சட்டப்படி குற்றம் படத்தை தொடர்ந்து, ஏறக்குறைய நான்கு வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் டூரிங் டாக்கீஸ்.
ஒரு படம், இரு கதை என வெளிவந்திருக்கும் இந்த படத்தைப்பற்றி விரிவாக பார்ப்போம்....
முதல் கதை :
எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் இந்த கதையின் ஹீரோ...
கதைப்படி, 75 வயதான எஸ்.ஏ.சந்திரசேகரன், தனது 25-வது வயதில், மார்வாடி பெண்ணான பாப்ரி கோசை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எஸ்.ஏ.சியின் அம்மா பச்சைக்கொடி காட்ட காதலியை கரம் பிடிக்க முடிவெடுக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர்களின் திருமனத்திற்காக சர்ச்சில் ஏற்பாடுகள் நடக்கிறது.
திருமண நாளன்று காதலியின் வரவுக்காக அங்கு காத்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், நீண்ட நேரமாகியும் அவள் வராததால் அவளைத் தேடி வீட்டுக்கு செல்கிறார். அங்கு தனது காதலியின் வீடு பூட்டப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, இவர்களது காதல் விவரம் நாயகியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவளை கண்டித்து, ஊரை காலி செய்து போனது தெரிய வருகிறது. காதலி எங்கு போனாள் என்று தெரியாமல் பரிதவிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருகிறார்.
கிட்டத்தட்ட 50 வருடங்களாக தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது வாழ்நாளின் கடைசி தருவாயில் இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு, அவருடைய நண்பன் மனோபாலா மூலமாக தனது காதலி சிம்லாவில் இருப்பதாக தெரிய வருகிறது. தள்ளாடும் வயதிலும், தனது உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், காதலியைத் தேடி சிம்லாவுக்கு புறப்படுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். தனது காதலிக்காக வாங்கிய மோதிரத்தை அவளிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற முடிவில் அவளை தேடி அலைகிறார்.
இறுதியில், எஸ்.ஏ.சி தனது காதலியை கண்டுபிடித்தாரா? கரம் பிடித்தாரா என்பதே முதல் பாதி கதையின் மீதி கதை.
இரண்டாவது கதை :
ஒரு கிராமத்தில் பிரசிடன்ட் ஆகா இருக்கும் ஜெயபாலனும், அவரது மகன் ரோபோ ஷங்கரும் அந்த கிராமத்தில் மணல் கடத்தி முறைக்கேடாக விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மணல் திருட்டை தடுக்க வரும் தாசில்தாரை அவர்கள் மண்ணில் புதைத்து வெய்து கொலை செய்கின்றனர். இந்த கொலையை பற்றி விசாரிக்க தனியார் தொலைக்காட்சியில் இருந்து காயத்ரி, அஸ்வின் இருவரும் அந்த கிராமத்தில் வந்து தங்குகின்றனர்.
இதே கிராமத்தில் வசித்து வரும் தாழ்ந்த ஜாதி பெண்ணான நாயகி சுனுலட்ஷ்மி தாய் தந்தை இல்லாத தனது தங்கையை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஒருநாள் தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ரகளை செய்யும் ரோபோ சங்கரை, சுனுலட்சுமியின் தங்கை திட்டி விடுகிறாள். இதனால் கோபம் அடையும் ரோபோ ஷங்கர் அவளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுகிறார். மேலும் அவள் தற்கொலை செய்துகொண்டதாக ஊரை நம்ப வைத்து விடுகிறார்.
இந்நிலையில் தனது தங்கை தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுல்லால் என்பதை அறியும் சுனுலட்ஷ்மி, கொலைகாரன் ரோபோ ஷங்கரை எப்படி பலி வாங்குகிறாள் என்பதே படத்தின் மீதி கதை!
படத்தில் அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரிது என்றாலும், இரண்டாவது கதையில் பாலியல் சம்பந்தமான காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இளையராஜா இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசையில் தனது ஆளுமையை நிரூபித்திருக்கிறார்.
|