LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பேராசிரியர் மு. இளங்கோவனுக்குத் தமிழ்விக்கி – தூரன் விருது

புதுவையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவனுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூபாய் இரண்டு இலட்சம் பரிசுத்தொகை, சிற்பம், சான்றிதழ் கொண்டது.

கடந்த முப்பதாண்டுகளில் ஒரு கல்வியாளராகவும் ஆய்வாளராகவும் மு. இளங்கோவன் ஆற்றியுள்ள பணிகள் மிக விரிவானவை. தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர் இவர். பாரதிதாசன் பெருமையை வெளிப்படுத்த வெளிவந்த பொன்னி இதழ்களை மீட்டுத் தொகுத்தவர். தமிழறிஞர்களின் வாழ்க்கையினைத் தேடித்தேடி ஆவணப்படுத்தியவர். இசைத்தமிழ் ஆய்வாளர்களை ஆவணப்படுத்தியவர். இவர் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உலக அளவில் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். கணினித்தமிழைப் பரவலாக்கியவர். தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுத்தவர். இணையத்தில் இவர் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரைகள் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமாக அமைந்து, இணையப் பயன்பாட்டாளர்களுக்கு உதவி வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது, சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் விருது, தமிழக அரசின் ஊடகத் தமிழ் விருது உள்ளிட்ட விருதுகளை இதற்கு முன்பாக இவர் பெற்றுள்ளார்.


தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் (https://tamil.wiki/wiki/) சார்பில், பெரியசாமித் தூரன் நினைவாக, ஆண்டுதோறும் தமிழ்விக்கி தூரன் விருது வழங்கப்படுகிறது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதையான பெரியசாமித் தூரனின் பங்களிப்பைப் போற்றும் முகமாக இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது விழா ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் முழுநாள் நிகழ்வாக நடைபெறும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் அறிவித்துள்ளார்.


நிகழ்ச்சி விவரம்:
ஆகஸ்டு 5, 6
ராஜ் மஹால், 321/3, கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை ரோடு, ஈரோடு - 638112

by Swathi   on 06 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம் அதிகரித்து வரும் திருக்குறள் முற்றோதல் சதவீதம்
தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு தஞ்சையில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 14 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 14 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.
திருக்குறள் முற்றோதல் செய்து தஞ்சை பெண் சாதனை திருக்குறள் முற்றோதல் செய்து தஞ்சை பெண் சாதனை
நாடி பரிசோதனை கருவிக்கு காப்புரிமை -நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை நாடி பரிசோதனை கருவிக்கு காப்புரிமை -நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி சாதனை
சந்திராயன்-3 வெற்றிச் சோதனை,மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம் சந்திராயன்-3 வெற்றிச் சோதனை,மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.