LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சமூகப் பங்களிப்பு

மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...

மருத்துவர்.கோவியுடன்……….. இரா.பொற்செழியன்.

வாழ்க்கையைப் பற்றிய  நமது பார்வையை புரட்டிப் போடுபவர்கள் சிலர்.

92 வயது மருத்துவர்.கோவி எனும் கோவிந்தன் அதில் ஒருவர்.

எழுத்தாளர் , இந்திய விடுதலை மற்றும் வர்க்கப் போராளி  நெடிய அனுபவங்கள் உருவாக்கிய தெளிந்த தமிழ்த்  தேசியவாதி.

சில ஆண்டுகள் இந்திய விடுதலைப் போரில் பங்கு, விடுதலைக்குப் பின் 7 ஆண்டுகள் வர்க்கப்போரில் கடுஞ்சிறை, பின்னர் இன்று வரை 62 ஆண்டுகள் சித்த,ஹோமியோபதி மருத்துவர்.

Glad to meet 92 year old Dr. KOVI in Coimbatore. Participated in Independence Struggle,7 Year imprisonment as revolutionary author of several books is a true Inspiration.Still active in his profession and writing. As Sitha and Homeopathy practitioner says Integrated Medicine is the need of the hour. Thanks to Subramaniam Ayya for arranging an Interview in his home.

பெண்ணினம் தலைமையேற்காமல் சமதர்ம சமூகம் தழைக்காது, திசைமாறிய மொழியும் தேசமும், ஒரு புரட்சியாளனின் வாழும் நினைவுகள் உள்ளிட்ட சில  நூற்களைப் படைத்து தொடர்ந்து எழுதுகிறார். என்னை மிகவும் கவர்ந்த ”மார்க்சியத்தின் பரிணாமமே காந்தியம்” எனும்  நூலில் பல வரிகள் ஒரு வரலாற்றை வாழ்ந்து உணர்ந்தவர் என்பதை தெளிவாக்குகிறது.

இந்திய வரலாற்றில் பொதுவுடைமைப் போராக இருந்தாலும், ஈழ விடுதலைப் போராக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி திரும்பிப் பார்த்து தவறுகளை ஒப்புக்கொண்டு புதிய வழிமுறைகளை  முன்வைப்பது மிக அரிய திறன்.

போராளி வாழ்க்கையின் ஒவ்வொரு   நாளையும், மனிதர்களையும், அனுபவங்களையும் ஒரு திரைப்படம்போல விவரிக்கிறார்.

அய்யாவைப் போன்றவர்களும் களத்தில்  நின்று புதுமைகளைப் படைக்க  நினைக்கும் இன்றைய தலைமுறையினரும் தொடர்புகளின்றி இருப்பது தெரிகிறது. தமிழகத்தில்  நல்லெண்ணம் கொண்டோர் பலரிடையே ஒரு பெரிய தொடர்பு இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர்தான் இவர்களை இணைக்கவேண்டுமெனில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கவேண்டிய தேவை உள்ளது. கணபதியில்  நம்மிடம் பேசிவிட்டு  தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்  நோயாளிகளைக்காண அனாயாசமாக கைவீசி  நடந்து பேருந்தில் ஏறுகிறார்.  மருத்துவ ஆலோசனையில் தினமும் 40 பேர் பயன்பெறுகின்றனர்.எளிய மக்கள் முடிந்ததைக் கொடுத்தால் போதும்.

எந்தப் பாடத்திட்டத்தில் படித்தாலும் கிடைக்காத அறிவும் அனுபவமும் தமிழகத்தில் பலரிடம் உள்ளது பயன்மரமான இவர்களை அழைத்து வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்குப் புகட்டலாமே.

by Swathi   on 11 Aug 2017  0 Comments
Tags: தமிழ் மருத்துவர்   தமிழ் விடுதலை போராளி   சித்த மருத்துவர்   கோவி   மருத்துவர் கோவி   தமிழ் சாதனையார்கள்   Kovi  
 தொடர்புடையவை-Related Articles
சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்) சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)
மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்... மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...
ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள் சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்
ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !! ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !!
அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன் கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை - நிர்மலா ராகவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.