LOGO
  முதல் பக்கம்    மற்றவை    வாழ்வியல் Print Friendly and PDF

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் : டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

தண்ணீரும், எரிசக்தியும்தான் எதிர்காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய இருபெரும்சவால்கள் . நதிநீர்இணைப்பு, புதிய தண்ணீர் வழிச் சாலைகள் அமைப்பது இந்த இரண்டு தீர்வுகள்தான் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். அதே போல் கச்சா பெட்ரோல்எண்ணெய்க்கான மாற்று எரிசக்திகளைக் கண்டறிவது எரிசக்திப் பிரச்னையைத்தீர்க்கும். ஆனால் இவற்றை சாதிப்பது சாதாரண விஷயமில்லை.

கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, புதுமை படைக்கும் எண்ணம், இவற்றோடு கூடியஒருங்கிணைந்த சக்தி அதற்குத் தேவைப்படும். முக்கியமாக இந்த சக்திக்குத்தேவை ஒரு கிரியேட்டிவ்வான தலைமை. கற்பனைத் திறன் மிக்க ஒரு தலைமைஇருந்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும்.

இந்தபடைப்புத் திறன் மிக்க தலைமை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான்மூன்று கனவுகள் நனவான அற்புதத்தில் கண் ணெதிரே கண்டேன். விண்வெளித் திட்டம்,  அக்னி ஏவுகணைத் திட்டம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு நகரத்தின் வசதிகளை அளிக்கும் திட்டம் இந்த மூன்று பிரம்மாண்ட கனவுகள் நனவானதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஒரு நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய தலைமைப்பண்புகளை பார்க்கலாம்.

ஒரு தலைவனுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வை என்பது எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் என்பதை இப்போதே சரியாக கணித்து அதை நிறை வேற்றுவது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் ராக்கெட்தொழில் நுட்பத் துறையின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் விக்ரம்சாராபாயைச் சொல்வேன். இந்தத் தொழில்நுட்பம் உலக அளவில் பரவிக் கொண்டிருந்தகால கட்ட மான 1960-களில் இந்தியாவுக்கான அதன் அவசியத்தை உணர்ந்தார் விக்ரம்சாராபாய். இந்திய ராக்கெட் செயற்கைக் கோள் தொழில் நுட்பத் திட்டத்துக் கானதேவையை முன் கூட்டியே உணர்ந்து அரசாங்கத்துக்கு சில திட்டங்களைப்பரிந்துரை செய்தார். ஒரு மாபெரும் படைப்புத் திறன் கொண்ட தலைமைப்பண்புஅவருக்கு இருந்தது என்றால் அதற்குத் தோள் கொடுக்க ஜவஹர்லால் நேரு போன்ற மகத்தான தலைவரும் அப்போது இருந்தார்.

பண்டிதஜவஹர்லால் நேருவும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயும், இந்தியாவின் எதிர்காலப்பாதுகாப்புக்கு ராக்கெட் தொழில் நுட்பம் அவசியம் தேவை என்பதைஉணர்ந்திருந்தார்கள். நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் உள்பட எத்தனையோபிரச்னைகள் இருக்கும் போது இந்த ராக்கெட் ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்றுபலத்த விமர்சனங்கள் எழுந்த காலகட்டத்தில் தங்கள் எண்ணத்தில் உறுதியாகஇருந்தார்கள் இருவரும். அவர்கள் தொடங்கி வைத்த படைப்புத்திறன் மிக்கதிட்டத்தினால்தான் நாம் உலக அரங்கில் செயற்கை கோள் விஞ்ஞானத்தில்பின்னாளில் பிரகாசிக்க முடிந்தது.

இன்றைக்குஉலகமே நம்முடைய செயற்கை கோள் மற்றும் ராக்கெட் துறை முன்னேற்றங்களைக்கண்டு பிரமிப்புடன் வியக்கிறது. நான் சமீபத்தில் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நாசாவில் உள்ள விஞ் ஞானிகள் ""சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை உங்களுடைய சந்திராயன் கண்டுபிடித்திருக் கிறது. பல வருடங்களாகநாங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் எங்களுக்குக் கிடைக்காதவெற்றி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது...''’என்று பாராட்டி னார்கள்.

விக்ரம் சாராபாய் தொலைநோக்குடன் கண்ட கனவுதான் இப்போது நனவாகி இருப்பதாகஎனக்குத் தோன்றியது. இன்று இந்தியா அனுப்பியிருக்கும் ரிமோட் சென்சிங்மற்றும் தகவல் தொடர்பான செயற்கை கோள் டிரான்ஸ்பாண்டர்கள் மொத்தம் 180விண்ணில் வெற்றிகரமாக வலம் வருகின்றன. இந்தியா முழுக்க 30,000கல்விக்கூடங்களும் 375 ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளும் செயற்கை கோள்மூலமாக இணைக்கப்பட்டிருக் கின்றன. இந்த அற்புதங்களுக்கு அடிப்படை, விக்ரம்சாராபாயின் தொலைநோக்குப் பார்வைதான்.

தொலைநோக்குப்பார்வை இருந்தாலும் அதை நிஜமாக்க செயலாற்றும் ஆற்றல் தலைவனுக்குகண்டிப்பாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும்இதைப் போன்ற தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் இருக் கிறார்கள். ஆனால் பலகனவுகள் நனவானது எப்படி? அந்தக் கனவை நனவாக்கும் செயல் வீரர்கள்தலைவர்களாக இருந்ததுதான் அந்த வெற்றிகளுக்குக் காரணம்.

1950-களில்அமெரிக்காவில் இருந்து கோதுமைக் கப்பல் வந்தால்தான் நமக்கு உணவேகிடைக்கும் என்கிற மோசமான நிலை உருவான போதுதான் சி. சுப்ரமணியம் என்கிறஅரசியல் மேதை தொலைநோக்குடன் பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அது அவருடைய தொலைநோக்குப் பார்வை. அதை எப்படிச் செயல்படுத்தவேண்டும் என்பதும் அந்தத் தலைவருக்குத் தெரிந்திருந்தது. 

சிவராமன்ஐ.ஏ.எஸ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் போன்ற மிகச் சிறந்ததலைவர் கள் அவருக்குக் கரம் கொடுத்தார்கள். அவர்களின் திறமைகளை திரு சி.எஸ். பயன் படுத்திக் கொண்டார். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கியது. அதேபோல் வர்கீஸ் குரியனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் செய லாற்றும் திறனால்தான் இங்கே பால் உற்பத்தியில் வெண் மைப் புரட்சி ஏற்பட்டது. ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும் அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
வளைகுடா நாடு  ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1 வளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1
இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில இன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில
நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன் நம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்
The beauty of weddings in Tamil culture The beauty of weddings in Tamil culture
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.