadumpothu laight ah pal pattueruchu blood varala oosi poda veenduma. Naiku 2 thadupusi pottu eruken
 
24-Jul-2017 18:07:11 Loganathan said : Report Abuse
சார் Ena டாக் கடிச்சிடுச்சு..இணையோட day 3 இணைக்கு ஊசி poturan பட் இவளோ நாள் கசிந்தது பிளட் இப்போ காயம் aaruthu. பட் kaayam aara kotathu னு சொல்ராங்க சோ காயம் அதிகம் சார் பயமா இருக்கு ஊசி போட்டுட்டு thana சார் வரன் காயம் aaruthu nallatha கெட்டதா பட் டௌட் சரி பண்ணுங்க சார் ப்ளஸ் 9585563497 call me sir
 
29-Jun-2017 04:58:53 MOHANRAJ said : Report Abuse
ஐயா வனக்கம் எனக்கு வயது 17 என்னை எங்க வீட்டு குட்டி நாய் என் கையில் கவ்வியது ஆனால் ரத்தம் வரவில்லை பல் பட்ட அடையாலமும் தெரியவில்லை என்ன செய்ய வேன்டும்
 
03-May-2017 00:15:35 baskaran said : Report Abuse
என் மகன் ஆறு வயது . அவனை வீட்டு நாய் கையில் லேசாக கடித்துவிட்டன. நான் GH ல் ஊசி போட்டு விட்டேன். இன்னும் எத்தனை முறை ஊசி போட வேண்டும். அவனுக்கு உணவு என்ன தர வேண்டும். இதற்கு நல்ல தீர்வு கூறவும்.
 
17-Apr-2017 16:20:28 Sudha said : Report Abuse
Sir engagement goat ORU street nai kadithuvittathu
 
13-Apr-2017 10:39:11 jagan said : Report Abuse
நாய் கடித்த பிறகு என்ன உணவு உண்ணலாம் உன்ன கூடாதது என்ன கரி மீன் உண்ணலாமா????
 
09-Apr-2017 00:13:52 latha said : Report Abuse
ஹலோ சார்.நான் லதா... எங்க வீட்ல குட்டி நாய் வளக்குறோம் ..அது என்ன காலுல கடிச்சிடிச்சு பிளட் வந்துச்சு ஆனா அது சின்ன அடித்தான் அது எதாவது இன்னபிக்ஷன் ஆகுமா சார்.ப்ளஸ்ஸ் சொல்லுங்க..
 
09-Apr-2017 00:12:41 latha said : Report Abuse
ஹலோ சார்.நான் லதா... எங்க வீட்ல குட்டி நாய் வளக்குறோம் ..அது என்ன காலுல கடிச்சிடிச்சு பிளட் வந்துச்சு ஆனா அது சின்ன அடித்தான் அது எதாவது இன்னபிக்ஷன் ஆகுமா சார்.ப்ளஸ்ஸ் சொல்லுங்க..
 
28-Feb-2017 04:59:23 ல்.Venkataseshan said : Report Abuse
சார்,நான் நடந்து வரும்போது ஒரு நாய் என் காலில் தனது வாய் பகுதி இடிதித்துவிட்டது ஆனால் எனக்கு கீறலோ கடிக்கவோ இல்லை . ரத்தக்காயமும் இல்லை . அனால் எனக்கு பயமாக இருக்கிறது . இது நடந்து 4 நாட்கள் ஆகிறது. நான் தடுப்பு ஊசி போடவேண்டுமா.
 
13-Feb-2017 02:38:37 ரேவதி said : Report Abuse
என் கணவருக்கு வயது 40க்கு மேல். தோப்பில் கிண்ற்றில் ஒரு நாய்குட்டி விழுந்துவிட்டது.அதை கிண்ற்றில் இறங்கி தூக்க சென்றபொழுது நாய்குட்டி இரு கைகளிலும் பல் பதியும் அளவிற்கு கடித்துவிட்டது.முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது . 5தடுப்பூசியம் போடவேண்டுமா? முழு விவரத்தையும் தெரிவிக்கவும் மேலும் விவரத்தை தெளிவு படுத்தவும். மிக்க நன்றி.
 
13-Feb-2017 02:37:10 ரேவதி said : Report Abuse
என் கணவருக்கு வயது 40க்கு மேல். தோப்பில் கிண்ற்றில் ஒரு நாய்குட்டி விழுந்துவிட்டது.அதை கிண்ற்றில் இறங்கி தூக்க சென்றபொழுது நாய்குட்டி இரு கைகளிலும் பல் பதியும் அளவிற்கு கடித்துவிட்டது.முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது . 5தடுப்பூசியம் பூட்டவேண்டுமா? முழு விவரத்தையும் தெரிவிக்கவும் மேலும் விவரத்தை தெளிவு படுத்தவும். மிக்க நன்றி.
 
04-Feb-2017 12:50:29 kannan said : Report Abuse
நாய் கடித்த பிறகு என்ன உணவு உண்ணலாம் உன்ன கூடாதது என்ன கரி மீன் உண்ணலாமா
 
19-Dec-2016 03:07:27 A.Gnanasekar said : Thank you
நாய் கடித்தால் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது
 
04-Dec-2016 12:45:41 vasanth said : Report Abuse
Sir enna நாய் கடிச்சிடுச்சி இதுக்கு apuram na என்ன la சாப்பிட கூடாது, ட்ரின்க் பண்ணலாமா,na ஜிம் ku போறான் ப்ரோட்டீன் டப்ளேட்ஸ் சாப்டுட்டு இருக்கான் இதுக்கு அப்புறம் அத சாப்பிடலாமா,இல்ல எவ்ளோ டயஸ் கழிச்சி சாப்பிடலாம்,,சென்ட் me ரிப்ளை சூன் sir plz
 
30-Nov-2016 11:41:15 gopinath said : Report Abuse
Sir நைட் போகும் பொது ஒரு நாய் வந்து காலில் கடிச்சிருச்சி ஆனால் பல் இறங்கல லைட்டா கீறல் மட்டும் இருக்கு ரத்தம் வரல ஆநாள் கால் வலிக்குது இதுக்கு ஊசி போடணுமா சார்
 
22-Nov-2016 07:45:47 கோபாலகிருஷ்ணன் said : Report Abuse
வௌவால் கடிக்கு அல்லது பிறாண்டினால் உண்டாகும் காயத்திற்கு என்ன சிகிச்சை ? மற்றும் பத்தியம் ஏதும் உண்டா ? தகவல் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். என் முகத்தில் வௌவால் மோதியதில் இலேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறேன்.
 
15-Nov-2016 04:09:47 saravanan said : Report Abuse
டியர் சார், நன் ஒரு சிறு நாய்க்குட்டியை குளிப்பாட்டினேன் அப்போது திடீரென என் வலது கை ஆல் காட்டி விரலில் நாய் கடித்தது, அந்த நாய் கடித்த 15 நிமிடத்தில் வாயில் நுரை வந்து இறந்து போனது. கரணம் புரியவில்லை இதனால் எனக்கு என்ன சிக்கல் எதற்கு நாய் இறந்தது ..?
 
25-Oct-2016 21:12:31 சிவராம் said : Report Abuse
நாய் தன்னுடயை நகத்தினால் கீறினால் தடுப்பூசி பாேட வேண்டுமா காயம் படவில்லை
 
07-Oct-2016 23:32:12 K.N.BABU said : Report Abuse
Naai kaditthavudan anti rebies injection pottukonden.pun arivittadu infection erukkuma¿
 
26-Sep-2015 16:32:29 விஜி said : Report Abuse
மிகவும் உதவிய இரருக்கு நன்றி.
 
22-Sep-2015 02:38:58 chithu said : Report Abuse
நாய் கடித்த பிறகு சாப்பிட கூடாதவை என்ன?
 
20-Aug-2015 05:44:24 k.meena said : Report Abuse
Nai kadithu injection Pottapin Abathu varuma
 
26-Apr-2015 22:46:33 சு க தங்கபாண்டியன் said : Report Abuse
தடுப்பு ஊசி போட்ட பின் ஆபத்து அல்லது பாதிப்பு ஏதும் வருமா
 
19-Apr-2015 05:01:46 பிரதீப் said : Report Abuse
மிகவும் பயனுல்லா thagaval
 
26-Feb-2015 11:32:19 rajesh said : Report Abuse
Nai kadithu eathanai varudam kalithu pathipu earpadum injection podamal vidal evola nal agum
 
08-Jan-2015 23:54:06 ரமேஷ் kumar said : Report Abuse
குட் நியூஸ் thank யு சார்
 
01-Jan-2015 03:45:50 vignesh said : Report Abuse
சுப்பர் Best
 
15-May-2014 07:13:40 ஸ்ரீ. சரிதா said : Report Abuse
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
 
06-May-2014 05:57:52 Muthukumar said : Report Abuse
சூப்பர் Message
 
27-Mar-2014 10:03:44 குருமூர்த்தி said : Report Abuse
நாய்க்கடி பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாய் கடி பற்றி தெரியாதவர்களுக்கு தெரியபடுத்த வுதவியாக இருக்கும்.நன்றி !
 
26-Mar-2014 12:43:53 சி.மோகன சுந்தரம் said : Report Abuse
நன்றி
 
26-Mar-2014 09:34:24 பழநி said : Report Abuse
மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்.
 
26-Mar-2014 09:24:31 Thamizh said : Report Abuse
Payanulla Pathivu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.